October 30, 2009

ஒருவனுக்கு வேறொருத்தி


விலகி ஓடும் உறவை எட்டிப் பிடிக்க
பழுத்து உதிரும் பூவை தக்க வைக்க
கிழக்கில் உதிப்பதை மேற்கில் மாற்ற
இறைவியோ இவள் திருத்திப் பார்க்க

வேறொருத்தியை நாடியதால்
வேரறுந்து சாய்ந்த தாம்பத்திய மரம்
வேற்றுப் பூவை நுகரத்துடித்து
ஆட்டம் முடித்து அழுது களைத்து
ஒட்டிக்கொள்ள உயிர்த்தெழும் போது
தொடுவானமாய் துவண்ட உறவில்
தொலைதூரம் தொலைந்த தலைவி

நினைவு அவன் பாரம் சுமக்கலாம்
சுமக்காமல் மலடியாய் மரிக்கலாம்
அவன் தேடி வரும் வேளையில்
அவள் புள்ளியாய் பெயரின்றி கரைந்துவிடலாம்
திரும்பி வரும் கோவலனை
விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை

15 comments:

  1. //விலகி ஓடும் உறவை எட்டிப் பிடிக்க
    பழுத்து உதிரும் பூவை தக்க வைக்க
    கிழக்கில் உதிப்பதை மேற்கில் மாற்ற
    இறைவியோ இவள் திருத்திப் பார்க்க//

    அழகு வரிகள்! தலைப்பும் முடித்த விதமும் அருமை.

    //திரும்பி வரும் கோவலனை
    விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
    இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை//

    மிகச் சரி ஷக்தி.

    ReplyDelete
  2. //ஆட்டம் முடித்து அழுது களைத்து
    ஒட்டிக்கொள்ள உயிர்த்தெழும் போது
    தொடுவானமாய் துவண்ட உறவில்//

    வார்த்தை பிண்ணல்(2சுழியா 3 சு doubt வர்து)

    //நினைவு அவன் பாரம் சுமக்க
    சுமக்காமல் மலடியாய்
    அவன் தேடி வரும் வேளையில்
    அவள் புள்ளியாய் பெயரின்றி கரைந்துவிடலாம்//
    அழகு ..

    //திரும்பி வரும் கோவலனை
    விரும்பி ஏற்கும் கண்ணகிகள்//
    அருமை

    ReplyDelete
  3. கடைசி மூன்று வரிகள் வைர இழையோடும் தங்க வரிகள்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. /திரும்பி வரும் கோவலனை
    விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
    இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை /

    உண்மை தான்

    /விலகி ஓடும் உறவை எட்டிப் பிடிக்க
    பழுத்து உதிரும் பூவை தக்க வைக்க
    கிழக்கில் உதிப்பதை மேற்கில் மாற்ற
    இறைவியோ இவள் திருத்திப் பார்க்க/

    அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete
  5. ஒருவனுக்கு வேறொருத்தி என்கிற தலைப்பே பலே சொல்ல வைக்கிறது ஷக்தி...

    //திரும்பி வரும் கோவலனை
    விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
    இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை//

    இது கூட ஆம் என்றுதான் சொல்ல வைக்கிறது...

    ReplyDelete
  6. மிக்க நன்றி ராமலக்ஷ்மி, அஷோக்,பெயர் சொல்ல விரும்பவில்லை, திகழ், அந்தோனி, கோபி :)

    ReplyDelete
  7. //ஒருவனுக்கு வேறொருத்தி என்கிற தலைப்பே பலே சொல்ல வைக்கிறது ஷக்தி...//

    நன்றி கோபி :(

    சக்களத்தின்னு வெச்சு ரெண்டு செக்கண்ட் கழிச்சு மாத்தினேன். அதுக்குள்ள அவசரபட்டு பதிவை பதிச்சுட்டேன். தமிழ்மணத்தில் சக்களத்தியாய் பதிந்துவிட்ட கவிதை :((

    ReplyDelete
  8. திரும்பி வரும் கோவலரை
    விரும்பி ஏற்கும் கண்ணகியர்
    காலம் வருமோ என்று
    கலங்கி நிற்கும் கோவலர்

    -- என்று முடித்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.'கலங்கிய' அவன் செயலிலாவது
    கடுகளவு சூடு கொடுத்த திருப்தி; அவ்வளவுதான்!

    ReplyDelete
  9. Nice praba... Azhagaana varigal. kaalam maarippochuda pasangalaanu stronga solli irukeenga.

    sudha

    ReplyDelete
  10. Nandri jeevi! Nice thought :)

    Thanks sudha! What a pleasant surprise to read u here :) thanks !

    ReplyDelete
  11. //திரும்பி வரும் கோவலனை
    விரும்பி ஏற்கும் கண்ணகிகள்
    இப்பொழுதெல்லாம் பிறப்பதில்லை//

    உண்மை...

    - உங்களுக்கு தெரிந்த ஒருவர்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. வணக்கம் (எனக்குத் தெரிந்த) யோகா :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

    ReplyDelete
  14. மிகவும் அருமை

    ReplyDelete