September 16, 2012

நன்றி ஜெயமோகன் ... ஆனால்...!




ஜெயமோகன் அவர்கள் "நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்" என்ற தலைப்பில் தமிழர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய தன் கண்ணோட்டத்தை எழுதியுள்ளார்.



இவர் சொல்வதில் ஏறக்குறைய பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இவ்வளவு கோர்வையாக, தெளிவாக, சரியான மேற்கொள்களைக் காட்டி  அழ்கான வார்த்தை பிரயோகத்துடன் இத்தனைச் சிறப்பாக என்னால்  சொல்லியிருக்க முடியாது. அதனால் தான் அவர் ஜெயமோகன்...நான் வெறும் "மின்மினிப்பூச்சி"


நான் சொல்ல வந்ததை, என் போன்ற சிலர் (பலர்) சொல்ல வந்ததை எங்கள் சார்ப்பில் சொல்லியிருக்கிறார். நன்றி...... ஜெ.மோ. சார்.. ஆனால், தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒட்டுமொத்தமாக இல்லை  என்பதை என்னால் ஏனோ ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

'நக்கல்' , கேலி வகை நகைச்சுவையைத் தாண்டி, மொழிப்பகடிகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் நிறையவே ரசித்து சொல்லாடி வருகிறார்கள். நகைச்சுவையை இயல்பாய், பேசும் வாக்கிலேயே உதிர்த்தும் வருவதுண்டு.  (cliche வகை காப்பியடிக்கும் சொற்களையும் தாண்டி)


சிரிப்புகென தனி "ட்ராக்" தேவைப்படும் திரைப்படகளில் மட்டுமே ஜெ.மோ அவர்கள் சொல்வது போல், நகைச்சுவைக்கென  அஷ்டகோணல் முகமோ, நடையோ, உடையோ, பாவனையோ, பெரும்பாலும் அவசியமாகிப் போகிறது.  நகைச்சுவை "ட்ராக்" என்கிற பாணியைத் தாண்டி, முழு நீள நகைச்சுவை படங்கள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. பாமா விஜயம் , வீட்டுக்கு வீடு வாசப்படி, மணல்கயிறு இப்படி அடுக்கிக்கொண்டே பொகலாம்

உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள்   தனக்கென அருமையான பாணியை கொடுத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டிருந்த "மைக்கேல் மதன காமராஜன்"   நான் ரசித்த மிகச் சிறந்த நகைச்சுவை படமாக முதலிடத்தில் உள்ளது. க்ரேஸி மோகனின் வசனங்களில் பூடக நகைச்சுவையும் மொழிப்பகடிகளின் வகையும் பின்னிப் பிணைந்திருக்கும். பாலச்சந்தரின் சில நகைச்சுவை படங்களும் விதிவிலக்காக இயல்பான நகைச்சுவையுடன் மிளிர்பவை.


எஸ்.வி.சேகர்,  ஒய்.ஜி. மகேந்திரன் , மௌலி முதலியோரும் இயல்பான நகைச்சுவைகளை அள்ளி வழங்கியிருப்பவர்கள். ஜெ.மோ அவர்கள் ஒட்டுமொத்தமாக நகைச்சுவை சினிமாக்களில் இல்லை என்று கூறும் அளவு குறைந்து விடவில்லை என்பது என் எண்ணம்.

ஜெ.மோ சார்...எங்களைப் போன்ற பலரின் எண்ணத்தை மிக அழகாக பிரதிபலித்த உங்களுக்கு கோடி நன்றி. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி வெகு சிலதே இருக்கின்றன என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டீர்கள் போலும்.

சினிமாக்களைத் தாண்டி நாடகமேடைகளில் பல நகைச்சுவை மேதைகள் மிளிர்ந்திருக்கிறார்கள். இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் தேவன், பாக்கியம் ராமசாமி, அகஸ்தியன் போன்ற பலரின் ரசிக்கவைக்கும் எழுத்துக்கள் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளன.  சுஜாதா போன்ற  பன்முக எழுத்தாளர்களின்  கதைகளிலும்  ஊடே இயல்பான நகைச்சுவை ஒளிந்திருக்கும்.  அவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நாம் தான் ரசித்து அங்கீகரிக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேனும் ஒட்டுமொத்தமாக "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு" என்ற பொது அவதானிப்பை பரிசீலித்திருக்கலாம் :)

18 comments:

  1. மீண்டும் உங்களைப் பாக்கறதுல ரொம்ப மகிழ்ச்சி. ஜெ.மோ. என்ன சொல்லியிருக்காருன்னு பொறுமையாப் படிச்சுட்டு வர்றேன். ஆனால் தமிழில் எழுத்துத் துறையிலயும் சரி... திரைத் துறையிலயும் சரி... நகைச்சுவைங்கற விஷயம் இப்பவும் ஆரோக்கியமாத்தான் இருக்குது. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று இவர் தன்னை மட்டும் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு சொல்லியிருப்பாரோ என்றுதான் எனக்குத் தோணுது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கணேஷ்...
      நாளைக்கு உங்க பிறந்தநாளா (கணேஷ் சதுர்த்தி :P )

      என் பதிவுக்கு நினைவு கூர்ந்து வந்தமைக்கு நன்றி.

      Delete
  2. வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. நாம் பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே... அவருடைய இணைப்பு தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. //தமிழில் எழுத்துத் துறையிலயும் சரி... திரைத் துறையிலயும் சரி... நகைச்சுவைங்கற விஷயம் இப்பவும் ஆரோக்கியமாத்தான் இருக்குது.//

    திரு. பால கணேஷ் சார் சொல்லியுள்ள இதுவே என் கருத்தும், ஷக்தி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்... கருத்துக்கு நன்றி.

      நான் ஜெ.மோ அவர்களுடன் பெரிதும் ஒத்துப்போகிறேன்...ஆனால்
      அவர் சொன்ன பொது நகைச்சுவை உண்ர்வு பற்றித் தான் என் கருத்து வேறுபாடு

      Delete
  5. இயல்பான நகைச்சுவை மிளிரும்படி பேசும் உறவினர்கள், நண்பர்களை நான் அறிவேன். நம் பதிவுலகத்திலும் பலர் உண்டு. எதையும் ரசிப்பதில் இருக்கிறது சுவை. உங்கள் கருத்தே என்னுடையதும். நல்ல நகைச்சுவைகள் நெடுக இழைந்திருக்கும் பல படங்களை நானும் ரசித்திருக்கிறேன். அதனால் ஒட்டுமொத்தமாய் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று சொல்லிவிடக்கூடாது. ஜெயமோகன் அவர்களின் பதிவை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு அதைப் பற்றிக் கருத்திடுகிறேன். வெகுநாளைக்குப் பின்னரான பதிவுக்கு வாழ்த்துக்கள் ஷக்திப்ரபா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி மஞ்சரி.... உண்மை தான் நம்மிடையே நகைச்சுவை உணர்வு ததும்பும் பலர் உண்டு.

      Delete

  6. தமிழில் நகைச்சுவை பற்றி எழுத ஜெயமோஹன் ( யார்.? அந்த நாஞ்சில் நாட்டு காண்ட்ராவர்ஷியல் எழுத்தாளரா.? )எதற்கு ?.நகைச் சுவை உணர்வு என்பது வேறுபட்ட அளவு கோல்களால் நினைக்கப் படுகிறது. சிலர் நகைச் சுவை என்றால் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் இதழோரம் முறுவலோடு ரசிப்பார்கள். என் அபிப்பிராயப்படி கேலிசித்திரத்தை ரசிக்கும் மனோபாவம் தமிழர்களிடம் குறைவு. அண்மைய செய்திகள் இதை உறுதிப் படுத்துகின்றன.
    வெகு நாட்களுக்குப் பின் வருகை தருவது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார். வித்தியாசமான கோணம் உங்களுடையது. :) நன்றி.

      Delete
  7. ஆளையே காணோமேனு பார்த்தேன். welcome back.
    அய்யய்யோ, ஜெயமோகனே சொல்லிட்டாரா? இனிமேல் தமிழில் நகைச்சுவை கதி என்னாகும்?

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கு நன்றி அப்பாதுரை....
      ஹி ஹி :)

      Delete
  8. ஜேமோ வின் கட்டுரையை இங்கே சுட்டி படித்தேன்... தமிழர்கள் வறட்சியின் உச்சத்தில் இருபது போல் இவரே நினைத்துக் கொண்டால் நாம் என்ன செய்வது....

    கதை சொல்லிகள் அவர்கள் கதை கேட்பவர்கள் நாம். வணிகத்தை நம்முள் புகுத்துவது அவர்கள்... திணிக்கப் படுவதை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்... இது நன்றாக வரும் துணிந்து எடுங்கள் என்று கதை சொல்லிகள் தான் தயரிபாலர்களிடம் கூற வேண்டும்... உங்களால் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை...தமிழர்களை குறை கூறுகிறீர்கள்

    ஜே மோ சார் உங்கள் அளவிற்கு எனக்கு சினிமா தெரியாது.. ஆனால் நகைச்சுவை தெரியும்... அதை சுவைக்க தெரியும்... ஒரே காமெடியை மீண்டும் மீண்டும் தமிழன் ரசித்து இருந்தால் நாகேஷ் உடன் தமிழ் சினிமா தேங்கி இருக்கும்... சந்தானம் வரை யாரும் வந்திருக்க மாட்டார்கள்...

    கிரேசி மோகன் வசனத்தையும் சுஜாதா வசனத்தையும் எதனை முறை வேண்டுமானலும் ரசிக்கலாம் இது ஆரோகியமான ஒன்று தானே தவிர குறை கூறும் ஒன்று இல்லை....

    தமிழன் - திருவிளையாடல் தருமியின் காமெடியையும் ரசிப்பான்
    திரு திருவென முழிக்கும் சந்தானம் காமெடியையும் ரசிப்பான்

    ReplyDelete
    Replies
    1. //தமிழன் - திருவிளையாடல் தருமியின் காமெடியையும் ரசிப்பான்
      திரு திருவென முழிக்கும் சந்தானம் காமெடியையும் ரசிப்பான்
      //

      :) அருமை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. நீங்கள் கொண்டாடும் (சொல்லியுள்ள பெயர்கள்) அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, அவர்கள் எல்லோரும் பார்ப்பணர்கள் -- அதனால் பார்ப்பணர்கள் மட்டுமே இவர்கள் நகைச்சுவையை ரசித்துவருகின்றனர் (பெரும்பாலும்)

    ReplyDelete
  10. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  11. நன்றி தனபாலன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete