துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிதோபதேசத்தில் ஒரு கதை. பயந்து பரிதாப வாழ்வு வாழ்ந்து வந்தது. முனிவர் ஒருவரை அண்டி, தன்னை பூனையிடமிருந்து பாதுகாக்கும் படி வேண்டிக்கொண்டது. முனிவரும் பரிதாபப் பட்டு, அதனை பூனையாக மாற்றிவிடுகிறார். விட்டதா தொல்லை? உலகத்தில் தொடர்ந்து ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றாக இன்னல்களும், சவால்களும், சந்தோஷங்களும் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. இப்பொழுது பூனைக்குப் புதிய பயம், நாயைப் பற்றியது. "என்னை நாய் துரத்துகிறது, முனிவரே அபயம்". பரிதாபப்பட்டு முனிவரும், அதனை நாயாக மாற்றுகிறார். சிறுத்தையொன்று தன் வேட்டைக்கு நாயை குறிவைக்கவே, 'பயந்து ஓளிதல்' முடிவற்றதாகிறது. முனிவரும் இம்முறையும் கருணை கொண்டு அதனை சிறுத்தையாக்குகிறார். சிறுத்தையின் பலம் வந்ததும், அதன் புத்தி முனிவனுக்கு முரணாக வேலை செய்யத் துவங்குகிறது. 'தன்னைப் போலவே இன்னொரு பலசாலி சிறுத்தையை இவர் உருவாக்கினால் என்ன செய்வது!' என்றெண்ணி, முனிவரை கொன்று விட தீர்மானித்து அவரைத் தாக்குகிறது. விழித்துக் கொண்ட முனிவர் அதனை மறுபடி எலியாக்கி விடுகிறார்.
மேலே கூறப்பட்டுள்ள கதையில் எலியின் பாத்திரத்தில் நாம் சந்திக்கும் பல மனிதர்களை நிரப்பலாம்.
'செய் நன்றி மறப்பது' மனிதனுக்கு மிகவும் எளிது. துரோகத்திற்கு எடுத்துக்கட்டாக கூறப்பட்ட கதைகளில் மிருகங்களே பாத்திரமானாலும், பல நேரங்களில் மனிதனின் குதர்க்க புத்தியின் விளைவாகவும் சுயநலத்தின் வெளிப்பாடாகவும் நிகழும் நிகழ்வுகள் துரோகத்திற்கு நல்ல உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்களால் விளைந்த சம்பவங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினை. ஒரு சமயம் கிணற்றிலிருந்து அபயக்குரல் கேட்டு அவ்வழியே சென்ற குடிமகன், மிகுந்த யோசனைக்குப் பின், அதில் மாட்டியிருந்த மிருகங்களை காப்பாற்றுகிறான். எம்மை காப்பாற்றினால் நாங்கள் உன்னை கொன்று விட மாட்டொம் என்று சத்தியம் செய்கின்றன. பின்னர் கிணற்றில் தவித்திருந்த மற்றொரு மனிதனையும் காப்பாற்றுகிறான். பேராசையால் இறுதியில் சக மனிதன் தான் இவனை அரசனிடம் காட்டிக் கொடுக்க, மிருகங்களோ செய் நன்றி மறவாமல் உதவுவதாகக் கதை.

சிறு வயதில் அனைவரும் "கல்/கத்திரிக்கோல்/காகிதம்" விளையாட்டு விளையாடியிருப்போம். சைகையால்ஒரே சமையத்தில் கல் அல்லது கத்திரி அல்லது காகிதத்தை தேர்வு செய்யலாம். நம் எதிராளி என்ன தேர்வு செய்கிறார் என்பதைப் பொருத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். கத்திரி காகித்தை கத்தரித்து விடும். கல் கத்திரியை மழுங்கச் செய்து விடும். ஆனால் காகிதத்தால் கல்லை சுற்றி விடலாம். எது வல்லமை பொருந்தியது? அந்தந்த நேரத்தில் எந்த இரண்டு மோதிக்கொள்கிறதோ அதனையொட்டி வெற்றி தோல்வி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. vicious circle என்பது தான் உண்மை. மனிதனுக்கு தன்னை விட வலிமை பொருந்திய இன்னொரு ஜந்துவினால் நிகழும் இழப்பை விட சக மனிதனால் படும் துயரும் இழப்புமே அதிகம்.
அழகான எடுத்துக்காட்டல்கள்.நன்றாக உள்ளது,
ReplyDeleteஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தைக் கொல்லாது. ஒரு சிறுத்தை இன்னொரு சிறுத்தையை மாய்க்காது. அதே போலத்தான் ஒவ்வொரு மிருகமும்.
ReplyDeleteஎளிமையான ஒரு நல்ல நீதிக்கதையை படித்த திருப்தி ஏற்பட்டது. நன்றி.
நன்றி ஜி.எம்.பி சார் மற்றும் ஜீவி அவர்களுக்கும்.
ReplyDelete/அதே போலத்தான் ஒவ்வொரு மிருகமும்./
ஆறறிவினால் வந்த அஹங்காரமா மனிதனுக்கு? :(