November 20, 2014

புத்தர்கள் - zen poem - தமிழாக்க முயற்சி



Hakuin Ekaku ஜென் மதத்தில் பெரிதும் பேசப்பட்டவர்.  ஜென் மதத்தின் புகழ்மிக்க சீர்த்திருத்தவாதி. 

அழகிய இளம் பெண் ஒருத்தி Hakuin வசிக்கும்  நகரத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள், அப்பெண் கருவுற்றிருப்பதை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் மன வருத்தத்துக்கும் ஆளானார்கள்.அவல நிலைக்கு காரணமான ஆண் மகனைக் காட்டிக்கொடுக்க அப்பெண் விரும்பவில்லை. 

பெற்றோரின் வற்புறுத்தலை தாங்க இயலாமல் அவள் "hakuin ekaku"வைச் சுட்டிக்காட்டி, அவரே தன் பரிதாப நிலைக்கு காரணமென புகார் கூறினாள். 

கடும் கோபத்திற்கு ஆளான அவள் பெற்றோர் உடனே hakuin'ஐ சந்தித்து விளக்கம் கேட்க,  hakuinன் "அப்படியா?" என்ற பதில் அளித்தார்.

நாட்கள் செல்லச் செல்ல அவர் செல்வாக்கும் மரியாதையும் வெகுவாக குறைந்தது. மக்கள் பேசிய அவதூறு மொழிகளை அவர் பொருட்படுத்தாது, "அப்படியா" என்று  பதிலுரைத்தவாறு இருந்தார். 

குழந்தை பிறப்பின் பின்னர், அக்குழந்தையை hakuin பாதுகாப்பில் பெண்ணின் பெற்றோர் விட்டுச் சென்றனர். குழந்தையை பாலூட்டிச் சீராட்டி பெரிதும் அன்புடன் அவர் வளர்த்து வந்தார். 

ஒரு வருடம் பூர்த்தியாகும் தருவாயில் இளம் பெண்ணிற்கு தான் செய்த தவறு மிகவும் உறுத்தவே அவள் உண்மையை பெற்றோரிடம் ஒப்புக்கொண்டாள். Hakuin இதற்கு காரணம் அல்ல என்று விளக்கினாள். 

குழந்தையின் தந்தை மீன் சந்தையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரணன் என்று புரிந்த பெற்றோர்கள் தங்கள் செயலுக்கு மிகவும் வருந்தி, hakuin-னிடம் மன்னிப்பு கோர விரைந்தனர். 

அத்தனையும் கேட்டுக் கொண்ட Hakuin மீண்டும் புன்னகையுடன் "அப்படியா?" என்று முடித்தார்.  

**

கவனிக்கத்தக்கதும் பெரிதும் பேசப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சியாக இது பதிக்கப்படுகிறது.  அவர் அடைந்த "ஸ்தித ப்ரக்ஞ" நிலைக்கு நல்ல எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி திகழ்ந்தது.

அவர் பிறந்த ஊரான hara என்ற கிராமத்தில் ஜென் பயிற்சி மையத்தை உருவாக்கினர். தனது 83-ஆம் வயதில் இவ்விடத்திலேயே hakuin ekaku உயிர் நீத்தார்.

A zen poem by Hakuin Ekaku:

All sentient beings are essentially Buddhas.
As with water and ice, there is no ice without water;
apart from sentient beings, there are no Buddhas.
Not knowing how close the truth is,
we seek it far away
- what a pity!

- Hakuin Ekaku Zenji 


சேதனம் அனைத்துமே புத்தத்தின் தத்துவம்.
பனிவடிவில் மறைந்துறையும்
பாயும் நீரைப் போல,
உள்ளுரையும் தத்துவம்; 
நீரின்றி அமையாது பனித்துளி.
சேதனம் அனைத்துமே 
புத்தர்களேயன்றி வேறில்லை.
சேதனத்தைத் தாண்டி 
புத்தமென்று தனியெதுவுமில்லை
தன்னுள் உறங்கியிருக்கும்
உண்மையின் அண்மையை உணராது
தொலைவில் தேடித் திரியும்
இரக்கத்துக்குரிய மனிதம்...

(மூலம் - hakuin ekaku zenji)


-ஷக்திப்ரபா

(நன்றி wiki) 

8 comments:

  1. நிகழ்வைச் சொல்லிச் சென்ற விதமும்
    கவிதையை மொழிபெயர்த்த விதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. வருகைக்கும் தருகைக்கும்.

      Delete
  2. அருமையான மொழிமாற்றம். வாழ்த்துக்கள்.என் தளத்தில் கீதை-என் எண்ணப் பகிர்வுகள். ....!

    ReplyDelete
  3. எவ்வளவோ சொல்லனும்னு தோணுது, இருந்தாலும் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்து கொள்கிறேன்.

    அருமை!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருமாறன். கருத்துக்கும் வருகைக்கும் ....

      Delete