March 08, 2010

இறை வழிபாடு - ஹிந்து மதம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2)

இப்படி இருக்க்க வேண்டும் இப்படி இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் நம் மதத்தில் (எல்லா மதங்களிலும்) நிறைய உண்டு. அவற்றையெல்லாம் கடை பிடிக்கிறோமா எனபதே கேள்விக்குறி. விஞ்ஞானத்தின அடிப்படையில் மட்டுமே நம்பிக்கை வளர்கிறது. மற்ற புரியாத அல்லது புரிந்து கொள்ள இஷ்டப்படாத விஷயங்களை புறம் தள்ளிவிடுகிறோம். அவற்றை பைத்தியக்காரத்தனம் என்றோ மூட நம்பிக்கை என்றோ முத்திரைக் குத்தி மூலையில் அமரச் செய்துவிடுகிறோம். அவற்றுக்கென சில புராணக் கதைகளும், சான்றுகளும், குறிப்புகளும் ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றன.

கோவில்களிக்குச் சென்றால் கூட இன்னென்ன முறையில் இப்படி நடக்க வேண்டும் என்ற நியதிகள் உண்டு. நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியெல்லாம் நமக்கு அடிப்படை அறிவை புகட்டியிருக்கிறார்கள்.


கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
________________________________________________


1. நீராடாமலும் கை கால்களை சுத்தி செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது
2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்
3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது
4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக் கூடாது
5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை பெருமாளுக்கு அர்பணிக்கக் கூடாது
6. நாராயண மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது
7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது
8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.
11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.
12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக் கூடாது.
13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது.
14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும்.
15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.


அதிர்ந்து நடத்தலே கூடாது என்று குறிப்பிட்டு, பிரதக்ஷணம் செய்து வலம் வரும் பொழுது எப்படி பவ்யமாக நடக்க வேண்டும் என்பதற்கு சான்றாக "நிறை மாத கர்பிணி ஒருத்தி தலையில் எண்ணைக் குடம் வைத்து, காலில் விலங்கு அணிந்திருந்தால்" எப்படி மெல்லமாக நடப்பாளோ அப்படி நடக்கவேண்டும் என்கின்றனர்। இவையெல்லாம் ஒருமித்த கருத்துடனும், மனத்துடனும் இறைவனை நினைவதற்காக சொல்லப்பட்டது. கடமையே என்று வேகமாக மனம் ஈடுபாடின்றி ஓடுவதால் பயனில்லை என்று எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கோவில் படியில் உட்கார்ந்த பிறகு வீடு திரும்ப வேண்டும் என்ற விதி முறை பலருக்கும் தெரிந்திருக்கும். சிவன் கோவிலுக்கு சென்றால், வழிபட்டு திரும்புகையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவது ஏன்? மகாபலி போன்ற சிவ கணங்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு துணையாக புறப்பட்டு வருகின்றனர். அவர்களை, கோவிலிலேயே இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அமர்வது; அத்துடன், சிவநாமம் சொல்ல வேண்டும் என்பதும் ஐதீகம். சிவ "ஆக்ஞ்ஜையை பரிபாலிப்பொராகிய நீங்கள் இனி சந்நிதி திரும்பலாம், நான் விடை பெற்றுக்கொள்கிறேன்" என்ற அர்த்தம் தொனிக்க மந்திரம் ஜபித்து பின் விடை பெற வேண்டும்.


கோவில்களின் ஸ்தல புராணம் அதன் பெருமையையும் சிறப்பையும் தனித்துவத்தையும் எடுத்துக்கூற வல்லது. புராதன கோவில்கள் பலவற்றிற்கும் சிறப்புமிக்க ஸ்தல புராணம் இருக்கிறது. ஸ்தல புராணம் உள்ள கோவில்களுக்கு விசேஷ பிரார்த்தனைக்காக செல்வதுண்டு. கிரஹ ஷாந்திக்கு சூர்யனார் கோவிலும் அந்தந்த க்ரஹங்களுக்கு தனிப்பட்ட கோவில்களும் நாம் கேள்விபட்டுள்ளோம். அவற்றில் சனிபகவானுக்காக ப்ரீதி ப்ரீதி செய்வதற்கு திருநள்ளாறு கோவில் பிரசித்தி பெற்றது. நள மஹராஜன் கலியினால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து வணங்கி நலம் கண்டதாய் சரித்திரம் உண்டு. இது சிவஸ்தலம் ஆகும். ஒரு முறை தேவேந்திரன் வாலாசுரனுடன் சண்டையிட்ட போது முசுகுந்தன் என்ற சக்கரவர்த்தியின் உதவியுடன் வாலாசுரனை வீழ்த்தி வெற்றியை நாடினான். அதற்குப் பரிசாக அவன் வணங்கும் சிவலிங்கத்தை கேட்கிறான் முசுகுந்தன். தேவேந்தரனும் தான் வணங்கும் சிவலிங்கத்தைப் போலவே ஆறு லிங்கம் தருவித்து கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொன்றை பரிசளிக்கும் போதும், இதுவல்ல நான் கேட்ட லிங்கம் என மறுத்துவிடுகிறான் முசுகுந்தன். வேறுவழியின்றி தேவேந்திரன் தான் வணங்கும் சிவலிங்கமே முசுகுந்தனுக்கு தரவேண்டியதாய்ப் போனது. அந்தச் சிவலிங்கம் இன்றும் திருவையாற்றில் உள்ளது. தருவித்து வழங்கிய மற்ற ஆறு லிங்கங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளது. அவற்றில் ஒன்று திருநள்ளாரில் உள்ளதாம்.

திருநள்ளாற்றுக் கோவிலின் குளத்தை மண்டைக் குளம் என்று கூறுகின்றனர். பொய்க் கணக்கு எழுதி பிடிப்பட்ட கணக்கன், பால் வினியோகிக்கும் எளிய இடையன் மேல் பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறான். இடையனை சிறையில் அடைக்கின்றனர். அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, கணக்கனை கோவிலில் வந்து சத்தியம் செய்யச் சொல்கிறார். அவ்வண்ணமே கணக்கன் மறுதினம் பொய்யுரைத்ததும், சிவன் சூலாயுதத்தால் அவன் தலையை கொய்ய, மண்டை உருண்டோடுகிறது. அதற்கு வழிவிட்டு நந்தியே சற்றே விலகிக்கொள்கிறதாம். அந்த மண்டை விழுந்த இடம் மண்டைக் குளம் என்று வழங்கப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் சனிபகவானுக்கென தனி சந்நிதி இருக்கின்றது. வேறு கிரஹங்களுக்கு இல்லை. நளன் பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபட்ட இடமென சம்பந்தரும் தன் பாடலில் குறிப்பிட்டுள்ள பாடல் பெற்ற தளம்.

அந்தந்த க்ரஹங்களுக்கென நாயகர்களின் ப்ரீதி செய்தல் ஒருபுறம் இருந்தாலும், ஹனுமனை வேண்டினால் சனியின் பாதிப்பு மட்டுப்படும் என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே சங்கடம் நீங்க விநாயகனை வழிபடுதலும் பலர் செய்து வருகின்றனர். விக்னங்களை அறவே அறுப்பதால் விக்ன விநாயகன் என்று அவரை போற்றித் துதிக்கிறோம்.

ஒருமுறை விநாயகனின் பெருத்த வயிற்றை சந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட விநாயகன் அவன் மெருகும் அழகும் இனி தேய்ந்துப் போகக் கடவது என சபித்தார். மனம் வருந்தி சந்திரன் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தன் சங்கடத்தை போக்கிக்கொண்டதாகக் கூறுவர். சுக்லபட்ஷ சதுர்த்தியில் விரதம் இருந்து என்னை வழிபடுபவர்களின் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கும் என திருவாய்மொழிந்தார்.இது நமக்குத் தெரிந்த சங்கட-ஹர (சங்கஷ்ட - ஹர) சதுர்த்தி கதை. கேள்விப்பட்ட கதையும் கூட.

சோ அவர்களின் விளக்கம் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது. விநாயக சதுர்த்தி வளர்பிறை சதுர்த்தியில் வருவதால் தேய்பிறை சதுர்த்திக்குறிய தேவதை, தனது தினத்தையும் சிறப்புறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொண்டதாம். விநாயகரும் இனி தேய்பிறை சதுர்த்தியில் முறையாய் பூஜை செய்து விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும் என்று அருள்மொழிந்தாராம்.

பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதிக அளவில் வாழ்ந்துவந்த புரோஹிதர்கள் /சாஸ்த்ரிகள் குடும்பங்கள் இன்று க்ஷீணித்து விட்டது. இருக்கும் சிலரும் கூட தம் பிள்ளைகளை வேறு துறையில் முன்னேற விரும்பி அனுப்பிவைக்கிறார்கள். இத்துறையில் வருமானம் குறைந்து கொண்டே வருவதே அதற்குக் காரணம். வருமானம் மட்டுமின்றி மதிப்பும் மரியாதையும் கூட மட்டுப்பட்டுத் தான் வருகிறது. இத்தனை இக்கட்டுகளையும் தாண்டி இன்றைக்கும் இத்தொழிலை விட்டுவிடாமல் ஒரளவுக்கேனும் பராமரித்து வரும் புரோஹிதர்கள் பாராட்டுக்குறியவர்கள். கல்யாணம் முதல் கருமாதி வரை இவர்களின் சேவை தேவைப் படுகிறது.

11 comments:

  1. very nice!!!!
    vg.selvakumar@gmail.com

    ReplyDelete
  2. நன்றி செல்வகுமார் :)

    ReplyDelete
  3. //பல கதைகள் நமக்கு செவிவழிச் செல்வமாய் வந்தடைகிறது. சில கதைகள் புத்தகமார்கமாகவும் இன்றைக்கும் படித்து உணர்கிறோம். இனி வரும் நூற்றாண்டுகளில் எத்தனை பேர் இக்கதைகளை, மதக் கோட்பாடுகளை அதில் சொல்லப்பட்டிருக்கும் நன்மை தீமைகளை, ஏன் மந்திரங்களையும் கூட சரியாக ஒதப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி.//

    நியாயமான ஆதங்கம். ஆனால் எத்தனையோ இடர்பாடுகளைத் தாண்டி
    இன்றைக்கும் நமக்கு இந்த செல்வங்கள் கிடைத்திருப்பது தான் ஆனந்தம். நெஞ்சில் படிந்தவை அத்தனையும் அழியாச் செல்வங்களாய்த் தொடரட்டும்.
    கண்ணுக்குத் தெரிகிற இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.
    இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு மொழிகளில் மாற்றம் கண்டு கையடக்கப் புத்தகங்களாய் வேண்டுபவருக்கு வெகுச் சுலபமாய் கிடைக்கிற அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இது தான் உண்மையான வளர்ச்சியாகவும் தெரிகிறது.
    பல விவ்ரங்களைத் திரட்டி ஈடுபாட்டுடன் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ////இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு மொழிகளில் மாற்றம் கண்டு கையடக்கப் புத்தகங்களாய் வேண்டுபவருக்கு வெகுச் சுலபமாய் கிடைக்கிற அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இது தான் உண்மையான வளர்ச்சியாகவும்///

    உண்மை தான். :)

    கருத்துக்கு மிக்க நன்றி ஜீவி

    ReplyDelete
  5. அருமையான தொடக்கம்.அடிக்கடி எழுதுங்க..இது போல் நிறைய எழுதுங்க...

    ReplyDelete
  6. கோவில்களில் நடந்து கொள்ளும் முறை பற்றி அழகாக விளக்கப்பட்டுள்ளது...

    மிக்க நன்றி தோழி ஷக்திப்ரபா...

    ReplyDelete
  7. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Utube videos:
    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    www.youtube.com/watch?v=FOF51gv5uCo


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete