இன்றைக்கு நாம் பல்வேறு துறைகளில் காணாத முன்னேற்றமா? அவை எல்லாம் வேதகாலங்களில் இருந்ததா என்ன? இதற்கு பதில் தெரியாமலே, நம் நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அறியாமலே இருந்துவிட்டிருக்கிறோம். நவீன கண்பிடிப்புகளான பலவும் மிக முன்னரே இந்திய வல்லுனர்கள் பேசப்பட்டவை. ஆன்ம ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றுடைய வளர்ச்சிக்கு மற்றொன்றும் கைகொடுத்து இணைந்தே வளர்ந்தது.
'பூஜ்யம்' என்ற அடிப்படை கணித அறிவே இந்தியமண்ணில் துவங்கியது. வேத காலத்திலேயே கணிதவல்லமை பெற்று விளங்கியது மெய்ஞான விஞ்ஞானத்தின் இருப்பிடமுமான நம் இந்திய நாடு. 5 BC இல் பிங்களா என்பவர் ஒன்றும் பூஜ்ஜியமும் வைத்து கணக்கிடும் 'பைனரி' கணித முறையை உபயோகித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. 476 CE ல் கேரள நாட்டில் ஆர்யபட்டா என்பவரோ கணிதவல்லுனராக மட்டுமின்றி வானவியல் நிபுணராகவும் திகழ்ந்திருக்கிறார். உலகம் உருண்டை என்றும் அது தன்னைத் தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற தத்துவத்தை முதலில் ஆணித்தரமாக உரைத்தவர் ஆர்யபட்டா. "பை" என்பதற்கு 3.1416 என்ற கணக்கை சொன்னதும் ஆர்யபட்டா.
பாஸ்காராச்சார்யா, ந்யூட்டன் கண்டுபிடிப்பிற்கு 500 நூற்றாண்டு முன்னரே புவியீர்ப்பு சக்தியை கண்டுணர்ந்தார்.
விஸ்வாமித்ர மஹரிஷியின் புதல்வரான ஆச்சார்யர் சுஷ்ருத், அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி சுஷ்ருத் சம்ஹிதா என்ற நூலில் எழுதியிருக்கிறார்.
குஜராத்தில் கணட் என்ற ஆச்சார்யர் அணு / பரமாணு பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், உலகில் அனைத்தும் பரமாணுவால் உருவாக்கப்பட்டது, அது அழிவற்றதும், நிலையானதும் மட்டுமின்றி, நம் புலனறிவிற்கு அப்பாற்பட்டு நிற்கிறது என்றும் அறிவித்தார். அதன் குணாதிசயங்களை வர்ணித்துள்ளார். அணுவைப் பற்றியும் கம்பராமாயணத்தில் மற்றும் வால்மீகி ராமாயணத்தில் பேசப்பட்டிருக்கிறது. 'புஷ்பக விமானம்' என்று புராணக் கதைகளில் வரும் உபயோகங்கள் கூட, ஏறத்தாழ நம் நவீன விமானங்களுடன் ஒத்துப் போவதாய் அமைந்திருக்கிறது என்கிறார் சோ. ரசாயனம், ஆயுர்வேதம், என்று எல்லாத்துறையிலும் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்த விஷயங்கள் நிறைய.
யோகம் முதல் யாகம் வரை, அணு முதல், ஆன்ம வளர்ச்சி வரை கண்டும் உணர்ந்தும் இருந்தனர் நம் முன்னோர்கள். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்கு அப்பாலும் ஆன்ம வளர்ச்சியின் அருமை உணர்ந்து தெளிந்த பாதையில் நடந்திருந்தனர். இத்தனை வளர்ந்த நாகரீகம் இருந்தும், வேத வழிபடி வாழ்வு முறை பெருமளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனை புத்தகத்திலும் அச்சிலும் கொணராமல், உச்சரிப்பு தெளிவுடன் நேர்த்தியுடன், குருகுலத்தில் கற்று தேர்ந்து செவி வழியாய், உணர்ந்து ஓதி வந்திருக்கின்றனர். அதனை கடைபிடித்திருக்கின்றனர் என்றால் அந்த வாழ்வு முறையில் அறிவியலும் ஆன்மவியலும் கலந்தே இருந்திருக்கிறது என்பதை நான் உணரலாம்.
நம் ஹிந்து மதத்தில் காலத்தை யுகங்களாக பிரித்திருக்கிறோம். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கடைசியாக கலியுகம். ஒவ்வொரு யுகமாக தர்மமும் 'சத்' சிந்தையும் குறைந்து கொண்டே வரும் பொழுது, நான்காவதாக தர்மம் க்ஷீணித்த நிலையில் பல காலங்கள் கடந்து தோன்றுகிறது கலியுகம். கலியுகத்தில் எல்லா கார்யங்களிலும் பாபமும் புண்யமும் கலந்தே இருக்கிறது.
பரிக்ஷீத் அரசன் பதவி ஏற்கும் நேரம் கலியுகம் ஆரம்பம் ஆகின்றது. எருது ஒன்றை ஒருவன் துன்புறுத்தி அடித்துக் கொண்டிருப்பதை அரசன் கவனிக்க நேருகிறது. அப்படி துன்புறுத்துபவனே கலிபுருஷன் எனவும், தர்மம் எருமை ரூபத்தில் அழிந்து கொண்டிருப்பதாகவும் உருவகப்படுத்துகின்றனர். பூமி பசு ரூபத்தில் இருக்கிறது. தர்மம் அழிவது தாங்காது அதுவும் கதறுகிறது. தர்மம் என்ற எருதோ ஒரே காலில் நிற்கிறதாம். மற்ற மூன்று காலகளும் ஊனமாகி அழிந்தே விட்டன.
நீ யார் உனக்கேன் இந்த கதி என்று பரிஷீத் அரசன் கேட்டதற்கு,
* தவம் என்ற கால் கர்வம் அதிகரித்ததால் அழிந்தது
* புனிதம் என்ற கால் எதிர்பாலோரின் முறையற்ற சங்கத்தால் அழிந்தது
* தயை என்பது புத்தி கெட்டு விட்டதால் போய்விட்டது
* உண்மை என்ற ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். அதன் ஷக்தியும் குறைந்து கொண்டே வருகிறது என்று கதறிதாம் எருமை.
இக்கதிக்கு தள்ளிய கலி புருஷனை வெட்ட புறப்படுகிறான் பரிஷீத். கலி புருஷன் அவன் காலில் விழுந்து, என் கடமையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் நிலைப்பதற்கு எனக்கு ஏதேனும் ஒரு இடம் கொடு என்று விண்ணப்பிக்கிறான்.
பரிஷீத் அரசனோ "எங்கு சூதாட்டம், குடி, முறையற்ற ஸ்த்ரீ (ஆடவன்) சேர்க்கை, ஹிம்சை, இருக்கிறதோ அங்கெல்லாம் நீ இருந்து கொள் என்கிறான். இன்னும் சிறிது இடம் கொடுக்க முறையிடுகிறான் கலிபுருஷன். "எங்கெலாம் தங்கம், வைரம், பொய், கர்வம், பணம், ஆடம்பரம் முதலியவை தலைதூக்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் நீ இருந்துகொள் என்கிறான். அஃதாவது இப்படிப்பட்ட இடங்களில் கலி புருஷனின் மோசமான பக்க-விளைவுகள் அதிகம் காணப்படும்.
கலிமுற்றிவிட்டது என்று கூறிக்கொள்கிறோம். கலி முற்றிவிட்டதால், எதிலும் பரிசுத்தம் இருப்பதில்லை. நிர்ணயிக்கபட்ட வாழ்வு முறையை கடைபிடிக்க முடிவதில்லை. வேறு ஏதும் வழியே இல்லையா? என்றால் சிறு துகள் அளவேனும் உயர்த்திக்கொள்ள வழி நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
* தர்ம காரியங்கள் பேருக்காகவோ புகழுக்காகவோ மற்றும் 'பலன் எதிர்பாரமாலோ' செய்யலாம்.
* மருத்துவர்கள் வசதியற்ற நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்கலாம்.
* சங்கீதக்காரர்கள் தர்மத்திற்காக சில நேரம் சங்கீதம் பாடி, அதில் வரும் வருமானத்தை தானம் செய்யலாம்.
* எழுத்தாளர்கள் நல்ல விஷயங்களை, சத் கார்யங்கள் பற்றிய அறிவைப் பற்றி எழுதி விழிப்புணர்வு வரச்செய்யலாம்.
* இவை ஏதும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் திருமூலரின் வாக்கு படி, பிறரிடம், முகம் கோணாத அகமலர்ச்சியோடு கூடிய இன்சொற்களையாவது வழங்கலாம்.
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்ற திருமூலர் மந்திரத்தை முன்பே கண்டோம்.
குறைந்தது இனியன பேசி, இனியன சிந்தித்தால் எல்லாமே இனியவை. நம் அகத்தையே பிரதிபலிக்குமல்லவா உலகமும்? அகம் இனியதாய் இருப்பின், புறமும் இனிதாய் காண்பதே இயல்பு. இக்கருத்தையொத்த அருமையானதொரு தமிழ்ப்பாடலை வசனக்
கவிதைத் தொகுப்பில் பாரதி எழுதியிருக்கிறார்.
இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடு நன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை,
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம்.
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று.சாதல் இனிது.
பாரதி இனியவர்.
நன்றி: (do check out the link for further ref / to know about priceless infos)
http://hubpages.com/hub/Ancient-Great-Indians

காலச் சக்கரத்தின் சுழற்ச்சி நல்ல/இனிய முயற்ச்சிகளால் எழுச்சி பெறட்டும், கலியுக எண்ணங்களால் நாம் அடையப்போவது வீழ்ச்சிதான்... நல்ல பதிவு.
ReplyDelete//குறைந்தது இனியன பேசி, இனியன சிந்தித்தால் எல்லாமே இனியவை. நம் அகத்தையே பிரதிபலிக்குமல்லவா உலகமும்? அகம் இனியதாய் இருப்பின், புறமும் இனிதாய் காண்பதே இயல்பு.//
ReplyDeleteஇந்த இடத்தில் ஒப்புமைக்காக பாரதியின் கவிதை வரிகளை எடுத்தாள வேண்டும் என்கிற
எண்ணம் ஏற்பட்டது அற்புதம்1
அது மிகவும் பொருத்தமாகவும்,
எடுத்தாண்ட விஷயத்திற்கு
மிகுந்த அழகையும் கூட்டிவிட்டது.
அருமையான பதிவு.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in

//பாரதி இனியவர்.//
ReplyDeleteஆம்! பாரதி இனியவர்.
புஷ்பக விமானம் பற்றி எனக்கு தெரிந்த மற்றொரு விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த காலத்தில் புஷ்பக விமானம் போன்று ஒன்பது வகையான விமானங்கள் உருவாக்கி இருந்தார்களாம். அது நாம் இன்று பயன்படுத்தும் விமானம் போல் அல்லாது, காற்று, சூர்யா ஒளி, மின்னல் போன்ற இயற்கையாக கிடைக்கும் சக்தியை கொண்டு இயங்குமாறு வடிவமைத்து இருந்தார்களாம்... இவைகளை பற்றிய குறிப்புகள் அதர்வண வேததில் உள்ளன. ஆனால் எதுவும் முழுமையாக நம்மிடத்தில் இல்லை என்பது வருத்ததிற்குரியது.
ReplyDeletemikka nandri ivan! தெரியாத ஆனால் மிகுந்த ஆச்சரியமான விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஜீவி, ரொம்ப நாள் விடுப்பு, கோடை விடுமுறைக்கு சென்று விட்டதால், 2 மாதமாக பதிவுகள் இடவே இல்லை.
ReplyDelete