September 04, 2009

காதல் வந்துடுச்சா? வரப்போகுதா?

கிட்டே வராதே
என் வாய் குழறி மனம் திறந்துவிட்டால்?
புன்னகை உதிர்க்காதே
உன் புன்னகையின் கிறக்கத்தில்
என் புன்னகை தொலைந்துவிட்டால்?
.
தூரமாய் நின்றும் என்னைப் பார்த்துத் தொலையாதே
பார்வைக் கிரணங்களின் தகிப்பில் என் பாதை மாறிவிட்டால்?
கனவின் நிழலில் சுருண்டுகொள்ளாதே
சுவாசம் திணறி தூக்கத்திலேயே இறக்க நேரிட்டால்?
.
விலகி ஓட ஓட என்னை விரட்டாதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
என்னைக் காதலிப்பதை நீயே துப்பிவிட்டால்?
.
அடடா!
என் எழுத்துக்குள் தஞ்சம் புகுந்து இம்சிக்காதே
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
பயமாய் இருக்கிறது..
உன்னைக் காதலிப்பதை நானே உளறிவிட்டால்?

12 comments:

  1. //எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
    பயமாய் இருக்கிறது..
    என்னைக் காதலிப்பதை நீயே துப்பிவிட்டால்?
    .

    எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை,
    பயமாய் இருக்கிறது..
    உன்னைக் காதலிப்பதை நானே உளறிவிட்டால்?//

    பயம் விலகிவிட காதல் வெட்கம் கொள்ளும். அந்த நாணத்தில் தன்னை வெளிக்காட்டாமல் விலகிப் போகும். பிடிக்காமலும் வந்துவிடுவதுதான் காதல். மிகவும் அருமை ஷக்தி அவர்களே.

    ReplyDelete
  2. அழகான கவிதை. காதல் வயப்படத் தொடங்கும் பெண்ணின் மனதைப் படம் பிடித்தது போல் இருக்கிறது.

    ReplyDelete
  3. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது....

    கவிதை காதலை அழகாக சொல்லி இருக்கிறது... அதனால் பயமின்றி சொல்கிறேன்...

    சூப்பர்......

    காதல் கொண்ட இரு இதயங்கள் நேருக்கு நேராக சந்திக்கும் போது, அங்கே மௌனமே வார்த்தையாகிறது... அப்போது...

    மௌனம் எந்தன் வாய்மொழி... நாணம் எந்தன் தாய்மொழி...

    இன்னும் எழுதுங்கள்... அருமை ஷக்தி ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. // வெ.இராதாகிருஷ்ணன் said...

    பிடிக்காமலும் வந்துவிடுவதுதான் காதல்//

    உண்மை தான். மிக்க நன்றி இராதாக்ருஷ்ணன் :)

    //VISA said...
    arumai....
    //

    மிக்க நன்றி விசா :)


    // Deepa (#07420021555503028936) said...
    காதல் வயப்படத் தொடங்கும் பெண்ணின்
    //

    மிக்க நன்றி தீபா. :)

    "வயப்படத் தொடங்கும்" - நன்றி. அதைத் தான் படம்பிடித்து காட்ட ஒரு சிறு முயற்சி

    ReplyDelete
  5. // R.Gopi said...

    அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.... //

    முதல் முறை கேட்கும் போது இந்த வரிகளே ஒரு கவிதை மாதிரி தோணிச்சுங்க... (படம் எப்படியோ தெரியாது)

    // சூப்பர்...... //

    நன்றி கோபி :)

    // காதல் கொண்ட இரு இதயங்கள் நேருக்கு நேராக சந்திக்கும் போது, அங்கே மௌனமே வார்த்தையாகிறது... அப்போது...
    //


    ஹி ஹி அப்படீங்களா :P

    மீண்டும் நன்றி

    ReplyDelete
  6. காதல் கவிதை அருமை, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. //கனவின் நிழலில் சுருண்டுகொள்ளாதே
    சுவாசம் திணறி தூக்கத்திலேயே இறக்க நேரிட்டால்?//

    ஆகா...அருமை...

    //பயமாய் இருக்கிறது..
    உன்னைக் காதலிப்பதை நானே உளறிவிட்டால்?//

    அழகான ஆழமான வரிகள்...(அனுபவமோ?)

    ReplyDelete
  8. நன்றி பாலாஜி, வானவர் கோன் :)

    ReplyDelete
  9. ஒரு குழந்தைதனமான பெண்மையை உங்கள் கவிதையில் உணர்ந்தேன். உங்கள் குழ்ந்தைகளைவிட குழந்தையாய் நீங்கள் இருப்பீர். என் கனிப்பு சரியா? சொல்லுங்கள் சக்தி பிரபா..

    ReplyDelete
  10. நன்றி அஷோக் :)


    //உங்கள் குழ்ந்தைகளைவிட குழந்தையாய் நீங்கள் இருப்பீர். என் கனிப்பு சரியா? சொல்லுங்கள் சக்தி பிரபா..///

    அடடா! கவிதையை வைத்து கவிதை வரைந்தவரின் குழந்தைத்தனத்தை கணிக்க முற்பட்டுள்ளீர்களே :)

    ஆம். உண்மை தான் :)

    ReplyDelete
  11. ஏனென்றால் நான் ஒரு ஒவியன்...

    ஹஹஹஹாஹஹஹ்

    ReplyDelete