April 05, 2015

நிரந்தர வரம்



கதைகளில்
கவிதைகளில்
வார்த்தைகளில்
வசனங்களில்
சொற்களில்
சொல்லாமலே சென்ற
முட்களில்
பாடல்களில்
ராகங்களில்
உணர்வுகளைத்
தேடித் திரிந்து
தேகம் நலிந்து
வருடங்கள் தொலைந்து
வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்
மலிந்து விடவில்லை நம் காதல்
உன் நினைவுக் கிடங்குகளில்
புன்னகைத்து
பன்னீர்ப் பூச்சொரிகிறேன்
பிரார்த்தனைகளால்
பாலமிட்டு மிளிரும்
தெய்வீகக் காதல்

-ஷக்திப்ரபா


18 comments:

  1. //வருடங்கள் தொலைந்து வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்....//

    //புன்னகைத்து பன்னீர்ப் பூச்சொரிகிறேன் பிரார்த்தனைகளால் //

    வரிகளிலேயே தெய்வீகம் தெரிகிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி சார்... சேர்ந்து வாழ்வதிலோ சாவதிலோ மட்டும் காதல் தேய்வீகமானதாய் முத்திரைக் குத்தப்படுவதில்லை. என்று தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் வரைந்த வரிகள்.

    ReplyDelete
  3. நினைவுகளில் தெய்வீகக் காதலுக்கு half life உண்டு என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. mikka nandri ramvi... neenda naaL kazithu oru pathivu. athil ungaL marumozhi kandu magizhnden.

    ReplyDelete
  5. உண்மை தான் ஜி.எம்.பி அவர்களே. நினைவுகளினாலேயே உயிரூட்டப்படும் ஓவியக் காதல்.

    ReplyDelete
  6. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. அன்புள்ள சகோதரி ஷக்திப்ரபாஅவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (08.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:

    வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/8.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்.

      Delete
  10. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/8.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். நன்றி. வருகைக்கு மிகுந்த நன்றி. வை.கோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்.

      Delete
  11. வலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜம்புலிங்கம் சார்.

      Delete
  12. எனக்கு கவிதைலாம் எழுத வராது. நல்லா ரசிக்க மட்டுமே தெரியும் ரசனையான கவிதை. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூந்தளிர். உங்கள் கருத்தும் வருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது.

      Delete