August 31, 2009

காதலியாள் தூங்குகிறாள்...காலையில் மலருங்கள்
மிருதுவாய்
மெல்லிய இழைகளால் கோக்கப்பட்டிருக்கும்.
அதன் கனத்தில் தொங்குவது
மெல்லுணர்வுகளைத் தொட்டுச் செல்லும் யதார்த்தங்கள்.

குழந்தையின் மாசற்ற சருமம் போல்
மென்மையாய்..
இளசாய்...
அல்லது
பதினாறு வயது பருவத்தின் பரிசுத்த அழகுடன்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பம்மி நிற்கும்.

கருத்துக் கற்பனையைத் தாங்கி நிற்கும் பருத்த நீர்குமிழியை
வார்த்தைப் பற்களால் உடைத்து விடாது
அடர்ந்த மௌனத்தால் அஞ்சலி செலுத்தலாம்
கண்ணீர் துளிகளால் கனம் சேர்க்கலாம்
அல்லது
புன்னகை மலர் தூவலாம்

மெதுவாய்...
சத்தமின்றி சுவடுகள் பதிக்கப்படுகின்றன
உதிர்க்கும் ஒரு மாத்திரையும்
படைப்பின் ஆழத்தை..
மோனத்தை..
பதம் பார்க்குமோ என பயந்து!

15 comments:

 1. மிருதுவாய்
  மெல்லிய இழைகளால் கோற்ப்பட்டிருக்கும்>>>>>>>

  கவிதைக்கு வாழ்த்துகள் ஷக்தி
  கோற்கப்பட்டிருக்கும் என வராது.கோக்கப்பாட்டிருக்கும்
  கோத்தல் என்பது இலக்கணப்படி சரி கோர்த்தலும் தவறென தமிழ் நல்லாபடிச்சி சொல்லிக்கேட்ருக்கேன்.

  ReplyDelete
 2. மென்மையான அழகியகவிதை.
  நிறைய மலரட்டும் ஷக்தி இதுபோலப்பலப்பல கவிதைப்பூக்கள் உன் இதயத்தோட்டத்தில்!

  ReplyDelete
 3. ஷைலஜா said...
  மிருதுவாய்
  மெல்லிய இழைகளால் கோற்ப்பட்டிருக்கும்>>>>>>>

  கவிதைக்கு வாழ்த்துகள் ஷக்தி
  கோற்கப்பட்டிருக்கும் என வராது.கோக்கப்’’பா’’ட்டிருக்கும்>>>


  கைதவறி கால் வாங்கிட்டேன்:) கோக்கப்பட்டிருக்கும் என இருக்கணும்>

  ***************************
  கோத்தல் என்பது இலக்கணப்படி சரி கோர்த்தலும் தவறென தமிழ் நல்லாபடிச்சி சொல்லிக்கேட்ருக்கேன்

  ReplyDelete
 4. நன்றி நல்லவன் முதல் வருகைக்கும் தருகைக்கும்.

  (ஒருத்தரும் எட்டிப்பார்க்காத கவிதைக்கு முதலில் மறுமொழி சொன்ன நீங்க நெஜமாவே நல்லவருங்க )
  :)))

  ஷை,

  மிக்க நன்றி. பிழை திருத்திக் கொள்கிறேன்.

  //நிறைய மலரட்டும் ஷக்தி இதுபோலப்பலப்பல கவிதைப்பூக்கள் உன் இதயத்தோட்டத்தில்!//

  உங்களைப் போல நல்லுளங்களின் வாழ்த்தே செம்மை சேர்க்கிறது. நன்றி.

  அன்புடன்,
  ஷக்தி

  ReplyDelete
 5. //கைதவறி கால் வாங்கிட்டேன்:) //

  அய்யயோ யார் கால ?

  kidding.

  thanks.

  ReplyDelete
 6. //கருத்துக் கற்பனையைத் தாங்கி நிற்கும் பருத்த நீர்குமிழியை
  வார்த்தைப் பற்களால் உடைத்து விடாது
  அடர்ந்த மௌனத்தால் அஞ்சலி செலுத்தலாம்//

  ரொம்ப புடிச்சிருக்கு கவிதையோடு இந்த வரிகளும் :)

  ReplyDelete
 7. :)
  பெண்ணின் மென்மை வரிகளிலேயே தெரிகிறது!

  ReplyDelete
 8. //ரொம்ப புடிச்சிருக்கு கவிதையோடு இந்த வரிகளும் :)//

  மிக்க நன்றி ஆயில்யன் :)

  ஜான்சன் & ஜான்சன் பாப்பா advt பார்த்திருக்கிறீர்களா? குட்டிப் பாப்பாக்கு வலிக்கும் ன்னு நீர்குமிழி கூட மெல்ல உடையும். அழகான விளம்பரம். கவித்துவம் நிறைந்த விளம்பரம். அதனையும் நினைவு கூர்ந்து எழுதியது.

  மீண்டும் நன்றி.

  //பெண்ணின் மென்மை வரிகளிலேயே தெரிகிறது!//

  நன்றி வெங்கிராஜா :)

  உங்கள் ரசிப்பை வெளிப்படுத்திய வரிகளில் கவிதை பூர்ணத்துவம் பெற்றுவிட்டது :)

  ReplyDelete
 9. Concept-um, சில வரிகளும் பிடித்திருந்தாலும், எனக்கும் அனேக கவிதைகளுக்கும் ஏழாம் பொருத்தம்.

  பேசாமல் புன்னகை மலர் தூவுவதை விட்டுவிட்டு scalpel-ஐ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

  தோங்குவது - தொங்குவது/தேங்குவது ?

  Anyway, -ங்குவது : ஒருமை
  மெல்லுணர்வுகள், யதார்த்தங்கள் : இரண்டில் எதை subject-ஆக நீங்கள் நினைத்திருந்தாலும் அவை பன்மை

  பம்மி - I thought it was a colloquialism. So it seemed out of place. Is it a 'regular' word ?

  ReplyDelete
 10. //scalpel-ஐ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். //

  அது தான் வேண்டும்.

  Whats more beneficial than a chisel in attempting better shape!

  //தோங்குவது - தொங்குவது/தேங்குவது ?//


  தொங்குவது தான் :( ஸ்பெல் செக் செஞ்ச லக்ஷணம் சரியில்லை :P


  //Anyway, -ங்குவது : ஒருமை
  மெல்லுணர்வுகள், யதார்த்தங்கள் : இரண்டில் எதை subject-ஆக நீங்கள் நினைத்திருந்தாலும் அவை பன்மை
  //

  இதே கருத்தை சில வருடங்களுக்கு முன் ஒரு தேர்ந்த கவிஞரும் குழுமத்தில் கூறினார் (வேறு ஒரு கவிதைக்கு) நான் அடிக்கடி செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. கவனம் வைக்கிறேன்.


  //பம்மி - I thought it was a colloquialism. So it seemed out of place. Is it a 'regular' word ?//

  வெகு சாதாரணமாய் புழங்கும் வார்த்தை என்று நினைத்தே எழுதினேன்

  கஷ்டபட்டு தேடிக் கண்டு பிடித்த

  "என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி" என்கிற சாகா வரம் பெற்ற இலக்கிய கவிதையில் இவ்வார்த்தை வருகிறதே :?

  ( யாரு lyricist ன்னு தெரியலை :? )


  நன்றி பி.ஆர் :)

  ReplyDelete
 11. //"என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி" என்கிற சாகா வரம் பெற்ற இலக்கிய கவிதையில் இவ்வார்த்தை வருகிறதே :?

  ( யாரு lyricist ன்னு தெரியலை :? )//

  வைரமுத்து...

  கவிதை..ம்.

  ReplyDelete
 12. //வைரமுத்து... //

  வாங்க நர்சிம். நன்றி :)

  //கவிதை..ம்.//

  ஹிஹி... நன்றி :D

  ReplyDelete
 13. கவிதையாகிப் போன
  கவிதைத் தலைப்பு!

  ReplyDelete
 14. நன்றி ஜீவி. :)

  ReplyDelete