அணுவும் ஆகாயமும்
உன் புகழ் பாடுது
உமியும் துமியும்
உனையே சுற்றுது
உனது பிம்பங்கள் அத்தனையும்
உன்னையே துதிக்கிறது
விராட்ரூபமென வியக்கிறது
வேளை தவறாமல் பூஜித்து
வேதம் ஓதி குளிர்கிறது; குளிர்விக்கிறது
யாகம் செய்து மகிழ்கிறது
அன்பு செய்து ஆள்கிறது
தவமும் தானமும் பரிவும்
சூட்டி உன்னையே நாடுகிறது
அறிவுக்கண் மூடிய நானும்
கட்டக் கடைசியில் நிற்கிறேன்
மழலை மொழியில் பிதற்றுகிறேன்.
வாயில் வந்ததை உமிழ்கிறேன்.
கூவிக் கூவி குழறுகிறேன்....
உடன் வந்தெனை ஏந்திக்கொள்.
விஸ்வரூபத்தின் அறிவூட்டி;
விசாலக் கைகளால் அள்ளிக்கொள்.
மார்பில் மாலையாய் சூடிக்கொள்.
மறுபடி விழாமல் இறுக்கிக்கொள்.
-ShakthiPrabha
No comments:
Post a Comment