March 02, 2012

திரையிசைப் பயணங்கள் (4) (சும்மா பொழுது போகாம)

படம்: காற்றுக்கென்ன வேலி
பாடல்: ரேகா ரேகா காதலென்னும் வானவில்லை
பாடியவர்கள்: ஜாலி ஆப்ரஹாம், பி.சுசீலா
இசை: சிவாஜி ராஜா
நடிப்பு: ராதா, மோகன்

விவிதபாரதியில் பள்ளி செல்லும் முன் கேட்ட எண்ணில் அடங்கா அருமைப் பாடல்களில் இதுவும் ஒன்று....

ரேகா ரேகா ரேகா ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
ராஜா ராஜா ராஜா ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்

பூ போல உன் மெனியின் புதுவாசம் மயக்கம் தரும்
பனி போல் நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

இளங்காலைப் பொழுதாக வா புதுராகச்சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனியாடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
......
***********

//
காதலென்னும் வானவில்லை கண்டேன்  நீ பார்த்த பார்வையில்
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்
//

சுவை அல்லது ரசம் அத்தனையும் காதல் கற்பிக்க வல்லது. என்னென்ன ரசங்கள்? கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் காதல் மட்டுமே கற்பிக்க வல்லது.

அந்த சுவைகளை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே? காதல் என்ற வானவில் தொடுத்து நீ பார்த்த பார்வையில் என்னுள் பல சுவைகளை எழுப்பியது, அதனால் நானும் பலவண்ணம் கொண்டேன்.

இன்னும் சில மறைபொருள் இருக்குமாறும் எழுதியிருக்கிறார் கவிஞர்...
அதாவது, காதலிக்கும் வரை black and white ஆக சுமாராக தெரிந்த சுற்றம்,
சொந்தம், தெரு, மாடு, கன்னுகுட்டி, கல்லூரி, வாத்தியார் எல்லாமே
மனதில் தோன்றும் பற்பல வண்ணத்தில் கலர்ஃபுல் ஆகி விடும்....


வானவில் போல் எப்படி என்னுள் பல வண்ணம் எழுந்தது தெரியுமா? எல்லாம் நீ செய்த ஜாலம், அதனால் என்னுள் விளைந்த ஆசைகளல்லவா அத்தனை வண்ணம் கொண்டது!!

//இளங்காலைப் பொழுதாக வா,  புதுராகச்சுவையாக வா//

அதெல்லாம் சரி...ஏன் மத்தியானம், மாலை எல்லாம் சொல்லலை? மயக்கும் மாலையும் இனிக்கும் இரவாக அல்லவா காதலன் வரவேண்டும்!?!?....இங்க ஏன் இளம் காலைப் பொழுதாக வரவேண்டுமாம்?

இளங்காலை பொழுதில் நம்பிக்கை, நிறைவு, திருப்தி, புத்துணர்ச்சி, பொலிவு எல்லாம் நிறைந்திருக்கும். என் வாழ்வின் அங்கமான நீயும் என்னுடைய வாழ்வில் இளங்காலைப் பொழுதாக வரவேண்டும். அது மட்டும் போதாது. இதுவரை நான் பாடிய சுவை, ராகம் வேறு. இன்று முதல் உன்னுடன் பாடவிருக்கும் புதுராக மோஹனம், இதுவரை பாடாதது.


//
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது
//

இப்படி காதலும் ஆசையும் பொங்க காதலன் கூறும் விண்ணப்பத்தில் இவள் தேவை அதிகரித்து விட்டதாம். தேமே என்று சும்மா இருந்த மனசை கெடுப்பது என்பது இது தான் போலும், தேவை ஒன்று இரண்டு என இருந்தது, நூறாகி, அவனது தேவை இவளது தேவையாக மாறிவிட்டதால் மலர் போன்ற மென்மையான குளுமையான மெனி, சென்னை வெய்யிலாக கொதிக்க ஆரம்பித்து விட்டதாம்.

(ரொம்ப முக்கியம்.... இலக்கிய சந்தப் பாடலுக்கு பதவுரை பொழிப்புரையா வேறையா என்று தக்காளி முட்டை எரிவதற்குள் ஓடிவிடுகிறேன்)

14 comments:

 1. அருமையான பாடலும் விளக்கங்களும்.பாராட்டுக்கள்.

  //(ரொம்ப முக்கியம்.... இலக்கிய சந்தப் பாடலுக்கு பதவுரை பொழிப்புரையா வேறையா என்று தக்காளி முட்டை எரிவதற்குள் ஓடிவிடுகிறேன்)//

  ஹா ஹா ஹா ! ;))))))

  ReplyDelete
 2. தக்காளி என் கையில் கிடைத்தால் ‘அப்படியே சாப்பிட்டு விடுவேன்’; முட்டையை கண்ணாலும் பார்க்க மாட்டேன், கையாலும் தொட மாட்டேன்.

  அதனால் எனக்காக நீங்கள் ஓடவேண்டாம், ஷக்தி.

  ReplyDelete
 3. ஹி ஹி நன்றி வை.கோ சார்... தக்காளியை எரிஞ்சா நாங்களும் ரசம் செய்து சப்பிடுவோம். எனக்கும் தக்காளி மட்டும் போதும். முட்டையை என் மேல் படுவதற்குள் தான் ஓடிவிடுவேனே.... lol

  ReplyDelete
 4. சில பாடல்களின் இசையமைப்பாள்ர்கள் நமக்குத் தெரியாதவர்களாக இருப்பார்கள். இப்பாடலுக்கு IR இசை என்று நான் இதுவரை நினைத்திருந்தேன்.

  ReplyDelete
 5. இந்தப் பதிவு என் டாஷ்போர்டில் ஏனோ தெரியவில்லை. இப்போது தான் பார்க்கிறேன் ஷக்தி. நானும் பள்ளி நாட்களில் கேட்டு மிக ரசித்த பாடல் இது. சிவாஜிராஜா என்ற இசையமைப்பாளர் அருமையான இசை தந்திருந்தார். அப்புறம் எங்கேயோ காணாமல் போய்ட்டார். உங்களுக்கும் பிடிச்சிருந்ததுன்றதுல சந்தோஷம், இது மாதிரி இன்னும் சில பாடல்களை உங்க (அழகான) விளக்கத்தோட தாங்க... ஒரு ரசிகன் காத்திருக்கேன்.

  ReplyDelete
 6. அருமையான பாடல். காற்றுக்கென்ன வேலியில் இன்னும் இரண்டு அருமையான பாடல்கள் உண்டே. கேட்டிருப்பீர்கள். "கடல்நீரிலே தன் மீனை தேடினான்... பெருங்காட்டிலே தன் மானை தேழினான்... " மற்றும் "சின்ன சின்ன மேகம் என்னை தொட்டு போகும். நினைவுகள் பூவாகும்"

  ReplyDelete
 7. பள்ளி செல்லும் காலங்களில் கேட்ட பாட்டு. அந்த வயது செய்யும் மாயம் இது. இந்த ரசிப்புத்தன்மை அந்தக் காலத்தில் இருந்ததா.? பாடல் எழுதியவர் கூட இவ்வளவு அர்த்தங்களும் சுவையோடும் எழுதி இருக்க மாட்டார். மனம் லயித்து அனுபவிக்கும்போது எண்ணாத பொருள்களும் எண்ணங்களும் தோன்றும். ரசிப்புக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அந்த வயது மாயம்....முற்றிலும் உண்மை :D ....

   அந்த காலத்தில் பாடல் புரியவே இல்லை... :))))) காதல் என்றால் சிரிப்பு வரும், சிறு கற்பனைகள்....சில உண்ர்வுகள்..........அப்புறம் இசை...இதைத் தவிர என்ன புரிந்தது :))))))))))

   ரொம்ப நன்றி சார்....உணர்வுகளை அழகாக புரிந்து பதிலிடுகிறீர்கள்... :)

   Delete
 8. இந்த படம் கேள்விபட்டது இல்லை, பாடலும் கேட்டது இல்லை. :)

  நல்ல ரசனையும் அதனுடன் எழுந்த சிந்தனையும்.

  ReplyDelete
 9. ஹி ஹி...நன்றி கணேஷ், வி.ஆர், ஜி.எம்.பி சார், தமிழ் உதயம் ... :)
  பல அரிய பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ....

  ReplyDelete
 10. அந்த வயது மாயம்....முற்றிலும் உண்மை :D ....

  அந்த காலத்தில் பாடல் புரியவே இல்லை... :))))) காதல் என்றால் சிரிப்பு வரும், சிறு கற்பனைகள்....சில உண்ர்வுகள்..........அப்புறம் இசை...இதைத் தவிர என்ன புரிந்தது :))))))))))

  ரொம்ப நன்றி சார்....உணர்வுகளை அழகாக புரிந்து பதிலிடுகிறீர்கள்... :)

  ReplyDelete
 11. தக்காளி முட்டை ரெடிம்மா கண்ணு..சரணம் மரணம் பதிவைப்படிச்சிட்டு இங்க வந்தா...:):):)

  ReplyDelete
 12. http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.html

  shakthi ஒரு தொடர்பதிவினை எழுத இந்த சுட்டில உன்னை அழைச்சிருக்கேன் அவசியம் வா நன்றி

  ReplyDelete
 13. ஹிஹி ஷை...அதுக்குத் தான் உடனே அந்த பதிவை பொட்டுடுடேன் :))))))))

  ReplyDelete