February 07, 2012

liebster விருது - நன்றி ராஜி.


சென்ற மாத காலம் முழுவதும், இமயமலைச்சாரலில் வாழ்ந்த துறவியாக என்னை நானே எண்ணிக்கொண்டு (கொஞ்சம் ஓவர் தான்) அதிகம் எழுதுவதில் ஈடுபடாத மனநிலையில் இருந்துவந்தேன். என்னடாவென்றால் இரண்டு விருதுகள். சில வருடங்களுக்கு முன் குதூகலித்து மகிழ்ந்திருப்பேன். தற்போது பண்பட்டுவிட்டதாக நானே என்னை நினைத்துக்கொள்கிறேன் (இதுவும் ஓவர்...பொறுத்துக்கோங்க) அதனால் மனம் தெளிந்து அமைதி கலந்த மகிழ்ச்சியிலும் நிதானத்திலும் திளைத்தது.

அடிக்கடி கோபித்துக் கொண்டு பிறந்தகம் செல்லும் பெண்டாட்டி போல், துறவுநிலைக்கு மனம் சென்றுவிடக் கூடிய அபாயம் வரும் போது இப்படி நண்பர்கள் விருதுகள் வழங்கியிருப்பதால், அடடா இதற்காகவானும் இரண்டு நல்ல எழுத்து எழுதவேண்டுமே என்ற கடமை என்னுள் நிறைகிறது. முடிந்த போதெல்லாம் நிச்சயம் எழுதுவேன்.





வி.கோபாலக்ருஷ்ணன் விருது வழங்கி முடித்த தருணத்தில், தோழி  ராஜி அவர்கள் என் பதிவுகளுக்காக "liebster blog award" வழங்கியுள்ளார். மிக்க மகிழ்ச்சி தோழி. பிடித்த ப்ளாக் என்ற பதவி எனக்கு எவ்வகையில் பொருந்துமோ தெரியவில்லை. ஜனரஞ்சகமாக எழுதும் மனநிலை குறைந்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. அடிக்கடி ஆன்மீகம், வேதாந்த விஷயங்களை மட்டுமே பதிவில் எழுதாமல் வேறு சில பதிவுகளும் பதிவிட எத்தனிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி ராஜி.


நானும் படிக்கும் சில வலைப்புக்களில் யாருக்கு வழங்குவேன். ஏறக்குறைய முன்பு குறிப்பிட்டது போல் சிலர் பிரபலங்கள். சிலர் எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டனர். நான் படிக்கும் ஏறக்குறைய எல்லா வலைப்பூக்களும் மிகவும் பிடிக்கும். அதில் ஐந்து குறிப்பிட்டு சொல்ல கடினமாக இருக்கிறது.


liebster விருதினை நான் ரசிக்கும் கீழிருக்கும் தோழர்களுக்கு வழங்க பிரியப்படுகிறேன்.



D.R.Ashok: அற்புதமான புதுக்கவிதைகள். தற்பொழுது எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டதே :(



ஷைலஜா:  இவரின் நகைச்சுவை, பல்சுவை...சகலகலா பதிவுகளுக்கும் நான் விசிறி.



R. gopi: சுவாரஸ்யமான பதிவுகள் பிடிக்கும். இப்பொழுது ஒரு தொடர்கதை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அடுத்த பகுதி வெளியிடக் காத்திருக்கிறோம்.



தமிழ்விரும்பி: பதிவுகள் தான் என்றில்லை, அவர் எழுதும் ஒவ்வொரு மறுமொழியும், வாக்கியமும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவை. சிரத்தையுடன் கூடிய நல்லெழுத்து.



Analyst: இவரது பதிவுகளில் அறிவியல் சார்ந்த விஷயங்களை  ஆர்வமாக படிப்பேன். பொதுவான இவர் எழுத்தின் அணுகுமுறையும் அறிவுபூர்வமாக இருக்கும்.



ஆர். கோபி. அஷோக், இவ்விருது, மிகுந்த நேரநெருக்கடியிலும் வலைப்பூவில் எங்களைப் போன்ற ரசிகர்களுக்காக நீங்கள் மேலும் எழுத சிறு ஊந்துகோலாக இருக்குமென மிகவும் ஆசைப்படுகிறேன்.

liebster விருது பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த ஐந்து பதிவாளர்களுக்கு வழங்கித் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.







20 comments:

  1. ஷக்திப்ரபா....

    தங்கள் கமெண்ட் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தேன்... விருது தந்தமைக்காக ஒரு புறம் என்றாலும், 5 பேரில் என்னையும் நினைவில் வைத்து எனக்கும் தந்ததால்.. இது என் மற்றும் தோழர் லாரன்ஸ் அவர்களுக்கும் மிக பெருமையாக இருக்கிறது...

    மிக்க நன்றி.....

    ReplyDelete
  2. விருதுகளுக்கு முழுத் தகுதியும் படைத்தவர் நீங்கள் ஷக்தி. பொருத்தமானவர்களுக்கு வழங்கியும் இருக்கிறீர்கள். மிகுந்த மனமகிழ்வுடன் தங்களைப் பாராட்டுவதில் மகிழ்கிறேன் நான். ஆன்மீகம், மதம் போன்றவை சம்பந்தப்பட்ட பதிவானால்தான் என்ன... அவையும் நமக்குத் தேவையானவை தானே... எனவே முடியும் போதெல்லாம் தாங்கள் எழுத வேண்டுமென்பதே என் அவா, வேண்டுகோள் எல்லாம்.

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. விருது பெற்று விருது வழங்கிய ஷக்திக்கு
    என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

    ஷக்தி கையால் ஷக்தி மிக்க விருது பெற்ற
    அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்+பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. விருது பெறும் தகுதி உங்களுக்கு இருப்பதாலேயே அறிமுகமற்ற உங்களுக்கு தந்தேன். இனி ஜனரஞ்சகமாக எழுத போவதாக சொல்லியிருக்கீங்க. வரவேற்கிறேன். விருது தந்தவர்களில் ஷைலஜா மட்டுமே எனக்கு அறிமுகம். புதிய தோழர்களை அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றிகள்

    ReplyDelete
  6. உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில். -
    தெய்வப் புலவன் கூற்று எவ்வளவு சாத்தியமானது என்று நாள் தோறும் நமக்கு
    இஷ்டமான எண்ணங்களை வாசிக்க நாம் வலைப் பூவில் எட்டிப் பார்த்து செல்லும் போது அதை தீர்க்கமாக உணர்கிறேன்...

    வழக்கமாக நிறைய எழுதுவேன் இப்போது என்ன எழுதுவது என்றேத் தெரியவில்லை சகோதிரியாரே!
    முதலில் உங்களின் இராமாயண விருதுக்கு வாழ்த்துக்கள்.... தங்களின் ஏழு விருப்பங்களையும் வாசித்தேன் அருமை... நிறைவான வாழ்வை நோக்கியப் பயணம் வெற்றியடைய இறைவன் துணை நிற்பான்..

    ஆமாம், உங்கள் காதலன் அவன்தான் மாயக் கண்ணன் ஆயர்ப் பாடியில் அவன் தெருவிலே போவோரையெல்லாம் பின்னியச் சடைகளை பின்னிழுத்தும்... புதுப் புடவைகளிலே புழுதி அள்ளி வீசியும் அவனே தான்...வம்பிழுத்து பேரின்பத்தில் ஆழ்த்துவானே! அந்த கண்ணன்; இறைவன் தங்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...

    இது என்ன புதிது! என்றுப் பார்க்கிறீர்களா... ஆமாம், ஸ்ரீராமரும், இலக்குமணனருமாக
    சேர்ந்தார் போல் நீங்கள் பெற்ற விருதுக்குத் தான் அப்படி பெயர் சூட்டினேன்...

    என்னையும் அங்கீகரித்து அன்புகாட்டி எனது எழுத்துகளையும் ரசித்து எனக்கு விருதளித்த தங்களுக்கும் அதை முதலில் தங்களை பாராட்டி தந்த சகோதிரியார் ராஜி அவர்களுக்கும் எனது உள்ளங் கனிந்த நன்றிகள்...

    ஒரு பெருமிதமாக எண்ணுகிறேன்... நன்றி! நன்றி!! நன்ற!!!
    நானும் இதைப் போல் ஐவருக்கு விரைவில் விருதளிக்கிறேன் என்று உறுதி தந்து பெற்றுக் கொள்கிறேன்...
    உண்மையில் சந்தோசமாக இருக்கிறது. நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  7. மிக்க நன்றி நண்பர்களே :) வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி...

    ReplyDelete
  8. //இது என் மற்றும் தோழர் லாரன்ஸ் அவர்களுக்கும் மிக பெருமையாக இருக்கிறது...

    //

    நன்றி கோபி :) எனக்கும் பெருமை

    ReplyDelete
  9. //எனவே முடியும் போதெல்லாம் தாங்கள் எழுத வேண்டுமென்பதே என் அவா, வேண்டுகோள் எல்லாம்.
    //

    கட்டாயம் எழுதுகிறேன் கணேஷ். :)

    //இனி ஜனரஞ்சகமாக எழுத போவதாக சொல்லியிருக்கீங்க. வரவேற்கிறேன்.//

    நன்றி ராஜி :)

    ReplyDelete
  10. //உங்கள் காதலன் அவன்தான் மாயக் கண்ணன் ஆயர்ப் பாடியில் அவன் தெருவிலே போவோரையெல்லாம் பின்னியச் சடைகளை பின்னிழுத்தும்... புதுப் புடவைகளிலே புழுதி அள்ளி வீசியும் அவனே தான்...வம்பிழுத்து பேரின்பத்தில் ஆழ்த்துவானே! அந்த கண்ணன்; இறைவன் தங்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...
    //

    படிக்கையில் மிக மகிழ்ந்தேன்...நன்றி :D

    //ஆமாம், ஸ்ரீராமரும், இலக்குமணனருமாக
    சேர்ந்தார் போல் நீங்கள் பெற்ற விருதுக்குத் தான் அப்படி பெயர் சூட்டினேன்...

    //

    அழகா சிந்திச்சிருக்கீங்க. நன்றி.

    //உண்மையில் சந்தோசமாக இருக்கிறது. நன்றிகள் சகோதிரி...
    //

    எனக்கும் தான் :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் உங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் மறுமுறை இவ்விருது உன்னிடமிருந்து!

    ReplyDelete
  13. WOW! இது தான் முதல் முதலாக எனக்கு இணையத்தில் கிடைக்கும் விருது. எதிர்பார்க்கவே இல்லை. மிக்க நன்றி. எனது மொழித்திறன் மேல் எனக்கு நம்பிக்கையே இல்லை. அவ்வாறிருக்க என் எழுத்தின் அணுகுமுறை உங்களுக்குப் பிடிக்கும் எனச் சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் மிக்க நன்றி.

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நன்றி ஷைலஜா, அனலிஸ்ட். முதல் விருதுக்கு மிக்க சந்தோஷம் அனலிஸ்ட் :)

    ReplyDelete
  15. விருது பெற்ற தங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. நன்றி வி.ஆர், அஷோக்!

    ReplyDelete
  17. இப்பொழுது தான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகிறேன். விருது பெற்றமைக்கும் அதைத் தகுதியனவர்களுக்குக் கொடுத்து, அதற்கான காரணனத்தை பகிர்ந்ததும் அருமை. இணைந்திருப்போம். நன்றி

    ReplyDelete
  18. நன்றி சீனு...முதல் வருகைக்கும் மிக்க நன்றி வாங்க...

    ReplyDelete