November 13, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (384 - 390) (with English Meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும்

விஷ்வ சாக்ஷிணீ;
சாக்ஷி வர்ஜிதா;
ஷடங்க-தேவதா யுக்தா;
ஷாட்குண்ய பரிபூரிதா;
நித்யக்லின்னா;
நிரூபமா;
நிர்வாணசுக தாயினீ;

() விஷ்வ = புவனம்
சாக்ஷி = சாக்ஷி

#384 விஷ்வ சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் சாக்ஷியாக விளங்குபவள் (படைப்பு) *

*அவள் ஒருவளே சாக்ஷி. மற்றெல்லோரும் அவரவர் பக்குவத்தின் படி படைப்பின் அங்கமாக விளங்குபவர்கள். பங்கேற்பவர்கள். அவள் தனது படைப்பை தானே எட்ட நின்றும், ஒட்டி நின்றும், வெறும் சாக்ஷியாக மட்டும் பார்க்கிறாள்.

() வர்ஜிதா - இல்லாமல்

#385 சாக்ஷிவர்ஜிதா = சாக்ஷி அற்றவள் - சாக்ஷிக்கு அப்பாற்பட்டவள் *

* பரம்பிரம்மமான அவள் இயக்கமும் இருப்பும் இன்னொரு வஸ்து இல்லாததால், சாக்ஷி ஏதுமின்றியும்; எல்லையற்ற அவள் இருப்பு விளங்குதலுக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.

() ஷட் - அங்க (ஷடங்க) = ஆறு அங்கங்கள் உடைய (ஷட் என்றால் ஆறு)
யுக்தா = இணைக்கப்பட்ட - ஒருங்கிணந்த - நிரப்பபட்ட

#386 ஷடங்க-தேவதா யுக்தா = ஷடங்க தேவதைகள் என்னும் ஆறு தேவதைகளால் உபசரிக்கப்படுபவள் * (மந்த்ர தேவதைகள்) *

* மந்திரங்கள் ஆறு பகுதிகளைக் கொண்டது. அவை ஆறு தேவதா ஸ்வரூபமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. இந்த அதிதேவதைகள், இதயம், கேசம், சிரசு, கண்கள், கவசம் மற்றும் ஆயுதம் என்ற ஆறு அங்கங்களை ஆள்பவர்கள்.  அம்பிகை இத்தேவதைகளின் ஒருங்கிணைந்த உருவகமாகவும் அவர்களின் உபசரிப்புக்கு ஆட்படுபவள் என்று பொருள் கொள்ளலாம்.


() ஷாட்குண (ஷட் - குண) = ஆறு குணங்கள்
  பரிபூரிதா = நிரப்பபட்ட - உடைய

#387 ஷாட்குண்ய பரிபூரிதா = ஆறு மகத்துவம் வாய்ந்த குணங்கள் அமையப்பெற்றவள் *

( வளம், செல்வம், வல்லமை, புகழ், மெய்ஞானம், துறவு)

() நித்ய = அன்றாடம் - நிரந்தரம்
க்லின்னா = காருண்யம் - ஈரம்

#388 நித்யக்லின்னா = நித்திய கருணாசாகரமாக கடாட்சிப்பவள் ( நாடி வரும் அன்பர்களுக்கு)

#389 நிரூபமா = ஈடுஇணையற்றவள் - ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவள்

() நிர்வாண = வீடுபேறு
சுக = நிறைவு - மகிழ்ச்சி

#390 நிர்வாணசுக தாயினீ = பேரின்பமான வீடுபேற்றை அருள்பவள்

(தொடரும்)




Lalitha Sahasranama (384 - 390)


Peetams and Anga-Devathas


Viswa Sakshini;
Sakshi Varjitha;
Shadanga-Devatha Yuktha;
Shadgunya paripooritha;
Nithya klinna;
Niroopama;
NirvaaNa-sukha dhaayani;


() Vishwa = universe
Sakshi = witness

#384 Viswa Sakshini = Who is the witness of the universe (creation) *

* She is the sole witness of her creation. Rest bonded jivas are participating and playing part in her creation. She stands aloof, yet pervading her entire creation as a mere witness.

() Varjitha = without - beyond

#385 Sakshi Varjitha = Who is devoid of Witness (who is the sole witness and
whose form cannot be deciphered by dual entity ) *

* She the Parabrahma swaroopini is the sole existence and energy of the universe.she is the matter and energy. She is the consciousness which pervades. She extends herself endlessly. Her nature and form hence cannot be perceived or grasped by any other entity, as there is nothing apart from her. There is nothing second to her. Therefore she is devoid of witness.

() Shad - anga = Having six parts (shad is six)
   Yuktha = connected with / engaged in

#386 Shadanga-Devatha Yuktha = She who is attended by deities of Six-parts (of mantra)*

* Every mantra has six parts which are represented by six devathas. Here it means athi-devathas of heart, hair, head, eyes, armour and weapons. She is spoken as integrated embodiment of shadanga devathas )

() Shad - gunya = Six qualities / six fold virtues
   Paripooritha = provided with - occupied

#387 Shadgunya paripooritha = Who is equipped with six excellent virtues *

* Prosperity, Wealth, Fame, Righeousness, Wisdom and Renunciation

() Nithya = constantly - eternally - daily - indigenous
   Klinna = moved - compassionate - tender hearted

#388 Nithya Klinna = Who is soft and benignant (towards her devotees)

#389 Niroopama = She who is exceptional ie. unparalleled or peerless

() NirvaaNa = NirvaaNa is mukthi - final liberation
  Sukha = Joy - Happiness


#390 Nirvaana-sukha Dhayini = Who bestows the bliss of Salvation


(To Continue) 

No comments:

Post a Comment