February 02, 2023

நமக்கு நாமே

 #Randomthoughts

சினிமாவில வில்லத்தனம் செய்யறவங்களைப் பார்த்தால், ரொம்ப ஒவரா பண்றாங்கன்னு தோணும். அந்த கதாபாத்திரம் செய்யும் உடல்ரீதியான கொடுமைகளை மட்டும் சொல்லலை.... வார்த்தைகளால பிறரை நோகடிக்கறதும் சேர்த்தி. அடுத்தவங்க தோத்து போயிட்டா கைகொட்டி சிரிக்கிறது..... பிறரை புண்படுத்தி, ரசிக்கிறது....இப்படி பலப்பல வகையில் வில்லத்தனம் வெளிப்படும்.
.
திரைப்படங்களில், மீடியாக்களில் "Larger than life" என்ற concept, உருவம் அல்லது ஆளுமைக்கு சொல்லப்படுவது மட்டுமல்ல.... . வில்லன்களாக சித்தரிக்கப்படுபவர்களின் மன விகாரங்களும் 'larger than reality' என்று நினைப்போம். 'சீச்சீ!! இவ்ளோ மோசமாவா இருப்பாங்க, கொஞ்சம் ஓவராத் தான் சித்தரிக்கறாங்க" அப்டீன்னு தோணலாம்.
.
கொஞ்சம் நேரமெடுத்து நாம யோசிப்போம். அவரவர் அடி மனதில் எழும் எண்ணங்களெல்லாம் வார்த்தைகளாக வெளியே வந்தால்? அவரவர் ஆணவங்களுக்கு வடிவம் கொடுத்தால்? அவரவர் மன விகாரங்களுக்கு வண்ணம் சேர்த்தால்?
.
அப்படி வடிவம் கொடுக்கும் பட்சத்தில் நம் மனம் நம்மை மதிப்பிடட்டும். உள்ளுறையும் ஆன்மா சான்றிதழ் வழங்கட்டும். உங்கள நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்களேன்..... நீங்க ஹீரோவா / zeroவா?
.
உங்களுக்கு பிடிக்காதவங்கன்னு யாருமே இல்லையா? அடுத்தவரின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடிகிறதா? அவர்களின் வெற்றிக்கு உங்களால் புன்னகைக்க முடிகிறதா? உங்களுக்கு விகாரங்கள் குறைவு. Congratulations!
.
அப்படியில்லாம.... உங்களுக்கு வேண்டாத ஒருத்தர் கஷ்டப்படும் போது, "நல்லா வேணும் உனக்கு" என்று உங்க மனசு நினைக்குதா? நமக்கு பிடிக்காத ஒருத்தர் சிறுமைப் படுத்தப்படும் போது மனசு துள்ளுதா? அவங்க தோல்வியில் நாம குதூகலிக்கறோமா? இதுமாதிரியான எண்ணங்கள், பிறரை எள்ளி நகையாடுவது, மேலும் ஆத்தாமை, கோபம் முதலிய attributes உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிறதா தோணிச்சுன்னா, " its time we heal the eluding villain hidden inside our personality.
.
நாம யாரு என்பது நம்ம ஆழ்மனதுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். கவனமாக இருப்போம்.

ShakthiPrabha 

No comments:

Post a Comment