July 12, 2018

லலிதா சஹஸ்ரநாமம் ( 334 - 340 ) (with English meanings)


பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்

விஷ்வாதிகா;

வேத வேத்யா;
விந்த்யாசல நிவாசினீ;
விதாத்ரீ;
வேத ஜனனீ;
விஷ்ணு மாயா;
விலாசினீ;


() விஷ்வ = ஜகம் - ஜகத் - உலகம் - பிரபஞ்சம்
   அதிக் = அதை விட - அதிகமாக - மேம்பட்ட - அசாதாரணமான


#334 விஷ்வாதிகா = ஜகத்திற்கு அப்பாற்பட்டவள் - ( அறிவுக்கு புலப்படாதவள் - புலனுக்கெட்டாதவள் ) 

() வேத்யா = அறியப்படுவது - அறிவினால் உணரப்படும் பொருள் 
   வேத = மெய்ப்பொருள் - மெய்யறிவு


#335 வேத வேத்யா = வேதத்தினால் உணரப்படுபவள் *

* வேதம் என்பது மெய்யறிவைக் குறிக்கும். மெய்ப்பொருளை உணர்ந்து உய்தலை  உணர்த்துகிறது. இப்பயணம் கர்மம், பக்தி, ஞானம் போன்ற எவ்வழியிலும் உணரப்படலாம்.


() அசல = மலை

#336 விந்தியாசல நிவாசினீ = விந்திய மலைத்தொடர்களில் வாசம் செய்பவள்

() விதாத்ரீ = தாய் - சிருஷ்டிப்பவள்

#337 விதாத்ரீ = அன்னை (பிரபஞ்சத்தை சிருஷ்டித்து பரிபாலிக்கும் மஹாமாதா)

() ஜனனீ = பிறப்பிக்க செய்பவள் - மாதா

#338 வேத ஜனனீ = வேதத்தை சிருஷ்டித்தவள்

() மாயா = மாயை

#339 விஷ்ணு மாயா = விஷ்ணுவின் மாயா சக்தியாய் விளங்குபவள் *

* மஹாவிஷ்ணு பிரபஞ்சத்தை பரிபாலிப்பவர், அதில் லலிதாம்பிகையே மஹாமாயையாய் உட்புகுந்து பிரபஞ்ச செயல்பாட்டுக்கு துணைபுரிகிறாள்.


() விலாஸ் = விளையாட்டு

#340 விலாசினி = விளையாட்டில் ஈடுபடுபவள் - கேளிக்கைகளில் களிப்பவள் ( தனது சிருஷ்டியுடன் ) *

* மாயத் திரையிட்டு பிரபஞ்சத்தை ஊடுருவி, மெய்யறிவை ஜீவாத்மாக்களிடமிருந்து மறைத்து,  கண்ணாமூச்சி ஆடுவதையே அம்பிகையின் கேளிக்கை என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.



( பஞ்ச பிரம்ம ஸ்வரூபம் முற்றிற்று )

(அடுத்த நாமாக்கள் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ரூபத்தை விளக்கும்)

(தொடரும்) 




Lalitha Sahasranama (334 - 340)

Pancha Brahma Swaroopam

Viswadhika;
Veda vEdhyaa;
Vindhyachala Nivaasini;
Vidhaathri;
Vedha Janani;
Vishnu Maya;
Vilaasini;


() Vishva = universe 
    adhik = much - more - extraordinary - better


#334 vishva-adhika = Who is surpasses the universe ( its theories or doctrines )

() Vedhya = That which is learnt / object of knowledge
   Vedha = Knowledge that is true


#335 Vedha Vedhyaa = She who is the knowledge obtained through Vedha *

* Vedha here means knowledge of truth, it can be obtained by any path (gnaana, karma, bhakthi) on our journey towards supreme.


() achala = mountain

#336 Vindhyachala Nivaasini = Who resides in vidhyachala mountain ranges.

() Vidhaathri - Female creator - Mother - Creator

#337 Vidhaathri = The Mother (creates and fosters the megacosm)

() Janani = Mother

#338 Veda Janani = Who created the Veda (Supreme cause of veda)

() Maya = illusion - unreality

#339 Vishnu Maya = Who functions as the illusory power of Vishnu *

* Mahavishnu sustains the universe, in which Mahamaya has pervaded as illusory veil.

() Vilas = Play - sport

#340 Vilaasini = Who indulges playfully ( with her creation ) *

* By being playful we may understand that she veils the knowledge, plays trick and hides the brahman(truth) away from the reach of Mortal Jivas.


( We finish names reflecting "Pancha Brahma Swaroopam" ) 
( Next names would enumerate her "Kshetra Kshetrajna roopam" )

(to continue)

No comments:

Post a Comment