February 06, 2012

விருதுகள்... அன்பின் அங்கீகாரம்.

நேற்றைய தினம் "Versatile blogger award" என் பதிவுகளுக்கு திரு.வி.கோபாலக்ருஷ்ணன் அவர்களால் கொடுக்கப்பட்டது.




என் எழுத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள பிரியத்துக்கு மிகுந்த நன்றி சார்.



வெர்ஸடைல் என்பதன் விளக்கத்தை ரத்தின சுருக்கமாகக் தம் பதிவில் கூறியிருந்தார். நானும் விருதை பகிர்ந்து ஐந்து பேருக்கு என்ன ஐநூறு பேருக்கு கொடுத்து மகிழ விரும்புகிறேன்.

ஆனால், நான் வாசிக்கும் வலைதளங்கள் மிகவும் குறைவு.  என் மனதில் நிற்கும் சில தளங்களுக்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. அவர்களில் ஏறக்குறைய பலரும் பிரபல பதிவர்கள். விருதுகளை  முன்னமே வாங்கியிருக்கக்கூடும்.

இருப்பினும் எனது பார்வையில் "versatile" என்று கருதும் ஐவருக்கு, இவ்விருதினை அளிப்பதில் நான் பெருமையடைகிறேன். முன்னமே வாங்கியிருந்தாலும், என் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு என்னை மகிழ்விக்கக் கோருகிறேன்.


கீழ்கண்ட எழுத்தாளர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.  உங்கள் எழுத்தின் மேல் நான் கொண்ட பிரியத்தின் சிறு அடையாளமாக இதைக் கருதுமாறு அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.



1. ஜீவி அவர்களின் விசிறி நான் என்றால் மிகையாகாது. பார்வை என்ற ஒரு கதையிலேயே, பல கருவை உள்ளடக்கி, பல்வேறு விஷயங்களைப் பற்றி பகிரும் அவர் திறமைக்கும், ' சுயத்தேடலில்'  நான் கண்டெடுத்த முத்துக்களின் நினைவாகவும் என்னால் முடிந்த சிறு அங்கீகாரமாக பணிவான வணக்கங்களுடன் இவ்விருதை வழங்குகிறேன்.



2. ஜி.எம்.பி அவர்கள், பல விஷயங்களைப் பற்றி குட்டி குட்டி பதிவு சுவையாய் கூறுவதில் வல்லவர். கவிதை,  கதைகள், நாடகம், சின்ன சின்ன விஷயங்களை பகிர்தல்,  சிறுவயது நினைவலைகள், சிந்தனை தூண்டும் பதிவுகள்   என எதையும் விட்டுவைப்பதில்லை.  பல் திறமை பொதிந்திள்ள அவருக்கு  விருது வழங்குவதில் மிகுந்த பெருமையடைகிறேன்.


3. சகோதரர் வி.ராதாக்ருஷ்ணன் அணு முதல், ரஜினி வரை கோபம் முதல் கோள்கள் வரை சுவாரஸ்யமாகப் பேசுபவர். இவ்விருது இவருக்கு வழங்குவதில் மிகவும் மகிழ்கிறேன்.


4. தோழர் மின்னல் வரிகள் கணேஷ் பற்றி நான் சொல்லவே வேண்டாம். மிக்ஸர் என்ற தலைப்பில் அவர் வழங்கும்  காரசாரமான அருமை கலவையே அவரின் பன்முக எழுத்துத் திறமையை பறைசாற்றுகிறது. இவருக்கு விருது வழங்குவது எனக்கு பெருமையாய் இருக்கிறது.


5. அன்புத் தோழி கீதாவுக்கு குழந்தைகள் பக்கங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் அனைத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். அவர் எழுத்து ஆத்மார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகுந்த பிரியமானது. அவருக்கு இவ்விருது வழங்கி நான் பெருமையடைகிறேன்.



வாழ்த்துக்கள் நண்பர்களே!



வை.கோ அவர்கள் எழுதிய பதிவின் சிறு பகுதியை இங்கு இடுகிறேன்.



VERSATILE என்றால்






(1)ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு சுலபமாக மாறுகிற [கவனிக்கிற] [Capable of turning easily from one thing or subject to another]
(2) எந்த வேலையையும் செய்யும் திறமை வாய்ந்த
[Applying oneself readily to any task.]
(3) பலவிதத் திறமைகளுள்ள [many-sided]
(4) பல கலைகளில் வல்லமையுள்ள [Example: Versatile Author]



என்று தெரிய வருகிறது.



இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். தொடர்பதிவுகள் போல இது ஒரு தொடர் விருதாக அமையப்போவது நிச்சயம்


===========================================


 பிடித்த எழு விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டு மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர்ந்து வலைப்பதிவாளர்கள் மத்தியில் நல்லூக்கம் வளர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஹ்ம்ம்...அப்புறம் எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  கீழே பகிர்ந்துள்ளேன்.

1. என் கண்ணன் (கீதை உபதேசித்தவன்) ...அவனை நினைப்பது, சிந்திப்பது,  என்றேனும் அவனையே என் மணவாளனாக ஏற்பதே என் இலக்கு. அதற்கான தவமே என் பிறப்பு என நினைத்துள்ளேன்.

2. வானவியல். (astrnomy), அறிவியல் சார்ந்த விஷயங்கள் படித்தல்,  ஆராய்தல்.

3. பாடுவது, பாடல்கள்  கேட்பது

4. ஆங்கிலம்/தமிழ் நாவல்கள், புத்தகங்கள் படிப்பது

5.  எழுதுவது,

6. கணினி விளையாட்டுக்கள்,  நெருங்கிய நண்பர்கள்

7.   என் கணவர் மற்றும் மகளுடன் தனியே இருக்கும் பொழுதுகள்,
என் அம்மா அப்பாவுடன் தனியே இருக்கும் பொழுதுகள்.

20 comments:

  1. அடடே... ‘பன்முக‘ என்ற அடைமொழிக்கு நான் தகுதி பெற்றவனா என்பதில் எனக்கு ஐயம் இருக்குதுங்க ஷக்தி. இருப்பினும் என் மேலுள்ள நம்பிக்கையை விட உங்கள் மேலுள்ள நம்பிக்கையிலும், உங்கள் அன்பை ஏற்றுக் கொள்ளும் விதமாகவும் இவ்விருதினை மனமகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன். இதற்குத் தகுதியான முறையில் நல்ல படைப்புகளை வழங்கிட முனைகிறேன். தங்களின் அன்புக்கும் இந்த விருதுக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  2. நாளை என் தளத்தில் நான் விருது வழங்கி மகிழ விரும்புபவர்களை அறிவித்து தொடர்ந்து விடுகிறேன்.

    ReplyDelete
  3. தோழி ஷக்தி... உங்களுக்கு இன்னும் ஒரு விருது நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. உடன் இந்தத் தளத்தைப் பார்வையிடும்படி வேண்டுகிறேன்.

    http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post_06.html

    ReplyDelete
  4. நன்றி கணேஷ். ராஜி அவர்களின் விருதை இன்று காலை தான் பார்த்தேன்.
    நன்றி..

    ReplyDelete
  5. //அவர்களில் ஏறக்குறைய பலரும் பிரபல பதிவர்கள். விருதுகளை முன்னமே வாங்கியிருக்கக்கூடும்.//

    :) முதலில் எனக்கும் நண்பர்களுக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    இதுவரை நான் பெற்ற விருதுகள் இரண்டு தான் என நினைக்கிறேன். ஒன்று சகோதரி விதூஷ் (இப்போதெல்லாம் இவர் அதிகம் எழுதுவது இல்லை) கொடுத்தது, மற்றொன்று நண்பர் ஸ்டார்ஜன் தந்தது.

    இந்த விருது மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. விரைவில் இந்த விருதினை ஏழு பிடித்த விசயங்களை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்கிறேன்.

    மிகவும் அருமை. குடும்பத்தாருடன் செலவழிக்கும் நேரங்கள் இனிமை. கண்ணன் என்றும் பிரியத்துக்குரியவன். எழுத்தாளர், பாடகி, வாசகர் என பல பரிமாணங்கள் கண்டு மகிழ்கிறேன்.

    ReplyDelete
  6. தாங்கள் விருது பெற்றமைக்கும் இனிய வாழ்த்துகள். விருது தந்தவர்க்கே விருது வழங்குவதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா? :)

    ReplyDelete
  7. அன்பு ஷக்திப்ரபா, வெர்சடைல் ப்லாகர் விருது அளித்து என்னை கௌரவப் படுத்தியுள்ளீர்கள்.என் எழுத்தில் பன்முகங்கள் இருக்கலாம். ஆனால் வலைப் பூ இயக்கத்தில் இன்னும் நடை பயிலும் பாலகனே.I am definitely not versatile in handling the computer. நிறையபேர் கணினியில் என்னென்னவோ செய்கிறார்கள். உங்கள் அன்பின் அங்கீகாரம் என்பதாலும் என் எழுத்துக்களின் பன்முகத்தன்மை உணர்த்தப் படுவதாலும், இதன் மூலம் என் எழுத்துக்களை இன்னும் சிலர் அறிந்து வாசிக்கக்கூடும் என்பதாலும் இந்த விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் இது குறித்து என் வலையில் நான் எழுதும் போது இந்த சங்கிலியின் தொடர்ச்சியைத் தெரிவிக்கிறேன். நன்றியுடன்.

    ReplyDelete
  8. //என் எழுத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள பிரியத்துக்கு மிகுந்த நன்றி சார்.//


    அன்புள்ள ஷக்தி,

    நான் அளித்துள்ள விருதினை அன்புடன் ஏற்று மிகப்பெரிய விருந்தளித்துள்ளதற்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.

    தாங்கள் விருதும் விருந்தும் அளித்துள்ளவர்கள் அனைவருமே எழுத்துலகில் மிக்ப்பெரிய ஜாம்பவான்களே!

    அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களையும் பாராட்டுக்களையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  9. நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி :)

    ReplyDelete
  10. அன்புள்ள ஷக்தி,

    தாங்கள் அன்புகூர்ந்து அனுப்பி வைத்திருந்த மெயிலையும், இந்த விருதுக்கான வழங்கலையும் இப்பொழுது தான் பார்த்தேன்.

    தங்களுக்குப் பிடித்தது என்று தங்கள் எழுத்தின் மூலம் நான் அறிந்தது எத்தனையோ. 'ஆத்மாவைத் தேடி' தொடரில் சேர்ந்து தாங்களும் கூடத் தேடி அலைந்த பொழுதும் சரி, மற்ற உங்கள், எனது பதிவுகளில் ஒத்த நம் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்ட பொழுதும் சரி, தமிழகத்தின் மிகச் சிறந்த சில எழுத்தாளர்களுடன் என் இளம் வயதில் நான் கொண்டிருந்த அன்பும், நட்பும், தொடர்பும் அடிக்கடி நினைவுக்கு வந்ததுண்டு. எல்லாக் காலங்களிலும் எழுத்து தான் இத்தகைய அரிய நட்புகளை சித்திக்கும் சாத்தியப்பாடாகத் திகழ்ந்திருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நமக்குப் பிடித்திருக்கும் எண்ண ஓட்டங்களின் சிறப்புகளைச் சிறப்பிக்க வேண்டித் தான் இப்படியான விருதுகளை ஒருவருக்கொருவர் வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும். ஆக, வழங்குவோரும், பெறுவோரும் சேர்ந்து தங்களுக்குப் பிடித்த ஒன்றுக்குப் பெருமை சேர்க்கத் தலைப்படுகிறார்கள் என்று கொள்ளலே தகும். அந்தப் பெருமையில் என்னையும் பங்கு கொள்ள அழைத்திருப்பதற்கு நெஞ்சங்கனிந்த நன்றி. தங்கள் அன்புக்கு நன்றி.

    தாங்கள் கூறியுள்ள மற்ற விஷயங்களில் எனது பங்களிப்பை செயலாற்ற முனைகிறேன். எல்லாவற்றிற்கும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்பது ஒன்றே என் வேண்டுகோள்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  11. அன்புள்ள ஷக்தி,

    எழுத்துலக ஜாம்பவான்களுக்கு மத்தியில் என் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது கண்டு இன்ப அதிர்ச்சி. தங்கள் மனம் கவரும் வகையில் என் எழுத்துக்களும் இருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் வியந்து பார்க்கும் எழுத்தாளுமை உள்ள பதிவர்களுள் தாங்களும் ஒருவர். தங்களிடமிருந்து கிடைக்கும் இவ்விருதினை மிகவும் மகிழ்வோடும் பெருமிதத்தோடும் பெற்றுக்கொள்கிறேன். விருதின் பெருமையைக் காப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். மனம் நிறைந்த நன்றிகள் பல தங்களுக்கு. என்னுடன் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. விருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. மிக்க நன்றி வியபதி :)

    மிக்க நன்றி ஜீவி, கீதா :)

    ReplyDelete
  14. ஆஹா! வழக்கமாக அடிக்கடி வந்து போவேன்
    சென்ற மூன்று நாட்களாக பனி நிமித்தமாக
    வராமல் இருந்துவிட்டேன்...
    மிக்க சந்தோசமான தருணம்.

    'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்ற றிந்தார் '
    என்னும் பொய்யாமொழி யாளரின் வாக்கிற்கு இணங்க தாங்கள் அனைவரும் தாம் பெற்ற இன்பத்தை பெறுக இந்த வையம் என்று பகிர்ந்து கொள்வது சிறப்பு அதனினும் சிறப்பு இப்படி பாராட்டி மகிழ்வது... அருமை...

    பாராட்டுகள் பெற்ற பெருந்தகைகள் யாவருக்கும் (சகோதிரி உங்களையும் சேர்த்து தான்)
    பாராட்டிய நமது சகோதிரியார் ஷக்திபிரபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  15. நன்றி தமிழிவிரும்பி :)

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஷக்தி you deserve it! எனக்கு ஏற்கனவே கணேஷ் விருது கொடுத்துவிட்டார் நாந்தான் அதை பதிவில் எழுத தாமதம் செய்துவிட்டேன் இப்போது அதே விருது உன்கையால் ! நன்றி ஷக்தி

    ReplyDelete
  17. விருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. அனைத்தையும் மீண்டும் படித்த நிறைவு.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. நன்றி ராஜேஸ்வரி

    ReplyDelete