February 11, 2019

அரிவட்டாய நாயனார்.

Image result for அரிவாட்டாய



சிவபக்தி கொண்ட கண்மங்கலம் எனும் கிராமத்தில் வாழ்ந்த சோழ வேளாளர். தினம் சிவ வழிபாட்டுக்கு செந்நெல் அரிசியும், கீரையும் மாவடுவும் இறைவனுக்கு அமுது படைத்து வந்தார். அவ்விடத்தில் குடிகொண்ட நீள்நெறிநாதர் இவரை சோதனைக்கு உட்படுத்தி, வளம் குன்றச் செய்தும், திருப்பணி மறவாது செய்து வந்தார். கூலி வேலைக்கு உடம்பை வருத்தி, பொருளீட்டு பெருமாளுக்கு தொண்டு செய்தார். சிறு கீரையும், சில நேரம் வெறும் நீரும் மட்டுமே தமக்கு வாய்த்த போதும் இறைவனுக்கு மறவாமல் படையலிட்டு வந்தார். திருநாளாம் பெருநாள் ஒன்றில் அமுதாக்கி இறைவனுக்கு எடுத்து செல்லும் வழியில் மட்கலம் உடைந்து அத்தனையும் சிதறியது. இறைவன்

பசியாற அமுதளிக்க முடியாமல் மிக நொந்து மனம் உடைந்தவாகி, தமது கழுத்தை அரிவாள் கொண்டு அரிந்து உயிர் விடத்துணிந்தார். நீள்நெறிநாதனானவரும் உடன் இரங்கி, அவரை தடுத்தாட்கொண்டு ரிஷப வானகனாக காட்சி தந்து சிவலோக பிராப்தியருளி இவர் தொண்டை உலகோர் உணரும் வண்ணம் நீங்கா புகழ்பெறச் செய்தார்.
நாயன்மார்கள் சிலர் செய்த தொண்டு சிறுதொண்டாயினும் அதை வறுமையிலும் தொடர்ந்தமையாலும், தம் பசியை பொருட்டாக கருதாமல் இறைவனுக்கே வாழ்வை அற்பணித்ததாலும், உயிர் துறந்தேனும் இறைவனுக்கு தொண்டாற்ற எண்ணிய சீரிய பக்தியாலும் அவை மகுடமாக ஜொலிக்கின்றன.

ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment