November 15, 2023

ஓ மனமே ! ஓ மனமே!








உடல்  வீழ்ந்தால் எழலாம்
உள்ளம் வீழ்ந்தால் எழுமோ!
நிலத்தில் தவறினால் நிமிரலாம் - உன்
குணத்தில் தவறினால்  தலை  நிமிருமோ!

உருவம்  சறுக்கினால்  மீளலாம்
பருவம் சறுக்கினால் மாளுமோ!
மேனி பழுதினை நீக்கலாம் - மனதின்
கூனல் குறுகலும்  நீங்குமோ!

புறம் புரண்டால்   பயமிலை.
அகம்  பிறழ்ந்தால் பயனிலை; 
ஆதனால் எழுவாய்! 
நெடிது உயர்வாய்!
மனிதப் பிறப்பின் பயன் உணர்வாய்!
இனியும் வீழாமல் வளர்வாய்!


No comments:

Post a Comment