March 26, 2009

தேகம் யாவும் தீயின் தாகம்



உடலோடு உறவாடும் உனக்குத் தினம் தினம் மோகமுள்
உணர்வுகளால் உறவாட முயலும் எனக்கு தேகமெங்கும் முள்
பழுதுபட்ட தராசுகளால் முடித்துவைக்கப்பட்ட உறவுகள்
தவறான தீர்ப்புக்கு பலியான தூக்குக்கைதிகள்


உன் இதயம் நொறுங்கும் போதெல்லாம்
காதுகளை அறுத்துக்கொள்ளத் துடிக்கிறேன்
என்னையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்து
உன்னையே உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு
என்றேனும் நான் இரங்கக்கூடும்


இரங்கி இசைந்து இச்சைக்கு இணங்கி
உடலில் உயிரை நிறுத்தும் அந்த ஒரு கணம்
நொடிப்பொழுது தேகம் பூக்கப்போகும் அந்த ஒரு கணம்
நீ சிந்தப்போகும் புன்னகைக்கு விலையாக
என்னைத் துறக்கப்போகும் அந்த ஒரு கணம்
உனக்கும் எனக்குமான கணக்கு சரிசெய்யப்படலாம்
அதிவேகமாய் மேலும் கீழும் ஆடிய தராசு,
நியாயத்தை அன்று நிலை நிறுத்தும்.
அதுவரை...பொறுத்திரு.

9 comments:

  1. நல்லா இருக்குங்க..
    இப்பெல்லாம் எங்க இருக்கீங்க? ரொம்ப நாளாச்சி உங்க கூட பேசி..


    நீங்க மரத்தடி குழும ஷக்திப்ரபா தானுங்களே ??

    அன்புடன்
    சீமாச்சு..

    ReplyDelete
  2. அஹா வாங்க சீமாச்சு :D

    அதே ஷக்திப்ரபா தான்.
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நல்லா இருக்கிங்களா? வீட்டில் எல்லோரும் நலமா?

    அன்புடன், ஷக்தி

    ReplyDelete
  3. நல்லா இருக்கு.


    //உடலோடு உறவாடும் உனக்குத் தினம் தினம் மோகமுள்//

    //என்றேனும் நான் இரங்கக்கூடும்
    இரங்கி இசைந்து இச்சைக்குஇணங்கி//

    இரண்டும் முரண்படுகிறது போல் இல்லை.

    //என்னையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்துஉன்னையே உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு//

    இருவருக்கும் அன்பு சரி சமமாய் இருக்கும்போது எப்படி:-

    “உனக்கும் எனக்குமான கணக்கு சரிசெய்யப்படலாம்”

    சற்று விளக்குங்களேன்.

    நன்றி.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி.

    ////இரண்டும் முரண்படுகிறது போல் இல்லை.//

    அதாவது இதுவரை இரங்க வில்லை. என்றேனும் இரங்கக் கூடும் என கூறுகிறாள் :? அப்படி இரங்கும் நாள் இசைந்து இச்சைக்கு இணங்கி, என்று தொடர்கிறது. I didn't put it across well I supp.


    ////////என்னையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்துஉன்னையே உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு//

    இருவருக்கும் அன்பு சரி சமமாய் இருக்கும்போது எப்படி:-

    “உனக்கும் எனக்குமான கணக்கு சரிசெய்யப்படலாம்”

    சற்று விளக்குங்களேன்.///

    சரிசமமான ஆசை/காதல் இல்லை என்பதால் தானே அவ்வரிகள்.

    ஆண்மகன் ஒருவன் "இவளையே உயிராய் உடலாய் உணர்வாய் சிந்தித்து
    'தன்னையே (அவனை)' உருகுலைத்துக் கொள்ளும் பக்திக்கு" she feels guilty. She hence wishes, "someday I may actually become urs, that day கணக்கு சரிசெய்யப்படலாம். (இதுவரை கணக்கு அல்லது தராசு சரிந்தே இருக்கிறதாம்)

    I think I didn't come clear :|

    I am happy someone actually reads my scribbles and asks me explanations :D

    thankyou once again for taking interest in discussing the same :D

    regards,
    Shakthi

    ReplyDelete
  5. ஓகே மேடம்.லேட்டா வந்ததுக்கு
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. மானுடம் பேசி மாயையாய் காட்சி ...

    ReplyDelete
  7. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி :)

    ReplyDelete
  8. கவிதையை நன்கு புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது.

    இதற்கு விளக்கம் கேட்கவோ விளக்கம் கொடுக்கவோ இயலாது என்பதையும் நன்கு உணர முடிகிறது.

    தலைப்பிலேயே [ஆணின் மேல் உள்ள இரக்கத்துடன் கூடிய பெண்ணின் உணர்ச்சிகள்]எல்லாம் அடங்கி விட்டதே!

    விளக்கமே இனி தேவையில்லை.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  9. கருத்துக்கு நன்றி vgk sir :)

    ReplyDelete