வேடிக்கையிலும்
கேளிக்கையிலும்
விவேகமின்றி உழன்றக்கால்- எம்
கேள்விக்கு பதிலாய்
ஐயம் அகற்றும் பேரொளியாய்
மிக்க கருணையுடன்
தேடி இல்லம் புகுந்து
தடுத்தென்னை ஆட்கொண்ட
சங்கரனே சிவனே
நீயே தாயுமானாய்
தந்தையுமானாய்
நீயே மாலுமானாய் - எம்
மாதவனுமானாய்
ஏழேழ் பிறவிக்கும்
அதன் அப்பாலும்
உன் பொன்னடி தொடர்ந்தே
பூஜித்திருப்பேனே
உன் சொற்படி நடந்தே
சேவித்திருப்பேனே
ஏழேழ் பிறவிக்கும்
ReplyDeleteஅதன் அப்பாலும்
உன் பொன்னடி தொடர்ந்தே
பூஜித்திருப்பேனே//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே நமக்கெல்லாம் ஒரே கதி !
அதனை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ஆமாம் ஒரே பெரியவா தான் ....அவர் _/\_ வருகைக்கு மிக்க நன்றி.
Deleteபெரியவரது எழுத்துக்களைப் படிக்கும் போது நிறையவே கேள்விகள் எழுகிறது சிலவற்றை பதிவாக்கி இருக்கிறேன்
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.... நம்முள் பல சிந்தனைகளையும் கெள்விகளையும் கிளர்ந்தெழச் செய்வதே மேலொரது பணி.
Delete