October 29, 2018

பகுத்தறிவாதியாகிய அவன்



ஆம் ...ஆகச்சிறந்த பகுத்தறிவாதி அவன். இறைவன் உண்டென பகுத்து அறிந்தவன்.
எவர் கூறியதையும் சரியென ஏற்றுக்கொள்ளாதவன். எதையும் ஏன் எதற்கு என்று ஆராய்வதே அவன் பகுத்தறிவுக்கு அழகு
ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதே என்று வலியுறுத்தும் பகுத்தறிவாதி அவன். ஜாதிப் பாகுபாடற்றவன். எளியவரை உயர்த்தும் பணிகட்கு தோள்கொடுக்கும் தோழன். உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் பிரிவுகள் இல்லை என்றுணர்ந்த அத்வைதி.
மூடப் பழக்கத்தை மூட்டை கட்டுபவன். முன்னோர் கூறிய மொழிகள் அனைத்தும் முட்டாள்தனமானவை அல்ல என்றும் பகுத்தறிந்தவன்.
நற் சிந்தனைக்கு மதிப்பளிப்பவன். தன் சிந்தனையை வலுவிலே வந்து திணிக்காதவன். பிறரை இகழ்தல் தவறென்றே ஒதுங்கியிருப்பவன். உண்மையை உணர்ந்த ஞானி அவன்.
அனைத்துயிரையும் அன்பால் இணைக்க பாடுபடும் அப்பாவி. தனியே ஒற்றைப் போராளியாய் நின்று ஜொலிக்கும் பகுத்தறிவாளி அவன்.

2 comments: