June 16, 2015

குரு வந்தனம் - மஹாபெரியவா சரணம்.



1993 ஆண்டு பெரியவாளைப் பார்க்கவும் என் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்கவும் நான் என் பெற்றொருடன் சென்றிருந்தேன். பல ஆண்டுகள் கழித்து அன்று தான் அவரை அருகில் காணும் பாக்கியம் கிடைத்தது. சிறுமியாய் இருந்த பொழுது இரு முறை கண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் பேசியதில்லை. பேசும் பக்குவமும் இல்லை. 

ஆனால் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வாங்க சென்ற பொழுது, அவரைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது உண்மை.  இத்துனை வயதாகி விட்டதே இவருக்கு. நினைவு இருக்குமோ தெரியவில்லை. அவர் பார்ப்பதும் ஆசீர்வதிப்பதும் அவருக்கு உணர முடியுமோ புரியவில்லை. 'உடல் தளர்ச்சி-மூப்பு' போன்ற விஷயம் எத்தனை பெரிய மனிதரையும் பொம்மையாக்கிவிடுகிறதே என்று நினைத்து வருந்தினேன்.

ஆசீர்வாதம் செய்து பொழுதும் கூட அவர் 'தன்- நினைவில்' பூர்ணமாய் இருப்பாரோ இல்லையோ என்றே என் மனம் பரிதவித்தது. 

இத்தனை வருடங்கள் கழித்து இந்த மரமண்டைக்கு உரைக்கிறது, அவர் வயதையும் மூப்பையும் கடந்தவர் என்று. வெளித் தோற்றத்தை மட்டுமே கண்டு ஒரு ஞானியை உணர முடியாத முட்டாளாகவே என் மதிப்பிற்குறிய குரு முன் இறுதியாக நின்றிருந்தேன். 

அவரைப் பற்றி பெரிய குரு பக்தி கூட இருந்ததில்லை. அப்பாவும் தாத்தாவும் எங்கள் வீட்டில் ஆச்சார்யரின் படம் வைத்திருந்தனர். அதை எல்லாம் பக்தியுடன் பார்த்ததும் இல்லை. 

அவரே என்னை ஆட்கொண்ட சம்பவம் நடந்த வரை...இப்படித் தான் இருந்திருக்கிறேன். 

என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அவர் தம் கடைக் கண் பார்வை செலுத்தி, அருள் சுரந்து என் மனதுள் குருவாய் உயர்ந்த என் ஆச்சார்யருக்கு கோடி வந்தனங்கள். 


13 comments:

  1. //அவர் தம் கடைக் கண் பார்வை செலுத்தி, அருள் சுரந்து என் மனதுள் குருவாய் உயர்ந்த என் ஆச்சார்யருக்கு கோடி வந்தனங்கள். //

    அவரை நேரில் தரிஸித்துள்ளீர்கள் எனக்கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம் வாழ்நாளில் அவரை ஒருமுறையேனும் தரிஸித்துள்ளவர்கள் மஹா பாக்யசாலிகள்தான்.

    இன்றைய என் பதிவின் இறுதியில் கூட அவர்களைப்பற்றி பல இணைப்புகள் கொடுத்து ஒரு குறிப்பும் எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2015/06/17.html

    என் திருமணத்திற்கு முன்பும் பத்திரிகைகள் + திருமாங்கல்யம் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் திருக்கரங்களால் அவற்றைத் தொட்டுத்தடவி, குங்குமப்பிரஸாதத்தை அதன் மேல் போட்டு அனுக்கிரஹித்துக் கொடுத்தார்கள். அவர்களின் அந்த அனுக்கிர மஹிமையே ஏதோ இன்றுவரை எங்கள் இலவாழ்க்கையும் நல்லபடியாகவே ஓடிவருகிறது. பகிர்வுக்கு நன்றிகள். :)

    ReplyDelete
    Replies
    1. His grace is def a main reason for peaceful life vgk sir.... உண்மை தான் அவரை தரிசித்ததே பெரும்பாக்கியம்

      Delete
  2. :-))) மகிழ்ச்சியாக இருக்கிறதுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராதாக்ருஷ்ணன். நலமா?

      Delete
  3. மூன்று சமய குருமார்களையும் ஒருங்கே காஞ்சியில் திருச்சியில் இருந்து சென்று தரிசித்தது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. :) பகிர்வுக்கு நன்றி ஜி.எம்.பி அவர்களே.

      Delete
  4. ஜீஎம்பி ஐயா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
    http://drbjambulingam.blogspot.com
    http://ponnibuddha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜி.எம்.பி சார் :)

      Delete
  5. இன்றைய வலைச்சரத்தில் GMB ஐயா அவர்கள் - தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!..

    ReplyDelete
  6. Good one Shakthiprabha ...
    A copy paste below from Yajur vedam,
    //om na karmana na prajaya dhanena tyagenaike amrtatvam anasuh ...///

    One can achieve immortality in association with the Lord, not by ones own pious deeds, nor by the pious deeds of one’s progeny, nor by the accumulation of wealth, but only by renunciation of all enjoyment for oneself and offering everything to the Supreme Lord. This state of perfection, which is attained by the real sannyasis, is situated far beyond this world, and is difficult to reach for the ordinary man.

    ReplyDelete
    Replies
    1. Thankyou for taking time to read and encouraging me to write :)

      Delete
    2. Thankyou for taking time to read and encouraging me to write :)

      Delete