August 09, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (351-357) (with English meanings)க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபம்

வாமகேசி;
வஹ்னி மண்டல வாசினீ;
பக்திமத் கல்ப-லதிகா;
பஷுபாஷ விமோசனீ;
சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா;
சதாசார ப்ரவர்த்திகா;
தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா;

() வாம = அழகிய - எழில் நிறைந்த
    கேஷ = கேசம்

#351 வாமகேஷி = வனப்பான கேசத்தையுடையவள்

() வஹ்னி = நெருப்பு
    மண்டல = கோள வீதி - பிரந்தியம் - பகுதி
    வாசினீ = வாசம் செய்பவள்

#352 வஹ்னி-மண்டல வாசினீ = மூலாதாரத்தில் நிலைகொண்டிருப்பவள் (குண்டலினியாக மூலாதாரத்தில் நிலைத்திருப்பவள் )

() பக்திமத் = பக்தர்கள்
   கல்ப = எண்ணம் / நோக்கு / சிந்தனை
   லதிகா = இளம் கொடி
   கல்ப-லதிகா = இச்சைகளை பூர்த்தி செய்யும் / வரமருளும் தெய்வீகக் கொடி

#353 பக்திமத் கல்ப-லதிகா = பக்தர்களுக்கு இச்சா பூர்த்தி அனுக்ரஹிக்கும் கல்பலதிகக் கொடியானவள்

() பஷுபாஷ = லௌகீக விஷயார்த்தங்களின் ஈடுபாடு ; பந்தபாசங்கள்
விமோசன = விடிவு, விடுதலை

#354 பஷுபாஷ விமோசனீ = அஞ்ஞானத்தினால் விளையும் தளைகளிலிருந்து முக்தியருள்பவள்

() சம்ஹ்ருதா = அழித்தல் - அழிவு
  ஷேஷ = மிகுதி - எஞ்சியது
  பாஷாண்ட = தவறான கோட்பாடுகள் உடையோர்

#355 சம்ஹ்ருதா ஷேஷ பாஷாண்டா = தவறியோரை தண்டிப்பவள் *

சிலர் பாஷாண்டா எனும் சொல்லுக்கு இறைமறுப்பாளர்கள் அல்லது இறைக் கொள்கைகளை மறுப்பவர்கள் என்று அர்த்தம் கற்பிக்கலாம். இவ்விடத்தில் 'heretic' என்ற சொல்லுக்கு, " அற நூல்கள் கூறும் நல்லவைகளில் நம்பிக்கை அற்றவர்" அல்லது அதை பின்ப்ற்றாதவர் என்று பொருள் கொள்ளவேண்டும். i.e. நற்சிந்தனை அல்லதவர். நற்செயல் புரியாதவர் என்று புரிதல்.

() சத = சத்துவம் - சத்தியம் - உண்மை
ஆசார = ஒழுக்கம் - நன்னடத்தை
ப்ரவர்திக = காரணமாதல் - ஊக்குவித்தல்

#356 சதாசார ப்ரவர்த்திகா = நல்லொழுக்கத்தை சிந்தனைகளின் காரணமாகி அதனைத் தூண்டுபவள்

() தாப = வலி (மனம் அல்லது உடல் சார்ந்த உபாதை) - துன்பம்
த்ரயாக்னி = மூன்று வகை அக்னி (த்ரய = மூன்று)
சந்தப்த = அவதியுற்ற - துயருற்ற
சம = இணை - சமமான
ஆஹ்லாதன = திருப்தியுறச்செய்தல் - மகிழ்வூட்டல்
சந்திரிகா = நிலவொளி

#357 தாபத்ரயாக்னி சந்தப்த சமாஹ்லாதன சந்திரிகா = முப்பெரும் அக்னியால் அல்லலுறுவோருக்கெல்ல்லாம் நிலவொளியின் குளுர்ச்சியைப் போல் ஆறுதலளிப்பவள் *

* மூன்று வகை தாபங்கள் என்பன:
ஆதிபௌதிக: இயற்கை சீற்றத்தாலும், பிற உயிர்களாலும் நேரும் இன்னல்கள்
ஆதியாத்மிக: சுயத்தின் மன மற்றும் உடல் உபாதைகளால் விளையும் இன்னல்
ஆதிதைவிக: நுண் சக்தி / சூக்ஷ்ம சக்தியால் விளையும் இன்னல்கள்

(தொடரும்)

Thanks and Reference:


Lalitha Sahasranama (351 - 357)

Kshetra Kshetragnja Roopam


Vaama kEshi;
Vahni-mandala Vaasini;
Bhakthimat kalpa lathika;
Pashupaasha vimochani;
Samhrutha Shesha paashanda;
Sath-aachara pravarthika;
Thapathrayagni santhaptha samaahlaadhana chandrika;


() Vaama = pretty - lovely
   Kesha = hair

#351 Vaama Keshi = Who has beautiful, lavish hair

() Vahni = fire
   Mandala = orbit - path of heavenly body - zone, area or region
   Vaasini = live-dwell

#352 Vahni-mandala Vaasini = Who resides in mooladhara *

* Different interpretations are around. Here it may be interpreted that she who resides in mooladhara in the form of sacred fire i.e Kundalini shakthi.

() Bhakthimat = devoted
   Kalpa = idea or thought
  Lathika = small creeper
  Kalpa-lathika = Auspicious creeper that fulfills wishes or desires.

#353 bhakthimat kalpa lathika = Who is kalpa-lathika (granting boon) to those who
are devoted to her.

() Pashupaasha = bondage due to materialistic / mundane needs
   Vimochana = Liberation

#354 Pasupaasa vimochani = Who liberates us from ignorance (mundane bonds which are worldy in nature)

() Samhrutha destroy
   Shesha = remains - surplus - residues
   Paashanda = heretical - unorthodox - non-theistic (atheist)

#355 Samhrutha Sesha Paashanda = Who destroys heretics *

It is wise to remember heretics here mean those who do not follow that which is prescribed in sacred doctrines. Sacred texts generally talks on leading good disciplined life and ways to uplift themselves from the shackles of the mundane existence. Here atheist or heretic generally suppose to mean those who do not stick to harmonious way of living or who cause injury to others (who are ill in nature)


() Sat = satva - sathya- truth
aachara = discipline - good conduct
Pravarthika = who causes - makes things happen - inspires

#356 Sadhaachara pravarthika = She who causes and inspires right conduct (upon all beings)

() Thaapa = pain (mental or physical) - misery
    Thrayagni = three types of fire (thraya = three)
   Sandapta = pained - inflamed - wearied
   Sama = equal - to match
   Aahlaadhana = act of gladdening - giving happiness
   Chandra = moonshine

#357 Thapathrayagni Sandhapta Samaahlaadhana Chandrika = She who soothes like moonlight
to jeevas suferring from three types of agony *

* Three types of misery includes: 

Aadhibhautika : Disturbances from nature including pancha bhoothas and other external
forces.
Aadhyaathmika: distubarnaces from vibrational plane (of body and mind)
Aadhidaivika : Distbances influenced by astral forces

Thanks and Reference:


(to continue)


No comments:

Post a Comment