October 01, 2019

லலிதா சஹஸ்ரநாமம் (851-875) (with English meanings)



Related image
Maa Tripuramalini (Jalandhar-Punjab) (Shakthi-Peetam) 


விபூதி விஸ்தாரம்

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-தப்த-ஜன-விஷ்ராந்தி தாயினீ;
சர்வோபனிஷதுத்குஷ்டா;
ஷாந்தியதீத-கலத்மிகா;
கம்பீரா;
ககனாந்தஸ்தா;
கர்விதா;
கான லோலுபா;
கல்பனா ரஹிதா;
காஷ்டா;
அகாந்தா;
காந்தார்த்த விக்ரஹா;
கார்ய காரண நிர்முக்தா;
காமகேலிதரங்கிதா ;
கனத் கனக தாடங்கா;
லீலா விக்ரஹ தாரிணீ;
அஜா;
க்ஷய வினிர்முக்தா;
முக்தா;
க்ஷிப்ர ப்ரசாதினீ;
அந்தர்முக சமாராத்யா;
பஹிர்முக சுதுர்லபா;
த்ரயீ;
த்ரிவர்க நிலயா;
த்ரிஸ்தா;
த்ரிபுரமாலினீ;


()
ஜன்ம = பிறப்பு
ஜர = வயோதிகம்
ம்ருத்யு = இறப்பு
தப்த = தாபம் - துன்பம்
ஜன = ஜனங்கள் ie ஜீவன்
விஷ்ராந்தி - ஓய்வு - நிறுத்தம் - இளைப்பாறுதல்
தாயின் = கொத்தல் - வழங்குதல்

#851 ஜன்ம-ம்ருத்யு-ஜரா-தப்த-ஜன-விஷ்ராந்தி தாயினீ = ஜீவர்களுக்கு பிறப்பு, மூப்பு இறப்பு என்ற சுழற்ச்சியிலிருந்து ஓய்வளித்து சாந்தியருள்பவள் 


()
சர்வ = எல்லாமும் - ஒவ்வொன்றும்
உபநிஷத் = உபநிஷதங்கள்
உத்குஷ்ட = அறிவித்தல்  

#852 சர்வோபனிஷதுத்குஷ்டா; = எல்லா உபநிஷதங்களாலும் பிரகடனப்படுத்தப்படுபவள் 



()
ஷாந்தி = அமைதி - சாந்தி
அதீத = அப்பாற்பட்ட
கலா = கலை
ஆத்மிகா = இயல்பை உடைய

#853 ஷாந்தியதீத-கலத்மிகா; =  சாந்தி நிலைக்கு அப்பாற்பட்டு திகழ்பவள் (முக்தி நிலை) 



#854  கம்பீரா; = புரிதலுக்கு அப்பாற்பட்டவள் - ஆழமானவள் - புதிரானவள்()


()
ககன = ஆகாசம் - சுவர்கம்
அந்த = உள் - நடுவில்
ஸ்தா = வசிப்பவள் 

#855 ககனாந்தஸ்தா; = அம்பரத்தில் இருப்பவள் 


#856 கர்விதா; = கர்வம் நிறைந்தவள்  

()
கான = கானம் - பாடல்
லோலுபா = இச்சை 

#857 கான லோலுபா; = இசையில் பெரும் நாட்டமுடையவள் 


()
கல்பனா = கற்பனை - புனைவு - அனுமானம் 
ரஹிதா = இல்லாத - விடுவிக்கப்பட்ட 

#858 கல்பனா ரஹிதா; = அனுமானங்கள், கற்பனைகளிலிருந்து  நீங்கியிருப்பவள்  (கற்பனைகளற்ற சத்தியாமவள்) 


()
காஷ்டா = உச்சி - முகடு


#859 காஷ்டா; = அதிஉன்னத இலக்கானவள் (இறுதி இலக்கு) 


()
அகா = அழுக்கு - பாபங்கள்
அந்த = முடிவு 


#860 அகாந்தா; = பாபங்களை நாசம் செய்பவள் - பாபநாசினி


()
காந்தா = அன்புக்குறியவர் - பதி (ஈஸ்வரன்)
அர்த = பாதி
விக்ரஹ =  தோற்றம்


#861 காந்தார்த்த விக்ரஹா; = ஆகிருதியின் பாதியை ஈஸ்வரனுடன் பகிர்ந்திருப்பவள் (அதி சூக்ஷும அரூப பிரம்ம நிலையிலும், புருஷ-பிரக்ருதி சரிசமமாக இணைவிலகாமல் பின்னப்பட்டிருக்கிறது)



()
கார்ய = செயல்
காரண = காரணம்
கார்யகாரணம் = செயலும் விளைவும்
நிர்முக்த = விடுதலை பெறுதல்


#862 கார்ய காரண நிர்முக்தா; = காரிய காரணங்களால் பாதிக்கப்படாதவள் - அதற்கு அப்பாற்பட்டவள் 


()
காம = காமேஸ்வரர் -  ஈஸ்வரன்
கேலி = விளையாட்டு
தரங்கித = அலைகள் - பெருக்கு


#863 காமகேலிதரங்கிதா ; = ஈஸ்வரனுடைய விளையாட்டில் (ஐக்கியத்தில்) வெள்ளமென பெருகும் இன்பத்தில் திளைப்பவள் 


()
கனதி = மினுமினுப்பு
கனக = தங்கம் - பொன்
தாடங்க = காதணி



#864 கனத் கனக தாடங்கா;  = ஒளிரும் பொற்காதணிகளை அணிந்திருப்பவள்


()
லீலா = விளையாட்டு - வேடிக்கை
விக்ரஹ = தோற்றம்
தாரண = தாங்குக்தல்


#865 லீலா விக்ரஹ தாரிணீ; = பல்வேறு தோற்ற வடிவங்கள் தரிப்பதை விளையாட்டென கருதுபவள்


#866 அஜா; = பிறப்பற்றவள்


()
க்ஷய = முடிவு (இறப்பு) - சிதைவு
விநிர்முக்த = விடுதலை பெறுதல் 

#867 க்ஷய வினிர்முக்தா; = அழிவற்றவள் 

#868 முக்தா; = அப்பழுக்கற்ற வெகுளி; கவர்ச்சியானவள்; அழகானவள் 


()
க்ஷிப்ரத்-க்ஷிப்ரம் = விரைவில் - உடனே
ப்ரசாதின் = மகிழ்தல்

#869 க்ஷிப்ர ப்ரசாதினீ; = எளிதில் (கணத்தில்) அகமகிழ்பவள் 


()
அந்தர்முக = உள்முகமாக
சமாராதன் = திருப்திபடுத்துதல்


#870 அந்தர்முக சமாராத்யா; = உள்முகமாக தியானிக்கும் ஆத்மஞானிகளால் திருப்திபடுத்தபடுபவள் - ஆராதிக்கப்படுபவள் 


()
பஹிர்முக = வெளிமுகமாக - புறசெயல்பாடு சிந்தனைகள்
துர்லபா = அடைவதற்கு கடினமான


#871 பஹிர்முக சுதுர்லபா; = உலகாய சிந்தனை-செயற்பாடுகளை உடையவர்களுக்கு கடினமான இலக்காகுபவள் 


#872 த்ரயீ; = மூவேதமாகியவள் (ரிக், யஜுர், சாம வேதங்கள்) *


* ஸ்தோத்திரங்கள், யாக யக்ஞங்கள், மெட்டுடைய மந்திரங்கள் முதலானவை ரிக், யஜுர், சாம வேதங்களில் தான் முக்கியமாக பதிவாகியிருக்கிறது. இம்மூன்றையுமே "த்ரயீ" எனும் நாமம் விளக்குவதால்  அதர்வண வேதம் இதில் சேர்க்கப்படவில்லை. 



()
த்ரிவர்க = மூன்று நிலைகள் (தர்ம-அர்த்த-காம எனும் புருஷர்த்தங்கள்)
நிலயா = நிலைத்திருத்தல்


#873 த்ரிவர்க நிலயா; = மூன்று நிலைகளில் உறைபவள் (புருஷார்த்த நிலைகள்) * 

* (தர்ம-அர்த்த-காம எனும் மூன்று புருஷார்த்தங்கள் ie மனித இலக்குகள், இறுதியில்  மோக்ஷத்திற்கு இட்டுச்செல்லக் கூடியவை) 




#874 த்ரிஸ்தா; = திரித்துவத்தில் (திரி தத்துவம்) இருப்பவள் (மூன்றான பிரம்ம, விஷ்ணு மஹேஷ்வர,  மூவுலகங்கள், முக்குணங்கள், முக்காலங்கள் முதலியவை) 



#875 த்ரிபுர மாலினீ; = திரிபுரமாலினியாக ஸ்ரீசக்கரத்தின் ஆறாம் ஆவர்ணத்தை வழி நடத்துபவள் (ஸ்ரீசக்கரத்தின் ஆறம் ஆவர்ண தேவதாரூபம் திரிபுரமாலினி) 




* திரிபுரா என்பது ஜீவனின் மூன்று நிலைகளான விழிப்பு, கனவு, உறக்க நிலைகளையும் குறிக்கும். மாலினி என்பது துர்கையை குறிக்கும் பெயர். ... அவளே இந்நிலைகளை ஆளுபவள் என்பதும் கருத்து . 


Lalitha Sahasranama (851 - 875) 


Vibhoothi  Visthaaram



Janma Mrutyu Jara thaptha Jana vishranthi DhayinI;
Sarvopanishad-udhgushtA;
Shanthyatheetha-kalaathmikA;
GambeerA;
GagananthaSthA;
GarvithA;
Gaana LolupA;
Kalpanaa RahithA;
KashtA;
akaNthA;
Kaanthardha VigrahA;
Karya kaaraNa NirmukthA;
Kama Keli TharangithA; 
Kanath Kanaka ThandankA;
Leela Vigraha DharinI;
Aja;
Kshaya vinirmukthA;
MugdhA;
Kshipra prasaadhinI;
AntharMukha SamaradhyA;
BahirMukha sudhurlabhA;
ThrayI;
Thrivarga nilayA;
ThristhA;

Tripura maalinI;




()
Janma = birth
Jara = Aging
Mrutyu = death
Thaptha = distressed
Jana = people
Vishranthi = Abatement - rest - cessation - repose
Dhayini = Giver

#851 Janma Mruthyu Jara Thaptha jana vishranthi Dhayini = She Who gives peace and rest to jivas (people, individual souls) suffering from birth, oldage and death



()
Sarva = every - all
Upanishad = Sacred test of upanishads
udhgusta = to announce louldy 

#852 Sarvopanishad-udhgushtA; = Who is proclaimed by all upanishads


()
Shanthi = peace
atheetha = to surpass
kalaa = art
AthmikA = characterized by 

#853 Shanthyatheetha-kalaathmikA; = Who is in the state of 'transcended peace'



#854 GambeerA; = Who is incomprehensible (deep, enimgmatic) 


()
gagan = sky- heaven
antha = amidst - in 
Stha = stays 

#855 GagananthaSthA; = Who resides in ether (heaven, sky) 




#856 GarvithA; = She who has pride 



()
Gaana = songs
lolupa = great desire 

#857 Gaana LolupA; = Who is enchanted by music


()
Kalpana = assuming - imagining
Rahitha = is devoid of - free from 

#858 Kalpanaa RahithA; = She who is free from assuptions (because she is reality) 


()
Kaashtaa = top - summit - highest limit

#859 KashtA = She who sits as the highest goal 


()
agha = sin - impurity
antha = end  

#860 aghanthA; = She who removes sins



()
Kaantha = beloved (Shiva)
ardha = half
Vigraha = physique, figurine 

#861 Kaanthardha VigrahA; = Whose form is equally shared by Shiva (Even in highest state, Purush and Prakruthi are inseperably and equally interlaced)



()
Kaarya = deed 
KaaraNa = cause
KaryakaraNa =  both cause and effect 
Nirmuktha = is liberated  

#862 KaryakaaraNa NirmukthA; = Who is unbound by cause and effect



()
Kama = Kameshvar - Shiva
Kheli  = play
Tharangitha = overflowing - waves 

#863 Kama Keli TharangithA; = Whose is overflowing with waves of pleasure 
with the union (play) of Shiva (Srungaara Rasa)


()
Kanathi = Shine
Kanaka = Gold
Thadanka = Ear-ornament

#864 Kanath Kanaka ThandankA; = Who wears gleaming golden ear-ornaments (ear-studs)



()
Leela = amusement - play
Vigraha = physique - figurine
DharaNa = to wear

#865 Leela Vigraha DharinI; = She for whom manifesting and assuming different forms, is  a sport 



#866 aja; = She who is unborn 



()
Kshaya = decay - termination (death)
Vinirmuktha = is free from

#867 Kshaya vinirmukthA; = Who is exempted from death (immortal) 



#868 MugdhA; = She Who is lovely, naive and attractive



()
Kshiprat - Kshipram = quickly - immediately
Prasadhin = soothing - pleasing

#869 Kshipra prasaadhinI; = She who is pleased quickly 


()
Antharmukha = turned inwards 
Samaradhan = Gratification 

#870 AntharMukha SamaradhyA; = Who is gratified by those who are turned inwards 
(Gnaanis, wisemen)



()
Bahirmukha= one who has  mind directed to external things
Thurlabha= very difficult to attain 

#871 BahirMukha sudhurlabhA; = Who is a laborious goal and difficult to be grasped
for those who are materalistic


#872 ThrayI; = Who is the three Vedhas (Rig, Yajur and Saama Vedha) *

* Where as Trayi refers to  three kinds of mantras: the prayer mantras, the sacrificial mantras and the lyrical mantras, which are mainly incorporated in the Rig, Yaju and Samaveda. That is the reason for AtharvaNa vEdha not being mentioned in this naama. 





()
Thrivarga = Three aspects (Dharma-artha-kaama as purusharthas)
Nilayaa = stays put 

#873 Thrivarga nilayA; = Who is present in the three aspects of purusharthas (Dharma-artha-Kama as purusharthas ie aim of human life which ultimately leads to liberation) 



#874 ThristhA; = Who is present in trinity (Brahma vishnu maheshvar, Three worlds, three aspects, three gunas etc) 



#875 TripuraMaalinI; = Who is the presiding deity of sixth avarNa of Shrichakra. *


* Tripura also refers to three states of consciousness (deep sleep, dream and awake). Malini refers to Durga, ie. to mean she governs the three levels of consciousness. 


No comments:

Post a Comment