ஆளுக்கொரு திசையில் குதிக்கிறார்கள்
அனாவசியமாய் பதறுகிறார்கள்
ஆராயாமல் உளறுகிறார்கள்
ஆரய்ந்தும் சிலர் திணறுகிறார்கள்
சுட்டும் விரல்களெல்லாம்
சுட்டிக் காட்டியே வலித்தன
கருப்பிலும் வெளுப்பு கலக்கிறது
வெளுப்பும் கூட பழுப்பாகிவிட்டது
சிவப்பு மட்டும் மேலோங்கி
நிறங்களெல்லாம் குருதியென வழிய
தன்னை இழந்தது மனிதம்
- ஷக்திப்ரபா
பொதுவான நிகழ்வைச் சொல்லிப் போனவிதம் அருமை
ReplyDeleteமிக்க நன்றி வரவுக்கு. நிகழ்வுகளெல்லாம் இப்படித் தான் இருக்கிறது என்பது வருத்தம்.
Delete