July 16, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (700-725) (With English meanings)

Image result for Sadashiva and Goddess



விபூதி விஸ்தாரம்


தேஷ காலா பரிஸ்சின்னா;
சர்வகா;
சர்வ மோஹினீ;
சரஸ்வதீ;
ஷாஸ்த்ர மயீ;
குஹாம்பா;
குஹ்ய ரூபிணீ;
சர்வோபாதி வினிர்முக்தா;
சதாஷிவ பதிவ்ரதா;
சம்ப்ரதாயேஶ்வரீ;
சாது ;
ஈ;
குரு மண்டல ரூபிணீ;
குலோத்தீர்ணா;
பகாராத்யா;
மாயா;
மதுமதீ ;
மஹீ;
கணாம்பா;
குஹ்யகாராத்யா;
கோமலாங்கீ;
குரு-ப்ரியா;
ஸ்வதந்த்ரா;
சர்வதந்த்ரேஷீ;
தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ ;

()
தேஷ = தேசம் - பிரதேசம் - வெளி
கால = காலம்
அபரிச்சின்னா = எல்லைக்கு உட்படாத

#701 தேஷ கால அபரிச்சின்னா = பிர(தேசம்) காலம் முதலிய எல்லைகளுக்கு உட்படாதவள். 

#702 சர்வகா = எங்கும் நிறைந்திருப்பவள் / சர்வவியாபி
(701 ஆம் நாமத்தின் நீட்சி)

#703 சர்வ மோஹினீ = அனைத்தையும் (ஜட-ஜீவராசிகள்) வசிகரிப்பவள் - மயக்குபவள் (அனைத்தையும், அனைவரையும் மாயையின் பிடியில் வைத்திருப்பவள்)

#704 சரஸ்வதீ = ஞானத்தின், அறிவின் இறைவடிவான ஸ்ரீ சரஸ்வதி-தேவி
(சரஸ்வதி வடிவானவள்)

()
ஷாஸ்த்ர = மதக்கோட்பாடுகள், வழிமுறைகள் -வேத விஞ்ஞான விளக்கங்கள்
மயீ =  உள்ளடக்கியிருத்தல்

# ஷாஸ்த்ர மயீ = சாஸ்த்திரங்களின் உருவகம் - சாஸ்திரங்களால்
ஆனவாள் - சாஸ்திர-மயமானவள்
 
()
குஹா = முருகக் கடவுள் - சுப்பிரமண்யர் - குகன்
அம்பா = அன்னை

#706 குஹாம்பா = (குகனாகிய) முருகக் கடவுளின் அன்னை. *

()
குஹா = மறைக்கப்பட்ட - ஒளிக்கப்பட்ட - குகை - இதயம் - ரகசியமாக இருப்பது

#706 குஹாம்பா = இதயக் குகையினுள் வசிக்கும் அன்னை *

( பந்தப்பட்ட ஜீவனிடமிருந்து மறைந்திருக்கும் சுத்த சைதன்யமாக விளங்குபவள் )

* ( நாமம் 706க்கு இரு வகையாக பொருள் பிரிக்கப்பட்டிருக்கிறது ) 

()
குஹ்ய = ரகசியமான - மறைந்திருக்கும்

#707 குஹ்ய ரூபிணீ = மர்மமானவள் ; மறைபொருள் நிலை கொண்டவள் (அனைவராலும் அறிய முடியாத)

()
சர்வ = அனைத்து
உபாதி = கட்டுப்பாடு - தடை
வினிர்முக்தா = விடுதலை பேறுதல்

#708 சர்வோபாதி வினிர்முக்தா = எவ்வித தடை தளைகளும் இல்லாதிருப்பவள்- அதற்கு அப்பாற்பட்டவள் (அதனால்  பாதிக்கப்படாதவள்)

()
சதாஷிவ = சிவபெருமானின் இன்னொரு சிறந்ததொரு வடிவம்
பதிவ்ரதா = பதிவிரதை - பத்தினி

#709 சதாஷிவ பதிவ்ரதா = சதாசிவனின் தர்ம பத்தினி

()
சம்ப்ரதாய = சம்பிரதாயங்கள், ஆசார அனுஷ்டான பழக்க வழக்கங்கள்
ஈஶ்வரீ = ராணி - ஆளுபவள்

#710 சம்ப்ரதாயேஷ்வரீ = வழமையான   பழக்க வழக்கங்களை,  சமய கோட்பாடுகளை, போஷித்து,  ஆட்சி செலுத்தும் அதிபதி.

#711 சாது = சாது ie யோகி *

(தெளிந்த அமைதியும், சீர்-நோக்கும் சம நிலையும் கொண்ட ஞானி)


#712 ஈ =  ஈ -கார பீஜா மந்திரத்தை பிரதிபலிப்பவள் *

( * "ஈ"காரம் தேவியின் காமகலா பீஜம். ஈ-காரம், பேரண்டத்தினுடைய சிருஷ்டிக்கும் சித்தியுடன் (creation) தொடர்புடையது.  )

( For more details please read related links

(சில விளக்கங்கள் "சாத்வீ" என்று சேர்த்து பொருள் அளிக்கின்றன. வேறு சில, 'சாத்வீ' எனும் நாமம் முன்பே பூஜிக்கப்பட்டிருப்பதால் ( நாமம் - 128) , சாது மற்றும் ஈ (ஈ-காரம்) என்று பிரித்து  பொருள் கூறுகின்றனர்)

()
மண்டல = பாதை (வழி) - திரள்

#713 குருமண்டல ரூபிணீ = குருபரம்பரையின் (வம்சாவளி)  வடிவானவள்- அதன்  உருவகம் (ஆச்சார்ய அல்லது மதகுருக்களின் பரம்பரை)

()
குல = குழு - சமூகம் - கூட்டம்
தீர்ணா = தாண்டியிருத்தல் - அப்பாற்படுதல்

#714 குலோத்தீர்ணா =   குறுகிய வட்டத்தினுள் தன்னை கட்டுப்படுத்தபடாதவள் (எல்லைகளற்றவள்) * 

* குல என்னும் சொல் பல விதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. யோக வழிபாட்டு முறையின் படி "புலன்களின் கூட்டு" என்ற அர்த்தமும் கொள்ளப்படுகிறது. அதனால் இந்நாமத்தை புலன்களுக்கு அப்பாற்ப்பட்டவள் என்று விளங்கிக்கொள்ளலாம். எவ்வகையில் பொருள் கொண்டாலும், "எல்லைகளற்று பரவியிருப்பவள்" என்ற ஆழ்பொருள் நிலைத்திருக்கிறது. நிர்குண பிரம்மத்தின் நிலைபாட்டிலிருந்து பேசப்படும் நாமம். 

()
பகா = சூரியன்
பகா = மண்டலம் தொகுதி பகுதி
(சூரிய மண்டலம் அல்லது பகுதி, அதன் வட்டப்பாதை)
ஆராத்யா = வழிபடுதல்

#715 பகாராத்யா = சூர்யக்குடும்பத்தினால் (சூரியனைச் சார்ந்தவற்றால்)  துதித்து போற்றப்படுபவள் *

* பகா எனும் வார்த்தை சூரிய மண்டலம் என்றுணரப்படுகிறது. சில விளக்கங்கள், "சூரிய மண்டலத்தின் 'மத்தியில்' உறைபவளான அன்னை, வணங்கப்படுகிறாள்" என்றும் உணர்த்துகிறது. 

#716 மாயா = மாயா சக்தியானவள் (அவளே மாயா-சக்தியாக விளங்கி சிருஷ்டிக்கு காரணகர்த்தாவாகிறாள்)

()
மது = தேன்
மதி = அறிவு - ஞானம்

#717 மதுமதீ = மெய்ஞானத்தின் எல்லையில்லா பேரானந்தமாக விளங்குபவள் (உயர்ந்த ஞானத்தின் சாரத்தை இனிமையான தேனுக்கு உவமையாக்கி அதன் பேரானந்தத்தை விளங்கச் செய்கிறது இந்நாமம்)

#718 மஹீ = பூமிமாதா (அன்னையின் ஸ்தூல வடிவை விளக்கும் நாமம்)


()
கண = (சிவ)கணங்கள் - தொண்டர்கள்
அம்பா = தாய்

#710 கணாம்பா =  சிவகணங்களின் அன்னையாக திகழ்பவள்

()
குஹ்யகா = குபேரன் - செல்வத்தின் அதிபதியான குபேரன்
ஆராத்யா = வழிபடுதல்

#720 குஹ்யகாராத்யா = குபேரனால் துதிக்கப்படுபவள்

()
கோமல = மென்மையான - மிருதுவான - அழகான
அங்க = உடல் - உடல் சார்ந்த பகுதிகள்

#721 கோமலாங்கீ = மென்மையான எழிலுடல் தரித்தவள்

()
குரு = மதிப்பு மிக்க - மதபோதகர் - குருமார்கள்

#722 குருப்ரியா =  ஆச்சாரியர்களிடம்(அற வழிகாட்டிகள்)  பிரியமானவள்

()
ஸ்வதந்த்ரா =  கட்டுப்படுத்தப்படாத

#723 ஸ்வதந்திரா = சுதந்திரமானவள் ie சார்பற்றவள் 

()
சர்வ = அனைத்து - எல்லாமும்
தந்த்ர = தந்திரங்கள் (தந்த்ர வழிபாடு)
ஈஷா(ஈஷ்வரீ) = தலைவன்(தலைவி)

#724 சர்வ தந்த்ரேஷீ = தந்த்ர வழிபாட்டு முறைகள் அனைத்திற்கும் அதிபதி. *

*ஸ்ரீ வித்யா உபாசனையின், தந்திர வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் ,  சுயத்தை உணர்த்தி  முக்திக்கு இட்டுச் செல்கிறது.


()
தக்ஷிணாமூர்த்தி = சிவபெருமானின் 'குரு' (ஆச்சாரிய) வடிவத் தோற்றம் *

#725 தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ = தக்ஷிணாமூர்த்தி ரூபமாக விளங்குபவள் *

* தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம். நவகிரஹங்களுள் ஒருவரான
பிரஹஸ்ப்தி எனும் வியாழ / குருபகவான் என்பவர் வேறு என்று புரிதல்.


(தொடரும்)



Lalitha Sahasranama (700-725)

Vibhoothi Visthaaram

Desha-Kaala-aparichinna;
Sarvaga;
Sarva Mohini;
Sarasvathi;
Shaastra Mayi;
Guhaamba;
Guhya RoopiNi;
Sarvopaadhi Vinirmuktha;
SadaaShiva pathivratha;
Sampradhaayeshwari;
Saadhu;
EE;
Guru-Mandala RoopiNi;
Kulotheerna;
Bhagaaraadhya;
Maaya;
Madhumathi;
Mahi;
GaNaambha;
Guhyaka-aaradhya;
Komalaangi;
Guru-Priya;
Swathanthra;
Sarva-thanthreshi;
Dakshinaamoorthi-Roopini;

()
Desha = country -area - space-region
Kaala= Time
aparichchinna = unlimited


#701 Desha Kaala -aparichinna = Who is not circumscribed or bound by
time or space  (area)

#702 Sarvagaa = Who is omnipresent /all pervading

#703 Sarva Mohini = Who fascinates everybeing (traps every soul  into the spell of maaya)

#704 Sarasvathi = She who is the manifestation of knowledge (goddess of knowledge, Sarasvathi)

()
Shaastra = religious rules and treatises  - scientific treatises - scriptures
mayi = constitute of - consisting of

#705 Shaastra Mayi = Who is the embodiment of Shastras - Whose very bodyparts
are scriptures. 

()
Guha = Lord Subramanya
Amba = Mother

#706 Guhaamba= Mother of Lord Subramanya (Murugan) *

()
Guha = That which is concealed- hidden- a Cave - heart

#706 Guhaamba = Mother,who resides in the cave of heart * 
(Resides as Pure-consciousness which is hidden from the purview of bonded souls)

* (Two analysis and explanations are described for naama 706) 

()
Guhya = Secret- covered -  hidden

#707 Guhya RoopiNi = Whose form is mysterious.

()
Sarva = every
upaadhi = limitation - condition
Vinirmuktha = free or exempt from

#708 Sarvopaadhi Vinirmuktha = She who is without any constraints

()
Sadaashiva = Supreme form of Lord Shiva
pathivratha = virtuous wife

#709 SadaaShiva pathivratha = Who is devout wife of Sadashiva

()
Sampradhaya = traditional customs
eshwari = Queen - she who Ruler

#710  Sampradhaaya-eshwari = Who protects and rules traditional practices and customs

#711 Saadhu = She who is a seer (who is calm, serene, well in control, in equilibrium)


#712 EE = Who symbolises bija mantra "eem (eemkaar) *

*Bija mantra "Im" stands for  Kamakala Beejam of the Devi. It is the divine desire of macrocosm which is related to Creation.

For more details please read related links

(Some explanations show sadhu+ee as Sadhvi. Some others split the name because 'Sadhvi' is a repetition - ie. Naama-128)

()
Mandala = path - collection

#713 Guru-Mandala RoopiNi = Who is the personification Guru-parampara (Lineage
of Acharyas / Gurus)

()
Kula = set - gang - community
theerna = surpassed

#714 Kulotheerna = She who is not restrained or contained within any limits. 


* Kula is interpreted in multiple ways. As one of its multiple meaning, Yogic community interpret the word Kula to mean "totality of senses" and explain this naama to mean that, she has transcended senses and is spread as totality. Deeper meaning in both context remain  the same. It talks on nirguna aspect of Lalithambika.

()
Bhaga = sun 
Bhaga = Region  *
(Region comprising of sun and its orb )
Aaradhya= worship

#715 Bhagaaraadhya= Who is glorified by the solar-world (solar system-its race) *

* Interpreting 'bhaga' as surya mandala/solar disc, some philosophers opine that "she who is worshipped in centre of the solar disc "


#716 Maaya = Who is the illusory force (Force behind illusion and its resultant creation. Creation begins when Maya resumes her Play)

()
madhu  = Honey
mathi = Intellect - Wisdom

#717 Madhumathi = She whose wisdom is pure bliss (Whose essence of Supreme wisdom
is releted to sweetness and its resultant bliss)

()
Mahi = earth

#718 Mahi = Who is goddess earth (talks upon her gross form)

()
GaNa = Followers /attendants
Ambaa = Mother

#719 GaNambaa = Who is the Mother of Shiva's attendants (shiva-gaNaas)

()
Guhyaka = Kubera - Lord of wealth
Aaradhya = Worship

#720 Guhyakaradhya = Who is worshipped by Kubera


()
Komal =  Gentle -tender - charming
anga= body - part of the body

#721 Komalaangi = Whose body is beautiful and delicate.

()
Guru - highly respectable - religious teacher

#722 Guru-Priya = who is fond of spiritual preceptors(guides, who shows righteous path)


()
Swathanthra = uncontrolled - indepedent

#723 Swathanthra = Who is free i.e self willed, independant.

()
Sarva = every - all
tanthra = Tantras
Esha(Eshvari) = chief

#724 Sarva-tanthreshi = She Who is the presides and rules all Tantras *

*Tantras are spirtual practices and rituals which results in self-awakening
and resultant liberation.

()
Dakshinamoorthi = Form of Lord Shiva as Spirtual-preceptor *

#725 Dakshinaamoorthi-Roopini = Who is the embodiment of Lord Dakshinamoorthi *

* Please be clarified that, Dakshinamoorthi is Shiva's preceptor Form, whilst 'Guru' who
is referred as the chief of planet Jupiter(Navagraha cluster) is different.


(to Continue)

An earnest attempt to discuss meanings word by word - ShakthiPrabha  

2 comments:

  1. very very good
    great help to readers like me.....

    ReplyDelete
    Replies
    1. Thankyou very much for the support. I try to write whatever little I know .

      Delete