March 02, 2012

மரணத்திற்கு முன் சரணம்



இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.

கீதையில் கண்ணன்

"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்
"  என்கிறார்.


மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே." 

 என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன். 

 அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.

பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.

27 comments:

  1. //பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.//

    அருமை. ஸதாஸர்ர்வ காலமும் அவனையே உள்ளுக்குள் நினைத்திருப்பதே நமக்கு நல்லது.
    மரணம் எப்போது எங்கே எப்படி ச்ம்பவிக்கும் என்று தெரியாததால், தாங்கள் சொல்வது போல நாம் அப்போது எந்த சூழ்நிலை இருப்போம் என்றும் தெரியாததால் சிக்கல் தான். திடீரென கடைசி காலத்தில் கடவுள் நினைப்பு வருவது கஷ்டமே.

    இளம் வயதிலிருந்தே இதில் நல்ல அப்யாசம் வேண்டும்.

    நானும் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் கதையை அன்று கேட்டு மகிழ்ந்தேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்ணபிரான் கதையமுதம் நீங்கள் தினம் கேட்பீர்களா? :) மகிழ்ச்சி.

      Delete
  2. //அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" //

    நல்ல மேற்கோள் இது. கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  3. பரிபூரண சரணாகதி நிலையை அடைய நான் என்கிற விஷயத்தை முதலில் துறக்க வேண்டும் அல்லவா? இங்கே தான் பெரும்பாலோர் தவறி விடுகின்றனர். முழுமையாக அவன் தாள் (மனதில்) பற்றி அவனையே சரணடைந்தவர்களை அவன் நினைத்து சேர்த்துக் கொள்வான் என்பது திண்ணம். அருமையான விளக்கம் ஷக்தி. எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு மெனி மெனி தாங்க்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் கணேஷ், "நான்" ஒழிப்பதே மிக மிக மிக கடினமான காரியம். எப்படியாவது ஒட்டிக்கொண்டு விடும்.

      Delete
  4. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

    ReplyDelete
  5. இறைவனை நினைப்பது என்பது மிகவும் கடினம். சாமான்யமானவனுக்கு ABSTRACT பொருளின் மேல் மனம் செலுத்துவது என்பது NEARLY IMPOSSIBLE. அதனால் எந்த செய்கைக்கும் எதிர்வினை உண்டு என்பது முக்காலும் நிரூபிக்கப் பட்ட விஷயம். ஆகவே நாம் செய்யும் செயலுக்கேற்ப பலன் விளையும் என்னும் விதத்தில் கூறப் பட்டதே “வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் “என்ற வழக்குச் சொல். ஆக எப்போதும் அல்லது முடிந்தவரை நல் வினைகளைச் செய்வோம். நல்ல பலன் அனுபவிப்போம். இம்மையிலும் மறுமை என்றிருந்தால் அப்போதும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்.... செயலின் பலன் நிச்சயம் உண்டு. அதனாலேயே தீமையை காணாதே, பேசாதே பார்க்காதே தத்துவமே :)

      Delete
  6. அப்போதைக்கு இப்பொதே சொல்லி வைத்தேன்...நாராயணா..நாராயணா.

    சிறப்பான விஷயம் பற்றிய பகிர்வு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. இப்படி வார்த்தை வார்த்தையாக அர்த்தம் காணும் வேலையில் இறங்கினால், அப்புறம் அப்படி அர்த்தம் காணுவதே வேலையாகிப் போகும்! அந்த வேளையில் 'அவனை' மறந்து எங்கெல்லாம் இழுத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் போகத் தலைப்படும் மனது.

    அவரவர் விரும்பியவாறு அவரவர் சொல்லியிருக்கின்றனர் என்று கொண்டு, நாம் விரும்புகிறவாறு அவனைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா என்று யோசிக்கும் நேரத்து, மனத்தில் அவனே வந்து அமர்ந்து ஆட்டுவித்து சொற்களை எடுத்துக் கொடுப்பான்! அவன் சொல்லச் சொல்ல, அதை மகிழ்ந்து மகிழ்ந்து நாம் திருப்பிச் சொல்ல..

    பாசுரம் வேண்டாம்; பிரபந்தங்கள் வேண்டாம்; எளிய மொழியில், நம் சொந்த வார்த்தைகளில்..

    இறைவா வா
    இன்பமே வா

    இப்படி இப்படி.. வாராதிருப்பானோ வண்ண வடிவழகன் கண்ணன் அவன்?..

    ReplyDelete
    Replies
    1. ஜீவி......hats off...பல உண்மைகளை எளிமையாக விளக்கிவிட்டீர்களே... நான் சொல்ல வந்ததும் மனதால் சரணடைய வெண்டும் என்பது தான். வார்த்தை வெறும் மனதில் உள்ளதை வெளிக்கொண்டு வரும் விளையாட்டு.....

      மிக மிக சிறப்பான கருத்து. வந்தனங்கள்..... நன்றி

      Delete
  8. இந்த பதிவினை படித்ததும், ஏதேனும் எதிர்மாறாக எழுதி விடுவேனோ எனும் அச்சம் மனதில் தொற்றி கொண்டது. இன்றுதான் காலையில் நினைத்தேன், இனிமேல் இறைவன் எனும் விசயத்திற்கு எதிராக ஒருபோதும் சிந்திப்பதில்லை என்று. இறைவனே கதி என இருப்பதுதான் நமக்கு சௌகரியம் என்றெல்லாம் மனம் சொல்லியது. எத்தனை ஆனந்தம்? மனம் இறைவனிடம் லயித்து கொள்ளும் அந்த சௌகரியத்தை எந்த வாசகத்தில் வைத்து அழகு பார்ப்பது.

    இருப்பினும் இந்த பதிவினை பார்த்ததும் எதிர்மாறாக எழுத மனம் துடித்தது போலும், ஆனால் எந்த ஒரு எதிர்மாறான சிந்தனையும் எழவே இல்லை, எனக்குள் ஆச்சர்யம் கொள்கின்றேன்.

    'ஓம் நமோ நாராயணா' என சொல்லிக்கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம். இனிமேல் இப்படியே இருந்துவிட்டு போகிறேன். ஒவ்வொரு வினாடியும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தால் எந்த தருவாயிலும் அவன் நினைவில் நின்று கொண்டேதான் இருப்பான்.

    ஆண்டாள் பாடுவாளே,

    சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
    பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்:
    பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னேடு
    உற்றோமே ஆவோம்: உனக்கே நாம் ஆட்செய்வோம்;
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    இறைவனை வாழும் நாளிலேயே சரணடையும் எவருக்கும் மரணம் தான் ஏது? ஓம் நமோ நாராயணா. உணர்வு நிலையில் உன்னை உணர்வதும், உணர்விலா நிலையிலும் உன்னை உணர்வதுவும் என எல்லா கணங்களிலும் எம்மில் நீ இருப்பாய்.

    ReplyDelete
    Replies
    1. இறுதிப் பத்தியில் எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள் வி.ஆர்....."உணர்வு நிலையிலும், உணர்விலா நிலையிலும் கூட" மிக்க நன்றி...

      Delete
  9. A person at deathbed has to think of God. Is it possible? What is Saranagathi. A person who surrenders everything to god, need not fear of death and after. But what happens to a persons soul after death. Is there any difference between the happenings to the souls belong to different relegions. Even in Hindu religion,there are followers of several Deities, i.e. Lord Shiva/Vishnu/Ganapathi/Sakthi and so on. Is there any difference of pattern, after death happenings?

    ReplyDelete
    Replies
    1. you might find many answers to such question in katopanishad. Shri Appadurai has been doing an amazing work of explaining it in Tamil at http://nasivenba.blogspot.com/

      check it out!

      Delete
    2. thanks for dropping in muruganandham. bandu, spoke about an apt solution. thanks bandhu.

      Delete
  10. பக்தி என்பதும் புலப்படாத ஒரு வேலி என்று நினைக்கிறேன் (கடவுளைப் போலவே :)
    அந்த வேலிக்கப்பால் என்ன இருக்கிறது என்பதை வேலி தாண்டியவர்களைப் பார்த்து மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. வேலிக்குள்ளே புழங்குவோர் பக்தி என்று சொல்லலாமே ஒழிய பக்தியின் mark அவர்கள் மேல் பதிவதில்லை என்பது என் கருத்து. வேலி தாண்டியவர்கள் எல்லாரையுமே எதையுமே எப்பொழுதுமே கடவுளாகப் பார்க்கிறார்கள். தனியாக ஒரு பொழுதில் ஒரு எண்ணத்தைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.
    கட்டுரையும் பின்னூட்டங்களும் சுவாரசியம். ஜீவி சொல்வது கவர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி....நீங்கள் தான் உபநிஷத விளாக்கங்கள் எழுதுகிறீர்களா...இன்று தான் தெரிந்து கொண்டேன்... மிக மிக நன்றி...

      Delete
  11. பக்தர்கள் நான்கு வகை என்கிறார் பகவான் கீதையிலே...
    அர்த்தார்த்தீ - இகலோக சந்தோசங்களை வேண்டுபவன்... மனை, மக்கள் செல்வம் போன்று.
    ஆர்த்த - உடல் வியாதி, பயம் இவைகளுக்காக வேண்டுபவன்...
    ஜிஜ்ஞாஸூ - மேற்கூறிய யாவற்றையும் பற்றிய அக்கறை இல்லாமல்... பகவானின் பேருண்மையை அறிய ஆவலுடைய... பக்தன்
    ஞானி - மூன்றாம் நிலையை அடைந்தவர்கள் அதன் பிறகு எல்லாவற்றிலும் பகவானையே காண்பார்கள்.. அவர்களின் சுவாசமும் பகவானே அவனையன்றி வேறேதும் இல்லை.... இந்த பிரபஞ்சம் அவனே என்றும், அவனில் பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தில் அவனையும் காண்பவர்கள்...
    ஆசைகள் அனைத்தும் அறுக்கப் பட்டவர்கள்.... வாழும் முக்தர்கள் அழைப்பிற்காக காத்திருப்பவர்கள்.....

    இப்போது நாம் ஒவ்வொருவரும் எந்த நிலையிலே இருக்கிறோம்?
    வேதாந்தம் கூறுவது எல்லோரும் அமரர் (ஞானி) ஆக முயல்வது... அதை தான் நாம் அறிந்ததோ அறியாமலோ செய்து கொண்டு இருக்கிறோம்...
    புல்லாய், புழுவாய், மரமாய், பறவை, விலங்குகளாய்... இப்படிப் பலப் பிறப்பு எடுத்து அரிய மானிடப் பிறப்பை எடுக்க சர்வ சதாக் காலமும் பிரம்மதேவனையே பணிந்து போற்றி அவனின் கருணையால் இந்த மானிடப் பிறவி.... அதன் பிறகு அவனை மறந்து இப்போது மகாவிஷ்ணுவை போற்றுகிறோம் இகலோக சுகத்திற்கு... அடுத்து நாம் போக வேண்டியது யாரிடம் சிவனிடம்.. இருந்தும் இருவரும் ஒருவரே என்பது தான் நமக்கு பெரியவர்கள் கூறியது.. ஆக யார் என்பதைவிட என்ன கேட்கவேண்டும் என்பது தாம் நாம் இப்போது முடிவெடுக்க வேண்டியது.

    ஆன்மா என்பது சுதந்திரமானது அது அதனின் பிறப்புரிமை என்கிறது வேதாந்தம்... அது விழிப்பது என்பது அவனின் அருளாலே... அதனாலே அவனின் அருளைப் பெற அவனிடம் அதை மட்டும் வேண்டுவதே சாலச் சிறந்தது...
    காரணம் அவனே சொல்கிறான் நீ எதை வேண்டுகிராயோ அதுவாக நீ ஆவாய் என்று... ஆக என்ன வேண்டும் என்பதைக் கேட்ப்போம்... அது வாழும் போதே நடக்கட்டும், ஆன்மா வேறு ஒரு சட்டையைப் போடும் முன்னமே இந்த உடலில் இருக்கும் போதே அதை பெற வேண்டும் என்றுக் கேட்போம்.... எதைச் சொல்லி கேட்கிறோம் என்பது அல்ல... எப்படி கேட்கிறோம், அது சாதாரணமாக நமக்கு தெரிந்த பாஷையில் நடையில் கேட்டாலே போதும்... ஆனால் உள்ளன்போடு முழு நம்பிக்கையோடு கேட்க வேண்டும்..
    முப்பது பாடல்களையும் பாடியும் கண்டுக் கொள்ளாதபோது நூற்று நாற்பத்து மூன்று பாடல்களைப் பாடினால் ஆண்டாள்.. அவள் அதற்காகப் பிறந்தவள் தான் இருந்தும் எளிதில் கிடைக்கவில்லை... ஆத்மார்த்தமாக கேட்கவேண்டும்...

    மரணம் என்பது உடலுக்கு மாத்திரமே இந்த உடல் பயனில்லை என்று முடிவானதும் வேறு உடலை தேடித் போகிறது... அதை நிறுத்த... கனிந்து, கசிந்துருகி, தாயாய், தந்தையை, நண்பனாய், காதலனாய் மன்றாடி அவனின் அருளால் வாழும் போதே ஒளிபெற்று அவனை அடைவதேச் சாலச் சிறந்தது.... உன்னைச் சரணடைந்தேன்... உன்னையல்லால் வேறேதும் வேண்டாம் கண்ணா!!! என்றால் போதும். இபோதே ஆரம்பிப்போம்... அது அந்தி காலத்திலாவது வேகம் பெறட்டும்... அவனருளால் கைகூடட்டும்.

    நல்ல சிந்தனை, இந்த சிந்தனை வருவதே அந்தப் பாதையை தூரத்திலே பார்த்தமாதிரி தான்... நன்றி ஷக்தி.

    ReplyDelete
    Replies
    1. இப்போதே ஆரம்பிப்போம்....ஆம்...உண்மை தான்....மிக மிக நன்றி. உங்கள் ஒவ்வொரு கருத்தும் அக்ஷர லக்ஷம். நான் மிகவும் எதிர்பார்ப்பது உங்கள் விலாவாரியான கருத்து :)

      Delete
  12. நன்றி வை.கோ சார், கணேஷ், ராம்வி, முருகானந்தம், பந்து, ஜீவி, ஜி.எம்.பி சார், தமிழ்விரும்பி, வி.ஆர் மற்றும் அனைவருக்கும்.

    ReplyDelete
  13. தலைப்பே அருமை ஷக்தி எழுதிய விஷயங்கள் ரொம்பவே சிந்திக்கவைக்கிறது அற்றது பற்றெனில் உற்றது வீடு என்றார் நம்மாழ்வார். சரணாகதியைப்போல உன்னதம் ஏதுமில்லை. தன்னைச்சரணடைந்தவரை இறைவன் ஆட்கொள்ளாமல்போவதுமில்லை.

    ReplyDelete
  14. "தீயவற்றைக் கருவறு
    நல்லவற்றை சிரம் தாங்கு"

    பக்தி எனும் மார்க்கத்தால்
    போகின்ற வாழ்க்கை பயணத்தில்
    தெளிவான புலப்பாடுகள்
    நம்மைத் தெளிவாக்கி விடுகின்றன...

    ஏற்றுக்கொள்ளும் பக்குவமும்..
    தான் என்ற அகந்தையும் ஒழித்தால்
    அடைந்திடலாம் பெருவடி...

    ReplyDelete
  15. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்... துக்ளக்கில் வரும் பாகவதம் படிக்கிறீர்களா ??

    ஆலாசியம் மிக அருமையாக சொல்லி உள்ளார்

    ReplyDelete
  16. தமிழ்ப் பத்திரிகைகள் வாங்குவதில்லை எல்.கே...

    வாருங்கள் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி...

    ReplyDelete