நமக்குப் பிறந்து
கைபிணைத்து பயணித்து
அகமலர்ந்து சிரித்து
சிந்தையில் சிலிர்த்து
அங்கமெலாம் பூரித்து
ரகசியங்கள் கிசுகிசுத்து
உயிரோடு உயிராக அழுது
கண்ணீரால் கவரிவீசி
உனக்காக நான்;
உனக்குள்ளே நான்;
வாக்குறுதி வழுவாமல்
வாழ்வின் விளிம்புவரை
உறுதியோடு உடன்வரும்
உண்மையான உறவு
ஆழ்மன அந்தரங்கம்...
ShakthiPrabha
No comments:
Post a Comment