November 23, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (397 - 402) (with English meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும்


மூல ப்ரக்ருதி;
அவ்யக்தா;
வ்யக்தா அவ்கய்த ஸ்வரூபிணீ;
வியாபினீ;
விவிதாகாரா;
வித்யா அவித்யா ஸ்வரூபிணீ;

() மூல = ஆதாரம் = வேர்
    ப்ரகிருதி = மூல வஸ்து - ஆதி நிலை

#397 மூலப்ரக்ருதி = பிரபஞ்சத்தின் மூலப்பொருளானவள் ; தோற்ற-நிலையின் சாரமானவாள்

#398 அவ்யக்தா = விளங்குதலுக்கு அப்பாற்பட்டவள்; புலன்களுக்கு எட்டா நிலையில்   இருப்பவள்

() வயக்த = புரிதலுக்கு உட்பட்டு = தெளிவான

#399 வ்யக்தா அவ்யக்த ஸ்வரூபிணீ = புரிதலுக்கு உட்பட்டும் அப்பாற்பட்டுமுள்ள அனைத்துமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்பவள்

() வியாபின் = பரந்த- விரிந்த

#400 வியாபினீ = அனைத்திலும் வியாபித்திருப்பவள் ; எங்கும் நிறைந்தவள்

() விவித = பல விதமான 
   ஆகார = உருவம்

#400 விவிதாகாரா = பல்வேறு தோற்ற-நிலைகளை,வடிவங்களை, தாங்கியிருப்பவள்

() அவித்யா = அறியாமை

#402 வித்யா அவித்யா ஸ்வரூபிணீ = அறிவாகவும் அறியாமையாகவும், எதிலும், எந்நிலையிலும் நிறைந்திருப்பவள். *

*  விழிப்புநிலை- உறக்கநிலை, உணர்வுநிலை - மயக்கநிலை என்ற எதிர் நிலைகளின் செயல்பாட்டிலும் அம்பாளே மறைபொருளாக விளங்குகிறாள் என்ற புரிதலுக்கும் இடமுண்டு.

(தொடரும்)


Lalitha Sahasranama (397 - 402)

Peetas and Anga-Devathas

Moola Prakruthi;
Avyaktha;
Vykatha Avyaktha Swaroopini;
Vyapini;
Vividhaakaara;
Vidhya Avidhya Swaroopini;

() Moola = Source- root
Prakruthi = original state or original substance

#397 Moola prakruthi = Who is of the nature of primal matter- Who is the genisis of the universe

#398 Avyaktha = She who is not apparent; Who is unmanifest; Who cannot be comprehended

() Vyaktha = Clear - Vivid - Manifested

#399 Vyaktha Avyaktha Swaroopini = She who is in manifested and unmanifested expressions. ie. The totality.

() Vyaapin = Spread over

#400 Vyaapini = Who pervades everything - Who is present everywhere

() Vividh = of several kinds - variety 
    Aakaara = form

#401 Vividhaakaara = Who has multifarious forms and aspects

() Avidhya = Foolish - unwise

#402 Vidhya Avidhya Swaroopini = Who is present as both knowledge and ignorance *

* Can also be interpreted that mother is present as awareness and / or unawareness; 
consciousness and / or unconciousness, based on awakening of any individual entity. 

(to continue)

November 22, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (391 - 396) (with English meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும்

நித்ய ஷோடஷிகா ரூபா;
ஸ்ரீகண்டார்த்த சரீரிணீ;
ப்ரபாவதீ;
ப்ரபா ரூபா;
ப்ரசித்தா;
பரமேஷ்வரீ;

() ஷோடஷீ = பதினாறு - பதினாறு அம்சம் அல்லது பதினாறு அங்கங்கள்  உடைய


#391 நித்ய ஷோடஷிகா ரூபா = பதினாறு வயது சிறுமியின் வடிவானவள் *


*  பதினாறு வகை ஆசைகளைக் குறிக்கும் வகையில் அன்னை, பதினாறு வயது  சிறுமியின் வடிவம் தாங்கியிருக்கிறாள் 

* பதினைந்து சந்திரக் கலைகளின் திதி தேவதைகளை குறிப்பதாகவும் பதினாறாவதான தேவதையாக அம்பாளே அனுகிரஹிக்கிறாள் என்பதும்  பக்தர்களின் கூற்று. ( நித்திய தேவிகளைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறோம்.   
பார்க்க: http://minminipoochchigal.blogspot.com/…/lalitha-sahasranam… 

* நித்திய தேவதைகள், பஞ்சதசாக்ஷரி மந்திர வடிவங்களாகின்றனர்.  பதினாறாவது அசையாக (மாத்திரை) அம்பாள் லலிதா திரிபுரசுந்தரி பூர்த்தி  செய்வதால் ஷோடஷீ மஹா மந்திரமாகிறது. லலிதாவிற்கு ஷோடஷீ  என்ற பெயரும் உண்டு.


() ஷ்ரீகண்ட் = சிவன் (சிவனின் தொண்டை - கண்டம் - கழுத்து) 
   அர்த்த = பாதி
   ஷரீர = உடல்

#392 ஷ்ரீகண்ட-அர்த்த ஷரீரிணீ = அர்த்தாங்கினியாக விளங்குபவள் i.e. சிவனின் அங்கத்தில் ஒரு பாதியைக் கொண்டவள் ie (ஷிரீகண்ட் என்னும் சிவன் இங்கு அர்த்தாரீஸ்வரராக உருவகப்படுகிறார்)


() ப்ரபாவத் = பிரகாசம் - சக்திவாய்ந்த


#393 ப்ரபாவதீ = பேராற்றலுடன் பிரகாசிப்பவள் *

* அஷ்டமாசித்திகளுக்கு பிரபா என்று பெயர். அன்னை அஷ்ட சித்திகளால் சூழப்படுகிறாள். பிரபாக்களால் சூழப்படுவதால் பிரபாவதீ என்றும் புரிதல். 
Thanks and reference : https://www.manblunder.com

() ப்ரபா = ஒளி

#394 ப்ரபா ரூபா - ஒளிவெள்ளமாக ஜ்வலிப்பவள்

() ப்ரசித்தி = பிரபலம் = புகழ்மிகுந்த

#395 ப்ரசித்தா = வெகுவாக கொண்டாடப்படுபவள்

() பரம = உயர்ந்த
   ஈஷ்வர் = ஈஸ்வரன் - எஜமானன்

#396 பரமேஷ்வரீ = ஒப்புயர்வற்ற பேரரசி - பெருந்தேவி

(தொடரும்)

Lalitha Sahasranama (391-395)

Peetams and Angadevathas


Nithya Shodashika Roopa;
Shrikanta-ardha ShareeriNi;
Prabhavathi;
Prabha Roopa;
Prasidhha;
Parameshwari;

() Shodasi = sixteen - Consisting of or having sixteen parts

#391 Nithya Shodashika Roopa = She who is eternally in the form of a Sixteen year old girl, signifying sixteen types of desires *

* Some sadhakas relate sixteen deities as nithya devis representing 16 lunar days (As mentioned in earlier naama which spoke about nithya devis).  https://minminipoochchigal.blogspot.com/2017/11/lalitha-sahasranama-72-75.html

* Fifteen deities also refers to fifteen syllable panchadasakshari mantra and the sixteenth deity is Mother Lalitha TripuraSundari who with the final seed syllable completes it as Shodashi mantra. Shodashi is mentioned as another name for Mother Lalithaambika.

() Shrikant = Lord shiva (his throat-neck)
    Ardha = half
    Shareera = body

#392 Shrikant-ardha Shareerini = Who as ardhangini i.e. owns half of Shiva i.e. 
( Shrikant or Shiva being Ardhanareeshwara)

() Prabhavat = radiant - potent

#393 Prabhavathi = Who is powerfully radiant *

* Some explanation maintains that Mother is surrounded by ashtasidhis known as Prabha. Since she is surrounded by Prabhas, she is Prabhavathi.

Thanks and reference : https://www.manblunder.com

() Prabha = illumination

#394 Prabha Roopa = Whose form is effulgent

() Prasidh = popular - wellknown

#395 Prasidhdha = Who is adored, commended and celebrated by many.

() Parama = highest
Eshwar = God - Master

#396 Parameshwari = She who is the Supreme Empress

(to Continue)

November 13, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (384 - 390) (with English Meanings)



பீடங்களும் அங்க தேவதைகளும்

விஷ்வ சாக்ஷிணீ;
சாக்ஷி வர்ஜிதா;
ஷடங்க-தேவதா யுக்தா;
ஷாட்குண்ய பரிபூரிதா;
நித்யக்லின்னா;
நிரூபமா;
நிர்வாணசுக தாயினீ;

() விஷ்வ = புவனம்
சாக்ஷி = சாக்ஷி

#384 விஷ்வ சாக்ஷிணீ = பிரபஞ்சத்தின் சாக்ஷியாக விளங்குபவள் (படைப்பு) *

*அவள் ஒருவளே சாக்ஷி. மற்றெல்லோரும் அவரவர் பக்குவத்தின் படி படைப்பின் அங்கமாக விளங்குபவர்கள். பங்கேற்பவர்கள். அவள் தனது படைப்பை தானே எட்ட நின்றும், ஒட்டி நின்றும், வெறும் சாக்ஷியாக மட்டும் பார்க்கிறாள்.

() வர்ஜிதா - இல்லாமல்

#385 சாக்ஷிவர்ஜிதா = சாக்ஷி அற்றவள் - சாக்ஷிக்கு அப்பாற்பட்டவள் *

* பரம்பிரம்மமான அவள் இயக்கமும் இருப்பும் இன்னொரு வஸ்து இல்லாததால், சாக்ஷி ஏதுமின்றியும்; எல்லையற்ற அவள் இருப்பு விளங்குதலுக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.

() ஷட் - அங்க (ஷடங்க) = ஆறு அங்கங்கள் உடைய (ஷட் என்றால் ஆறு)
யுக்தா = இணைக்கப்பட்ட - ஒருங்கிணந்த - நிரப்பபட்ட

#386 ஷடங்க-தேவதா யுக்தா = ஷடங்க தேவதைகள் என்னும் ஆறு தேவதைகளால் உபசரிக்கப்படுபவள் * (மந்த்ர தேவதைகள்) *

* மந்திரங்கள் ஆறு பகுதிகளைக் கொண்டது. அவை ஆறு தேவதா ஸ்வரூபமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. இந்த அதிதேவதைகள், இதயம், கேசம், சிரசு, கண்கள், கவசம் மற்றும் ஆயுதம் என்ற ஆறு அங்கங்களை ஆள்பவர்கள்.  அம்பிகை இத்தேவதைகளின் ஒருங்கிணைந்த உருவகமாகவும் அவர்களின் உபசரிப்புக்கு ஆட்படுபவள் என்று பொருள் கொள்ளலாம்.


() ஷாட்குண (ஷட் - குண) = ஆறு குணங்கள்
  பரிபூரிதா = நிரப்பபட்ட - உடைய

#387 ஷாட்குண்ய பரிபூரிதா = ஆறு மகத்துவம் வாய்ந்த குணங்கள் அமையப்பெற்றவள் *

( வளம், செல்வம், வல்லமை, புகழ், மெய்ஞானம், துறவு)

() நித்ய = அன்றாடம் - நிரந்தரம்
க்லின்னா = காருண்யம் - ஈரம்

#388 நித்யக்லின்னா = நித்திய கருணாசாகரமாக கடாட்சிப்பவள் ( நாடி வரும் அன்பர்களுக்கு)

#389 நிரூபமா = ஈடுஇணையற்றவள் - ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவள்

() நிர்வாண = வீடுபேறு
சுக = நிறைவு - மகிழ்ச்சி

#390 நிர்வாணசுக தாயினீ = பேரின்பமான வீடுபேற்றை அருள்பவள்

(தொடரும்)




Lalitha Sahasranama (384 - 390)


Peetams and Anga-Devathas


Viswa Sakshini;
Sakshi Varjitha;
Shadanga-Devatha Yuktha;
Shadgunya paripooritha;
Nithya klinna;
Niroopama;
NirvaaNa-sukha dhaayani;


() Vishwa = universe
Sakshi = witness

#384 Viswa Sakshini = Who is the witness of the universe (creation) *

* She is the sole witness of her creation. Rest bonded jivas are participating and playing part in her creation. She stands aloof, yet pervading her entire creation as a mere witness.

() Varjitha = without - beyond

#385 Sakshi Varjitha = Who is devoid of Witness (who is the sole witness and
whose form cannot be deciphered by dual entity ) *

* She the Parabrahma swaroopini is the sole existence and energy of the universe.she is the matter and energy. She is the consciousness which pervades. She extends herself endlessly. Her nature and form hence cannot be perceived or grasped by any other entity, as there is nothing apart from her. There is nothing second to her. Therefore she is devoid of witness.

() Shad - anga = Having six parts (shad is six)
   Yuktha = connected with / engaged in

#386 Shadanga-Devatha Yuktha = She who is attended by deities of Six-parts (of mantra)*

* Every mantra has six parts which are represented by six devathas. Here it means athi-devathas of heart, hair, head, eyes, armour and weapons. She is spoken as integrated embodiment of shadanga devathas )

() Shad - gunya = Six qualities / six fold virtues
   Paripooritha = provided with - occupied

#387 Shadgunya paripooritha = Who is equipped with six excellent virtues *

* Prosperity, Wealth, Fame, Righeousness, Wisdom and Renunciation

() Nithya = constantly - eternally - daily - indigenous
   Klinna = moved - compassionate - tender hearted

#388 Nithya Klinna = Who is soft and benignant (towards her devotees)

#389 Niroopama = She who is exceptional ie. unparalleled or peerless

() NirvaaNa = NirvaaNa is mukthi - final liberation
  Sukha = Joy - Happiness


#390 Nirvaana-sukha Dhayini = Who bestows the bliss of Salvation


(To Continue) 

லலிதா சஹஸ்ரநாமா (377 - 383) (with English Meanings)



பீடங்களும் அங்கதேவதைகளும்

ஜயா;
ஜலந்தர ஸ்திதா;
ஒட்யாண பீட நிலயா;
பிந்துமண்டல வாசினீ;
ரஹாயாகக்ரம ஆராத்யா;
ரஹஸ் தர்பித தர்பிதா;
சாத்ய ப்ரசாதினீ;

() ஜய = வெற்றி

#377 ஜயா = வெற்றியின் சாராம்சமானவள்

() ஜாலந்தர = அனாஹத சக்கரத்தை குறிக்கிறது ( சமயாசாரம் / தாந்திரீக / சக்கர வழிபாட்டு முறை)

#378 ஜாலந்தர ஸ்திதா = ஜாலந்தர பீடத்தில் ஸ்திரமாகியிருப்பவள் ( அனாஹதத்தில் வீற்றிருப்பவள் )

() ஓட்யாண பீட = ஆக்ஞா சக்கரம், ( சமயாசாரம் / தாந்திரீக / சக்கர வழிபாட்டு முறை)

#379 ஓட்யாண பீட நிலயா = ஓட்யாண பீடத்தில் நிலைகொண்டிருப்பவள் ( ஆக்ஞா சக்கரத்தில் நிலைகொண்டவள்)

() பிந்துமண்டல = ஸ்ரீ சக்கரத்தின் மத்தியிலுள்ள பீடம்

#380 பிந்துமண்டல வாசினீ = ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உறைபவள்

() ரஹோ(பாவம்) = ரஹஸ்யம்
   யாக = யாகம் - அர்பணிப்பு
   ரஹோயாக = ரகசிய யாகமுறை
   க்ரம = முறை அல்லது கோட்பாடு
   ஆராத்யா = ஆராதனை

#381 ரஹோயாகக்ரம ஆராத்யா = அகமுகமான யாகங்களினால் முறைப்படி அடையப்படுபவள் (சூக்ஷ்ம வழிபாடு) *

* அகமுகமான உட்புற வழிபாடு மற்றும் யாகங்கள். புறவடிவமாக காணக்கூடியவை அல்ல என்று புரிந்துணரலாம்.

() ரஹஸ் = ரகசிய (உட்புற)
தர்பண = எரிபொருள் / ஆகாரம் / பலி
தர்பிதா = திருப்தியடைதல்

#382 ரஹஸ் தர்பண தர்பிதா = அகமுகமாக செய்யப்படும் சடங்குகளில் சந்தோஷிப்பவள் 

* அகமுகமாக அல்லது உட்புற சடங்குகளில், மனக் கட்டுப்பாட்டை தமக்குள் விதைத்து, அவரவர் ஆசைகளை . அபிலாஷைகளை ஆன்ம சுத்தீகரிப்பின் பொருட்டு பலியிட்டு தேடலின் உட்பொருளை நெருங்குதல் என்பதே மறைபொருள்.


() சாத்ய = அக்கணத்தில் / விரைவாக / உடன்
  ப்ரசாதினீ = சலுகை / வரம் / உதவி

#383 சாத்ய ப்ரசாதினீ = நொடிப்பொழுதில் திருப்தியுறுபவள் ( வரமருள்பவள்)

(தொடரும்)




Lalitha Sahasranama (377-383)


Peetams and Anga-Devathas


Jayaa;
Jalandhara Sthitha;
Odyaana peeta Nilaya;
Bindumandala vaasini;
RahOyagakrama aaradhya;
Rahas tharpaNa tharpithaa;
Saadhya prasaadhini;


() Jaya = Victory

#377 Jayaa = She who is victorious. Who is the Epitome of Victory.

() Jalandhara = the heart chakra (acc to Tantric tradition)

#378 Jalandhara Sthitha = Who is residing on Jaalandhara peeta (heart or Anaahatha chakra)

() Odyaana peeta = Ajna chakra (acc to tantric tradition)

#379 Odyaana peeta nilayaa = One who resides in Odyaana pItha ( Ajna chakra - between brows)

() Bindhumandala = The Central point of Shri chakra

#380 Bindumandala Vasini = Who resides in Bindhumandala (centre of Shri chakra)

() RahO(bhava) = privacy
yaga = Sacrifice -offer
RahOyaga = as private yaga
krama = method or system
Aaradhya = to worship

#381 Rahayoga krama aaradhya = Who can be sought secretly (tantric) (as internal worship) *

* Subtle sacrifices and offerings than pronounced or visible ones

() Rahas = Private (here to mean Internal)
TharpaNa = food / fuel
Tharpithaa = is sated or satisfied

#382 Rahas-TharpaNa tharpitha = She who is gladdened with internal rituals or rites *

*Internal rituals may mean, control of mind, where sarcificing vasanas or wants is the fuel to the spiritual fire through which Jiva (bonded self) seeks its own liberation.

() Saadhya = Immediate
Prasadhin = showing favour (towards devotees)

#383 Saadhya prasadhini = Who is gratified immediately

(To Continue)

லலிதா சஹஸ்ரநாமம் (366 - 371) (with English meanings)




பீடங்களும் அங்க-தேவதைகளும்

பரா;
ப்ரத்யக்-சிதீ ரூபா;
பஷ்யந்தீ;
பரதேவதா;
மத்யமா;
வைகரி ரூபா;

() பரா = அதி உன்னத நிலை
பரம = அதி உயர்ந்த
பரா = நாமரூபமற்ற அரூப முதன்மை நிலை
( ஸ்வாதிஷ்டானத்தில் உறைந்திருக்கும் சப்தத்தின் முதல் நிலை )

#366 பரா = ஒப்புயர்வற்றவள்

() ப்ரத்யக் = எதிர் திசையில்
ப்ரத்யக்சேதன = எண்ணங்கள் உள்முகமாகத் திருப்புதல்
சித் = அறிவு - ஆன்மா

#367 ப்ரத்யக்சிதீ ரூபா = உள்முகமாக்கிய பிரக்ஞையின் சாரமானவள்

#368 பஷ்யந்தி = சப்த மாற்றாத்தின் இரண்டாம் நிலையை குறிப்பவள் *

* முதல் நிலையில் பரா என்ற அரூபத்தில் உறையும் சப்தமானது, இரண்டாம் நிலையில் பஷ்யந்தியாக உரு கொள்கிறது

() பரா = உன்னதமான
தேவதா = கடவுள்

#369 பரதேவதா = தேவதா ரூபங்களில் உன்னதமான உயர் நிலையில் கொலுவிருப்பவள் - ( ஆதிபராசக்தி )

() மத்யமா = நடு - மத்தியம்

#370 மத்யமா = சப்த மாற்றத்தின் நடுநிலையை குறிப்பவள் i.e அரூபத்திற்கும் வார்த்தைக்கும் இடைபட்ட நிலையையும் குறிப்பவள்

* இரண்டாம் நிலையான பஷ்யந்தி மற்றும் நான்காம் நிலையான சப்தம் வெளிப்படும் நிலைக்கும் நடுவில் மூன்றாம் நிலையில் மத்யமா என்று அவளை அடையாளப்படுத்துகிறாள்.

() வைகரி = உச்சரித்தல் - சப்தம் - வார்த்தை

#371 வைகரி ரூபா = சப்த வடிவானவள் - வார்த்தையாக வெளிப்படுபவள் (இறுதி நிலையில் சப்தமாக தன்னை வெளிப்படுத்துகிறாள்)

(தொடரும்)


Lalitha Sahasranama (366 - 371)


Peetams and Anga-Devathas


Paraa;
Prathyak-chithi Roopa;
Pashyanthi;
Para Devatha;
Madhyama;
Vaikhari Roopa ;



() Paraa = highest point or degree
Parama = highest
Paraa = First sound before manifestation *

( Primary stage unmanifested sound in swadhistaana)

#366 Paraa = She who is the supreme; Who surpasses everything.

() Prathyak - in opposite direction
PratyakchEthana = Thoughts turned inwards upon onself
Chith = Intellect - spirit

#367 Prathyakchithi roopa = Who represents the essence of inner-consciousness

#368 Pashyanthi = Who is the manifestation of second stage of sound (shabdha brahmam)

* First unmanifested stage of sound is paraa, second stage after para is pashyanthi

() Para = highest
   Devatha = deity - God

#369 Para-Devatha = Who is the highest form of manifested deities. (i.e Paraashakthi)

() Madhyama = middle - inbetween

#370 Madhyama = Who also stays inbetween representing the third stage of
speech (between the unmanifested and the manifested) *

* Inbetween the second stage of pashyanthi and the next stage of when shabda or
sound becomes audible.

() Vaikhari = utterance - word or speech

#371 Vaikhari Roopa = Who is in the form of speech (final stage of audible
manifested form of sound)

(To be continued)

லலிதா சஹஸ்ரநாமா (372-376) (with English Meanings)




பீடங்களும் அங்கதேவதைகளும்


பக்த மானஸ ஹம்ஸிகா;

காமேஷ்வர ப்ராண நாடீ;

க்ருதக்ஞா;

காம பூஜிதா;
ஷருங்கார ரச ஸம்பூர்ணா;


() ஹம்ஸிகா / ஹன்சிகா = அன்னப்பறவை
   மானஸ = மனதுள் - மனம் சார்ந்த

#372 பக்த மானஸ ஹம்ஸிகா = பக்தர்களின் மனதுள் அன்னப்பறவையைப் போல் வாசம் செய்பபவள் *
* அன்னப்பறவை புனிதத்துவத்தை உணர்த்தப் பயன்படுகிறது. எவ்வாறு அன்னமானது தேவையானதை  மட்டும் பகுத்தெடுத்துக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாள் தனது பக்தர்களின் சிந்தனை செயல்பாடுகளில் நல்லனவற்றை எடுத்து அல்லாதவற்றை ஒதுக்கி ரக்ஷிக்கக்கூடியவள் 
() நாடி = துடிப்பு - சுவாசம்

#373 காமேஷ்வர ப்ராண நாடி = இறைவன் ஈசனான காமேஷ்வரனின் ஜீவநாடியாக (உயிர்மூச்சாக) விளங்குபவள்

() க்ருத = பெறுதல் - கிடைக்கப்பெற்ற
  ஞா = அறிவு

#374 க்ருதக்ஞா = அனைத்து நிகழ்வுகளையும் அறிந்தவள் - அவற்றை கடந்து நிற்பவள் *

* க்ருத எனும் சொல், கிடைக்கபெற்ற அறிவு என்றோ அல்லது நிகழ்ந்தவைகளின் அறிவு என்றும் விளங்கிக்கொள்ளலாம்.

#375 காம பூஜிதா = காமதேவனால் பூஜிக்கப்படுபவள்


#376 ஷ்ருங்கார ரஸ சம்பூர்ணா = சிருங்கார வெளிப்பாடுகளின் சாரமானவள் *

* ஷ்ருங்கார என்பதற்கு அலங்காரத்துடன் கூடிய ஒயில் என்று பொருள் கொண்டு, அழகின் சாரம் என்பதும் பொருந்தும் . 

(தொடர்வோம்)

Lalitha Sahasranama (372 - 376)

Peetams and Anga-Devathas

Bhaktha Maanasa Hamsika ;
Kameshwara PraaNa naadi;
Kruthagna;
Kaama Poojitha;
Shrungaara rasa sampoorna;

() Hansika or Hamsika = Swan
Maanasa = in the mind- pertaining to mind

#372 Bhaktha Maanasa Hamsika = Who is the swan in the mind of her devotees

* Swan represents purity. Swans are capable of seperating what is needed and leaving the rest. Here ambika picks the goodness from the bonded and devoted jivas. She picks the goodness and stays there.

() Naadi = pulse

#373 Kaameshwara praaNa naadi = Who is the breath (life force- vital force) of Kameshwara

() krutha = to obtain - gain
gnaa = knowledge

#374 Kruthagjna = She who acknowledges and is aware of the past - She whose knowledge transcends everything * 
* Krutha can be interpreted as gained knowledge or acknowledging and being aware of past actions

#375 Kaama Poojitha = Who is worsihpped by god of love

#376 Shrungaara-rasa Sampoorna = Who is the essence and pleasure of love *

* Shringar can also be interpreted to mean pretty, which would leave us to  understand her as the essence of beauty. 

(to continue)

வாங்குவாரின்றி




விற்றுப் போகாத பொருட்களுடன் அதே வீதியில் தான் அவளும் அமர்ந்திருந்தாள் நுகர்வோரெல்லாம் முட்டி மோதி அவரவர் ஆசைக்கு ஆடை அணிவித்து களி நடனமாடியபடி மாடிகளில் வழிந்து தரையெங்கும் தட்டிமுட்டி வெவ்வேறு கோணங்களில் பளபளக்கும் கண்ணாடி மாளிகைகளுக்கே முந்திக்கொண்டிருந்தனர். பண்புள்ள பழஞ்சரக்கோ எழிலாடையின்றி கிழிந்திருந்தது அவள் விற்றுப்போகா குவியலின் பக்கம் ஒரு தலையும் திரும்பவில்லை.
-ஷக்திப்ரபா