April 15, 2019

சேரமான் பெருமான் (கழற்றி அறிவார்) நாயனார்

Image result for சேரமான் பெருமான்




மகோதை என்று பெயர்கொண்டு திகழ்ந்த கொடுங்கோளூரில் சேரர் குலம் தழைக்க அவதரித்தார் கழற்றி அறிவார் நாயனார். பெருமாக்கோதை என்ற பெயருடன் விளங்கிவந்தார். அரசாட்சி செய்ய உதவும் பயிற்சிகள் எதையும் கொள்ளாமல் சிவ வழிபாட்டில் கவனம் செலுத்தினார். நந்தவனம் அமைத்து, மலர் கொய்து மாலைகள் சாற்றி, திருவெண்ணீரணிந்து இறைவனை பாடிப் போற்றும் பணியிலேயே மனம் செலுத்தினார். சேரகுலத்து அரசன் செங்கொற்பொறையன் அரச வாழ்வை துறந்து துறவரம் மேற்கொள்ளும் பொருட்டு கானகம் சென்றான். மந்திரிகளின் விண்ணபத்தின் பேரில், பெருமாக்கோதையார், அரச வாழ்வால் தம் தவத்துக்கு ஊறு விளையுமோ என முதலில் தயங்கினாலும், பிறகு சிவபெருமானின் ஆக்ஞை ஏற்று சேர அரியணையை அலங்கரித்து, சேரமான்பெருமான் ஆனார்.

அரியணை ஏற்று நகர் உலா வரும் நேரம், வண்ணான் ஒருவன் உடம்பில் வியர்வையுடன் கலந்து படிந்திருக்கும் உவர்மண் வெளுத்திருக்க, அது திருவெண்ணீர் சாற்றிய சிவனடியாரைப் போல் காட்சியளிப்பதென மிக்க மகிழ்ந்து மன்னன் யானையை விட்டு கீழிறங்கி அவனை வணங்கி சிறப்பித்தான். இப்படிப்பட்ட ஒரு சிவப்பேரருளானை அரசனாகப் பெற்றமைக்கு மக்களும் சிவபக்தர்களும் அமைச்சர்களும் பேருவகை கொண்டனர்.

இவர் அரசு செலுத்தும் காலத்தில் பகைமை அற்று சிவநெறி தழைத்தோங்கும்படி அரசாட்சி செய்தார். சோழரும் பாண்டியரும் நண்பர்களாயிருந்தனர். பல தேசத்து சிற்றரசர்கள் மிகுந்த மதிப்புடன் கப்பம் கட்டி வந்தனர்.

நாள் தவறாது தூப தீபம் சந்தனம், திருநீறு அளித்து அமுது படைத்து, சிறந்த முறையில் பூஜை செய்து வந்த பக்தியிலும் அன்பிலும் மெய்மறந்த சிவனார், அன்றாடம் பூஜை முடியும் தருணம் தனது கால் சிலம்பொலியின் திருவோசையை கேட்டு அரசர் மகிழுமாறு அருளினார். ஈசன் சிலம்பொலியை கெட்டதால் "கழற்றி அறிவார்" என்று பெருமைப்படுத்த பட்டார். (கழறுதல் என்றால் உறுதி செய்தல் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளலாம்)

பாணபத்திரர் என்ற புலவரின் கனவில் தோன்றி சேரமான்பெருமானிடம் ஸ்ரீமுகம் (அறிமுகம்) கொண்டு வேண்டிய பொருள் பெற்றுக்கொள்ளும்படி அருளினார் ஈசன். அறிமுக ஓலையை கொண்டு சென்று மன்னரிடம் நிதி கேட்க, 'இறைவன் தன்னை பணித்த கருணை தான் என்னே' என்று பரவசம் அடைந்த மன்னன், நவநிதியும் யானையும் குதிரையும் தன் பொருளனைத்தையும் மூட்டை மூட்டையாய் கட்டி யானையிலும் குதிரையிலும் வாகனங்களிலும் தர முற்பட, மன்னனின் கொடையை வாழ்த்தி தனக்கு தேவையானவற்றை எடுத்துச் சென்றார் பாணபத்திரர். இன்னிகழ்ச்சி, மன்னர் ஈசன் மேல் கொண்ட பக்தி, அன்பு மற்றும் செல்வத்தின் மேல் கொள்ளாத அபிமானத்தை எடுத்துரைக்கிறது.

சிறப்பாக பூஜை நடந்த பின்னும் ஒரு நாள் சிலம்பொலி கேட்காதிருக்க, மிக துன்பப்பட்டு, தனது பிழையை பொறுத்தருள வேண்டி, பூஜையினால் சிவனை மகிழவைக்காத வாழ்வு தமக்கு வேண்டாமென தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தார். சிவனார் அதிவேகமாக சிலம்பொலியை தொடர்ந்து ஒலிக்கச் செய்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) எனும் தன் தோழரின் இனிய தென்தமிழ் பாடல்களில் தமை ஒரு கணம் மறந்துவிட்டதாக இறைவன் உரைத்தார்.

இத்தகைய பக்தரைக் காணாத வாழ்வும் வீணே என நினைத்து சுந்தரரை தரிசிக்கும் பேராவல் கொண்டார் சேரமான். அரசாட்சியை அமைச்சர்களிடம் ஒப்படைத்து சுந்தரைக் காண புறப்பட்டார். வழியில் பல சிவஸ்தலங்களையும் தரிசித்து பாக்கள் இயற்றினார். சுந்தரரை திருவாரூரில் கண்டு மகிழ்ந்து இருவரும் பெரும் அன்பில் கட்டுண்டிருந்தனர். இறைவனை பாடி பக்தி செய்வதில் மகிழ்ந்திருந்தனர்.

சுந்தரரும் சேரமானும் பல சோழ, பாண்டிய சிவத்தலங்களை சேர்ந்து தரிசித்து, பாக்கள் இயற்றி துதித்தனர். சுந்தரர், சேரமான் விருப்பத்திற்கிணங்கி சேரமான் அரசாளும் கொடுங்கோளூரையும் அடைந்து அங்கு மன்னருடன் பல காலம் தங்கியிருந்த பிறகு, திருவாரூர் புறப்பட்டார். சுந்தரரின் பிரிவாற்றலைத் தாங்க முடியாத சேரமான் பெருமான் போகாதபடி தடுத்தும் சுந்தரர் கேளாததால், சுந்தரரை என்றும் மறவாத சிந்தையினராக அவர் ஆணைப்படியே கொடுங்கோளூரை சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார்.

பல காலத்திற்குப் பிறகு சுந்தரர் திருக்கையிலாயம் போக சிவபெருமானால் அனுப்பபட்ட வெள்ளை யானை மேல் ஆகாயவழியில் புறப்படுவதை அறிந்து, தாமும் தம் குதிரையின் செவியில் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து ஆகாய மார்க்கமாக சென்றதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அரசர் கண்முன் ஆகாய வீதியில் மறைந்ததை கண்ட படை வீரர்கள் சிலர் உடன் உயிர் துறந்து அவர்களை பின் தொடர்ந்து கைலாயம் சென்றனர் என்றும் கருத்து. சுந்தரர் சிவனை வணங்கி நிற்க, பின்னே சென்ற சேரமானை "நாம் அழையாதிருக்க நீ எங்கனம் வந்தாய்" என பெருமானார் கேட்க, ஈசனிடமும் கொண்ட அன்பை உரைத்து "திருக்கைலாய ஞான உலா" பாடினார் சேரமான் நாயனார். "திரு வுலாப் புறம்' என்று

இன்னூலை பெரிய புராணம் குறிப்பிடுகிறது. பாடலை கேட்டு அகமகிழ்ந்த பெருமான் சேரமான் பெருமான் நாயன்மாரை தமது கணங்களுக்கு தலைவராக்கினார்.

ஓம் நமச்சிவாய 

லலிதா சஹஸ்ரநாமம் (551 - 560 ) with English meanings



விபூதி விஸ்தாரம்

சர்வ-வ்யாதி ப்ரஷமனீ
சர்வ ம்ருத்யு நிவாரணீ                                                                                                                
அக்ர கண்யா
அசிந்த்ய ரூபா
கலிகல்மஷ நாசினீ
காத்யாயனீ
காலஹந்த்ரீ
கமலாஷ நிஷேவிதா
தாம்பூல பூரித முகீ
தாடிமீ குசும ப்ரபா

()
ப்ரஷமன் = குணப்படுத்துதல் - ஆறுதல் - தணித்தல்

#551 சர்வ வ்யாதி ப்ரஷமனீ = அனைத்து ரோகங்களையும் ஆற்றக்கூடியவள் *

* பருவுடல், நுண்ணுடல் முதலியவற்றின் ரோகத்தை போகக்கூடியவள். பிறப்பு இறப்பு என்ற பெருவியாதியை நீக்க வல்லவள்

()
நிவாரண் = தடுத்தல் - முறித்தல்

#552 சர்வ ம்ருத்யு நிவாரிணீ = மரணம் முதலான அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் தடுதாட்கொள்பவள்

()
அக்ர = முதலாவது 
கண்யா = கணக்கெடுத்தல் - கவனித்தல்

#553 அக்ர கண்யா = பிரபஞ்ச சிருஷ்டியில் முதன்மையானவள், பிரதானமானவள் (அவளுக்கு முந்தைய நிலையில் எவரும், எதுவும் இல்லை)

()
அசிந்த்ய = சிந்தனைக்கு அப்பாற்பட்ட

#554 அசிந்த்ய ரூபா = அனைத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பவள் (மனம் , அறிவுக்கு எட்டா நிலையில் இருப்பவள்)

()
கலி = கலியுகம் ie தற்போதைய யுகம்
கல்மஷ = அழுக்கு (பாபங்கள்)

( பிரப்ஞ்சவியலின்படி, இந்து மத நம்பிக்கையானது, காலச்சக்கரம் நான்கு யுகங்களின் சுழற்சியாக வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. அவை, சத்யயுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம் மற்றும் கலியுகம்.  தற்போது நடைபெறுவது கலியுகம். ) 

#555 கலிகல்மஷ நாஷினீ = கலியின் கொடுமையை அழிப்பவள்

#556 காத்யாயனீ = காத்யாயன முனிவரின் புதல்வி (வழித்தோன்றல்) *

* ஆக்ஞா சக்கரத்தில், ஒட்யான பீடத்தின் தேவதா ரூபமான 'காத்யாயனி தேவி' என்றும் இந்நாமத்தை சில பக்தர்கள் தியானிக்கின்றனர்.

()
கால = காலம் - காலத்தால் நிகழும் மரணம் / மாற்றம் 
ஹந்த்ரீ = அழிப்பவர்

#557 காலஹந்த்ரீ = காலத்தை (மரணத்தை) தகர்ப்பவள் (ie. அதனை கடந்து நிலைத்து நிற்பவள்) * 

* ஞானியர்க்கு ஜனன மரண சுழற்சியை ஒழித்து, காலத்தின் நிலையாமையை பொய்க்கச் செய்பவள் .

()
கமலாஷ = கமலம் (தாமரை) போன்ற கண்ணுடைய ( ஸ்ரீ விஷ்ணு ) 
நிஷேவிதா = உபசரிக்கப்படுதல்

#558 கமலாஷ நிஷேவிதா= பகவான் ஸ்ரீ விஷ்ணுவால் ஆராதிக்கப்படுபவள்

() 
தாம்பூல = தாம்பூலம் 
பூரித = முழுவதுமாக - பரவி
முக = முகம் - வாய்

#559 தாம்பூல பூரித முகீ = தாம்பூலம் தரித்த வாய் உடையவள்                          (தாம்பூலத்தின் நறுமணம் கமழும் சிவந்த வாய்)

()
தாடிமீ = மாதுளை
குசும = மலர்
ப்ரபா = ஒளிர்தல் - மிளிர்தல்

#560 தாடிமீ குசுமப்ரபா = மாதுளை மலரைப் போல் சோபிப்பவள் (சிவந்த நிறத்தில் மின்னுபவள்)

(தொடரும்)

Lalitha Sahasranama (551 - 560)

Viboothi Visthaaram 

Sarva-Vyaadhi prashamani
Sarva-mruthyu nivaariNi
Agra gaNya
Achinthya roopa
Kalikalmasha nashini
Kaathyayani
Kaalahanthri
Kamalaksha NishEvitha
Thaambhoola pooritha mukhi
Dhadimi kusuma prabha

()
Prashaman = to heal, pacify, cure

#551 Sarva-Vyadhi Prashamani = Who heals every disease *

Which ncludes disease of birth and death, disease of physical and subtle
body.

()
NivaaraN = to obstruct - prevent - hinder

#552 sarva-mruthyu nivaaraNi = Who prevents and protects her devotees from various agonies and miseries

()
Agra = top - first 
GaNya = to be counted - to be taken notice

#553 Agra gaNya = Who is the foremost amongst the race (creation of universe)

()
Achinthya = incomprehensible - unthinkable

#554 Achinthya Roopa = Who is beyond the reach of mind and the intellect to comprehend

()
Kali = the current yuga ie kaliyuga - present age * 
kalmasha = dirt - filth

(Time units as per hindu cosmology is divided as four-age cycle of yugas.  Sathya, Thretha, Dwapara and Kali yuga. We are currently in Kaliyuga.)

#555 Kali kalmasha Nashini = Who destroys the errors (misdeeds-sins) of Kali yuga

#556 Kathyayani = Descendant (daughter) of Sage Kathyayana *

Some devotees meditates on this naama upon Kathyayani who is the presiding deity of odyana-peetha in ajna-chakra.


()
kaala = death by age - time-period 
hantri = slayer

#557 Kaalahanthri = Who destroys death ( who is Immortal i.e. beyond time)

For realised souls, she helps them rise above death and birth cycle.

()
Kamalaksha = Lotus eyed (ie Shri Vishnu) 
NishEvitha = served - obeyed

#558 Kamalaksha NishEvitha = Who is honoured and Worshipped by Shri Vishnu

()
Thamboola = after meal digestive - condiments wrapped in Betal leaf  (acts as mouth freshner) 
Pooritha = full of - spread 
Mukha = face - mouth

#559 Thamboola Pooritha Mukhi = Her mouth is filled with the aroma of thamboola (condiments with betal leaf)

()
Dhadimi = Pomogranate
Kusuma = flower
Prabha = shining

#560 Dhadimi kusuma prabha = Who shimmers like pomogranate flower (shines in red color)

(To Continue)

(A humble effort to interpret meanings word by word - ShakthiPrabha )

April 02, 2019

கலிய நாயனார்

சிறு குறிப்பு #நாயன்மார்கள்

Image result for கலிய நாயனார்



கலிய நாயனார் என்பவர் திருவொற்றியூரில் வணிகர் குலத்தில் தோன்றி செல்வந்தராய் வாழ்ந்தார். பெரும் சிவபக்தராக விளங்கினார். இவ்வுலக வாழ்வின் நிலையாமையையும், உடலை வெறும் கூடென்றும் உணர்ந்து சிவபதமே சிறந்தது என்று தெளிந்தமையால் அன்றாடம் திருவொற்றியூர் கோவிலில் உள்ளும் புறமும் திருவிளக்கு இடும் பணியை செய்து வந்தார்.

கொடிது கொடிது வறுமை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பதெல்லாம் நமைப் போன்றோருக்கு. தொண்டிற் சிறந்த பக்தர்கள் இறைவனின் தொண்டே பெரிதென நினைப்பர். வறுமை வந்து சேரும்படி இறைவன் விதிக்க, வறுமையிலும் பணியை தொடர்ந்து விடாமற் செய்யும் பொருட்டு, மற்றவர் தரும் எண்ணையை வாங்கி விற்று அதில் சேர்ந்த செல்வத்தில் விளக்கேற்றி வந்தார். அத்தொழிலில் பெருகி வந்த போட்டியில் வாய்ப்பை இழந்தவர் செக்கு இழுத்து பொருளீட்டினார். நாளடைவில் அவரை கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும் யாருமின்றி போக மிக நொந்து தன் மனைவியை விற்று பணமீட்டி பணியை தொடர நினைத்தார். எனினும் வாங்குவார் யாருமில்லாமற் போனதால் திருவிளக்கு பணி தடைபட்டு விட்டதே என்ற ஆதங்கம் தாங்காமல் தமை அறுத்து அக்குருதியில் விளக்கேற்றத் துணிந்தார்.

தக்க சமயத்தில் பரமசிவனார் கருணைக் கண் திறந்து தடுத்தாட்கொண்டு ரிஷப வானகத்தில் காட்சி தந்து, திருக்கைலாயத்தில் ஒளிர்ந்திருக்க அருள் செய்தார்.


ஓம் நமச்சிவாய

April 01, 2019

லலிதா சஹஸ்ரநாமம் ( 542 - 550) (With English meanings)



விபூதிவிஸ்தாரம்

புண்ய-கீர்த்தி;
புண்ய-லப்யா;
புண்ய-ஷ்ரவண-கீர்த்தனா;
புலோமஜார்ச்சிதா;
பந்த மோசனி;
பர்பராலகா;
விமர்ஷ ரூபிணீ;
வித்யா;
வியதாதி-ஜகத்-ப்ரசு;

()
புண்ய = பாக்கியம் - புனிதம் 
கீர்த்தி - புகழ் - மேன்மை

#542 புண்ய-கீர்த்தி = அவளது பெருமையே புண்ணியம் நல்குவது*
* பக்தர்களுக்கு, அவளது பெருமையை நினைந்திருப்பதே புண்ணியப் பலனாகி விடுகிறது.

()
லப்யா = பெறக்கூடிய

#543 புண்ய-லப்யா = புண்ணியத்தினால் அடையக்கூடியவள் -ஞானிகளால் உணரப்பெறுபவள் - நற்காரியங்களினால் எட்டக்கூடியவள் 
(அவளது கிருபைக்கு பாத்திரமாவது)

()
ஶ்ரவண = காது - கேட்பது - கவனித்தல்
கீர்த்தன = புகழ்ச்சி - கொண்ட்டம்

#543 புண்ய ஶ்ரவண கீர்த்தனா = தனது கீர்த்தியைப் கேட்போருக்கும் பாடிக் கொண்டாடுவோருக்கும் பாக்கியம் அளிப்பவள்.

()
ஜா = பெண் - புத்திரி
புலோமஜா = புலோமானின் மகள் - இந்திராணி *
அர்ச்சிதா = அர்ச்சிக்கப்படும் = பூசனை
* இந்திராணியின் தந்தையின் பெயர் புலோமான்

#544 புலோமஜார்ச்சிதா = இந்திராணியால்(புலோமஜா) துதிக்கப்படுபவள்

()
பந்த = கட்டுண்டிருத்தல் - கைதாகியிருத்தல்
மோசனி = விடுதலை- சுதந்திரம்

#546 பந்தமொசனீ = பந்தத்திலிருந்து விடுவிப்பவள்*
* சம்சார பந்தத்தில் கட்டுண்டிருப்பவர்களை விடுவிப்பவள்

() 
பர்பரா = சுருள் முடி
அலகா = சுருள் - கூந்தல் கற்றை

#547 பர்பராலகா = சுருண்ட கூந்தல் கற்றை உடையவள்

()
விமர்ஷ = காரணம் - சிந்தனை - பிரதிபலிப்பு
ரூபிணீ = வடிவான

#548 விமர்ஷ ரூபிணீ = பிரம்மத்தின் பிரதிபலிப்பானவள் *
* பிரம்மத்தின் பிரதிபலிப்பே சிருஷ்டி. பிரம்மம் பரமாக தனித்திருக்கும் போது சுத்த சைதன்யமாக விளங்குகிறது. அதன் காரண வடிவமே பிரபஞ்சம். பிரம்மத்தின் பிரதிபலிப்பே அண்டமாக விரிகிறது.

#549 வித்யா = ஞானமயமானவள்

()
வியத் = ஆகாசம்
வியதா = விரிவடைந்த - பரந்த
ஆதி = முதலியன - இத்யாதி
ஜகத் = நிலம் - பூமி
ப்ரசு = கொள்ளுதல் - உண்டாக்குதல்

#550 வியதாதி-ஜகத்-ப்ரசு = சிருஷ்டியை உண்டாக்கியிருப்பவள் *
* சிருஷ்டியின் ஆதாரமான பஞ்சபூதங்களில் ஆகாயம் தொடங்கி, நிலம் வரையிலான மூலகங்களை (elements) உண்டுபண்ணியிருப்பவள்

(தொடரும்)


Lalitha Sahasranama (542 - 550 )


Viboothi-Visthaaram


Punya-Keerthi;
Punya-Labhya;
Punya-Shravana-keerthana;
Pulomajaarchitha;
Bandha Mochani;
Barbaraalaka;
Vimarsha RoopiNi;
Vidhya;
Viyadhadhi-jagath-prasu;

()
Punya = virtue - meritorious
Keerthi = Fame- renown

#542 Punya-Keerthi = Whose greatness is virtuous - whose prominence is holy*
* Contemplating on her prominence bestows virtue.

()
Labhya = obtainable

#543 Punya-Labhya = Who can be accessed by purity - attainable by virtuous deeds - Who can be understood by those who are pure (saints).

()
Shrvan = ear - to hear - listen
Keerthana = praising - fame - celebrating

#544 Punya Shravana Keerthana = Who abundantly blesses those who hear and praise her glories

() 
Ja = Daughter
Pulomaja = Daughter of Puloman - Indrani*
architha = saluted - respected
* Indrani's father was Puloman

#545 Pulomajarchitha = Who is worshipped by Indrani

()
Bandha = tied - arrest(ed) 
Mochani = release

#546 BandhaMochani = Who liberates the bonded souls

() 
Barbara = curly hair
alaka = curl - lock

#547 Barbaralakha = Who has curly locks (hair)

() 
Vimarsha = reasoning - examination or pondering 
RoopiNi = form

#548 Vimarsha Roopini = Who is in the form of reflection (of brahman)*
* She is the "reflective or creative" aspect of brahman. Brahman on its own stands as Pure consciousness. Reflection of brahman, extends as Universe

#549 Vidhya = She who is Wisdom

()
Viyat = Ether (the element)
Viyatha= stretched out - extended 
aadhi = and so on - -etc- et cetera
Jagath = Earth - World 
Prasu = Bearing - fruitful - bringing forth

#550 Viyathadhi-jagat-prasu = She who has brought forth the creation*
* Brought forth the pancha bhoothas, the elements from Ether to earth (space, Air Fire, Water, Earth)

(To Continue)

Humble effort to decipher word by word meanings in Tamil and English -Shakthiprabha 

References: Thanks to  Manblunder.com , sanskritdictionary.com
Picture Credit: Bhavana (as signed in the pic)   from http://storibuzz.in 
Thankyou .