August 11, 2022

Trust in your guru, trust in god, trust in your path and yourself - தெய்வத்தின் குரல் (volume 6)

ஆரம்பத்திலிருந்து லேசாக இருந்து அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக வலுப்பட்டுக் கொண்டுவந்த மோக்ஷ ஆசையை நன்றாக புத்தி பூர்வமாக, மனப்பூர்வமாகத் தீவிரப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றாகிறது.

.
‘நமக்காவது பந்த மோக்ஷமாவது, ஸாக்ஷாத்காரமாவது?’ என்று அவநம்பிக்கை உண்டாகிற தினுஸில் ஸாதனையில் அவ்வப்போது சறுக்கிவிட்டுக் கொண்டிருக்கும். அந்த மனப்போக்குக்கு இடம் கொடுக்கப்படாது.
.
அதுமட்டுமில்லாமல் ‘விடுபட்டு முடியும்; ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுவே தாபமாக நாம் விடாப்பிடி பண்ணினால் அது சிக்கிக் கொள்ளாமல் போகுமா? நம்முடைய ஏற்ற இறக்கங்களை குரு ப்ரஸாதம் ஸமாளித்து ஸரிப்படுத்தாதா என்ன?
.
இத்தனை தூரம் வந்துவிட்டு வழிகெட்டுப் போக குரு ப்ரஸாதம் விடாது. ஆகையினாலே நம்மாலேயும் [விடுபட] முடியும், முடியும் – நாம் மட்டும் அதே தாபமாக இருந்துவிட்டால்’ என்ற அபிப்ராயத்தோடு முமுக்ஷுதையைப் பயிற்சி செய்ய வேண்டும்; பயில வேண்டும்.
.
Chapter: ஆன்மியமான நால்வகைப் படை (volume 6)
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment