மாரீசம்
________
உழவுக்கு பெயரளவில் வந்தனை செய்து
ஊரெங்கும் குப்பைக்கூளங்களை தூவி
விலையுயர்ந்த 'மால்களில்'
இடைத்தரகர்ளின் பணப்பை நிரப்பி
அரிசிப் பருப்பை அலுங்காமல் அள்ளி செல்லும் நமக்கு
கடைநிலை விவசாயியைப் பற்றி
கவலை கொள்ள நேரமில்லை.
()
ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை காப்பாற்ற துடித்தாலும்
குடும்பத்துடன் கிராமத்துக்கு குடிபெயர
கிடிக்கிப்பிடியாய் பல பிரச்சனைகள்.
()
பொங்கலிடும் ஒரு நாள் கூத்திற்கு
தெய்வமாய் பரிமளிக்கும் மாக்கள்.
()
இயற்கை உரமூற்றி
சோறும் நீரும் அள்ளி வழங்கும் ஆதவனுக்கு
நன்றி கூறும் பாசாங்கில்
பட்டையும் பகட்டையும் பறைசாற்றி
பொங்கிய அரிசியுடன் வெல்லம் திணித்து
நெய்வழிய பதமாய் உண்டு
செல்ஃபியுடன் கும்மியடிக்கும் மற்றுமொரு நாளை.....
நட்புறவுகளுடன் நேசங்கள் பரிமாறி
அளவளாவும் ஆறுதலுக்காக பொங்கி மகிழ்வோம்
//நட்புறவுகளுடன் நேசங்கள் பரிமாறி
ReplyDeleteஅளவளாவும் ஆறுதலுக்காக பொங்கி மகிழ்வோம்//
ஆ.....தங்கமான (ஆதங்கமான) வரிகள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மற்ற அனைத்து நட்புகளுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
nandri vai.gopalakrishnan sir....ethanai naal kazhithuvanthaalum muthalil varugai thanthu pathivittu ookamaLikireergaL. nandri nandri. pongal nalvazhthukkaL
ReplyDeleteபொங்கல் என்றாலோ ஏதாவது பண்டிகை என்றாலோ இதுதானே வழக்கமாய் நடக்கிறது வாழ்த்தாவது சொல்லிக் கொள்கிறோமே
ReplyDeleteஎல்லாப் பண்டிகைகளுக்கும் இதே நிலைதான்.. பண்டிகைக்கான காரணங்கள் மறைந்து விட்டன.. பகட்டுக்கான காரணங்கள் வெளிக்காட்டுகின்றன..
ReplyDeleteநன்றி ஜி.எம்.பி மற்றும் அரவ்ந்த் கார்த்திக். பகட்டும் கேளிக்கையும் தம்பட்டுமுமே பண்டிகைகளாகி வரும் காலகட்டம்.
ReplyDelete