September 04, 2009

ம்ஹூம்...அழ மாட்டேன்!



பளீரென புன்னகை வரைந்து விடையளித்த பின்
இயல்பாய் இருக்க எத்தனித்து
இருபத்தி இரண்டாம் முறையாய் தோற்றுவிட்டேன்.
அதற்காகவெல்லாம் என்னால் அழமுடியாது.
.
இப்பொழுதெல்லாம் அழுவதில்லை தெரியுமா
மரத்துவிட்டது.
உன் நினைவுகளின் எச்சில் மிச்சமிருக்கிறது என்பதற்காக
அதைக் கண்ணீரிலா கரைக்க முடியும்?!
.
போதும் இன்னும் இம்சிக்காதே
விட்டுவிடு.
கடமைகள் காத்திருக்கிறது
அழ நேரமில்லை.
அய்யயோ... அழுவதில்லை என உனக்கு சத்தியம் வேறு செய்துள்ளேன்!
.
நல்லவேளை...
மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
நல்லவேளை....
மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை.

7 comments:

  1. //மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
    நல்லவேளை....
    மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை. //

    அருமை!

    ReplyDelete
  2. மிகவும் அட்டகாசமாக எழுதப்பட்டிருக்கிறது. அழுகையின் அழகு அழாமல் இருப்பதில் இருக்கிறது.

    நாம் என்ன நினைக்கிறோமோ அதையெல்லாம் கண்டுகொள்ள ஒரு கருவியை ஜப்பானில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது முழு பயனுக்கும் வந்துவிடுமெனில் மனம் அழும் ஓசையை மொழி பெயர்த்துவிடலாம்.

    மிக்க நன்றி ஷக்தி அவர்களே.

    ReplyDelete
  3. //மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
    மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை.//


    கவிதை அழகா இருக்கு சக்தி பிரபா

    ReplyDelete
  4. ம்ம்ம்.. அதே ஷக்திபிரபா. :) மற்ற கட்டுரைகளும் ஆழமா இருக்கு.

    நான்தான் வந்தேன்னு அடையாளத்துக்கு:

    மறத்துவிட்டது - மரத்துவிட்டது
    நொருங்கிவிட - நொறுங்கிவிட (அடுத்த கவிதையில்)

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நன்றி இராதாக்ருஷ்ணன், ஆயில்யன் :)

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர் :)

    ReplyDelete
  7. //Jayashree Govindarajan said...
    ம்ம்ம்.. அதே ஷக்திபிரபா. :) மற்ற கட்டுரைகளும் ஆழமா இருக்கு.

    //

    அடடா!!! வாங்க வாங்க :D நலமா ?
    சந்தோஷமா இருக்கு ரொம்ப நாள் கழித்து தட்டச்சிக் கொள்வது :D

    //நான்தான் வந்தேன்னு அடையாளத்துக்கு:

    மறத்துவிட்டது - மரத்துவிட்டது
    நொருங்கிவிட - நொறுங்கிவிட (அடுத்த கவிதையில்)//

    நன்றி நன்றி நன்றி ஜெயஸ்ரீ :D
    உறவு ஆரம்பித்ததும் பலப்பட்டதுமே இப்படித் தானே! :)) நீங்க சொல்லாம வேற யார் சொல்ல போறாங்க :) திருத்தி அமைக்கிறேன்.

    மிக்க நன்றி :)

    ReplyDelete