August 19, 2023

இந்துமதம் எப்ப உருவாச்சு? How did Hinduism Originate


Click the link to listen  👆

இந்து மதத்தின் ஆதாரம் என்ன? யார் ஸ்தாபனம் செய்தது? இதுக்கு பதில் என்ன  என்று  தேடிப் போனா,   நமக்கு கிடைக்குற விடை, 

இந்து தர்மம் ஒரு மதமே அல்ல என்பது தான் அது .  இதில சொல்லப்பட்டிருப்பதெல்லாம்  வாழ்கைக்கு அடிப்படையான வழக்குமுறை தர்மங்கள். 

வாழ்கைக்கு அப்பால் நமது தேடலுக்கான விடைகள்.  இந்த தர்மம் ஒரு காலகட்டத்தில் உருவானது என்பது கூட பொருந்தாத வார்த்தை. 


சிந்து நதியின் மறுபக்கம் - 

River Sindhu 


சிந்து நதியின் இப்பக்கம் வசிக்கும் மக்களை, அன்னிய தேசத்து மக்கள்  இந்து என்ற அழைக்கத் துவங்கினர். 

அவர்களின் பழக்கவழக்கத்தை  இந்துமதக் கொள்கை என்ற பெயரிட்டு குறிப்பிட்டனர்.. 

அதனால் இந்து என்ற சொல் நதியைக்  குறிப்பிடும் பெயர், மதத்தையோ அதன் கொள்கைகளையோ குறிக்கும் பெயர் இல்லை 


Who is the Founder?

காரணகர்த்தா யார்? 


இந்து மதக்கொள்கை என்ற பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டதே.  

இந்த கொள்கைகளை, தர்ம   நேறிகளை  துவக்கி வைத்தது யார்? காரணகர்த்தா யார்? இதுக்கு ஆதி காலத்துல என்ன பெயர்? 

ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?  இந்த தர்மம் தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்படவில்லை,   இப்படிப்பட்ட

ஒரு   நெறி அல்லது கொள்கை உருவாகவேயில்லை என்றால் எப்படி புழக்கத்தில் வந்தது? 


இதற்கு பதில் தேடவேண்டும் என்றால் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாச்சு என்பதில் துவங்க வேண்டும்.


Cyclic creation

பிரபஞ்ச சிருஷ்டி ஒரு சுழற்சி


பிரபஞ்ஜம் மூன்று நிலைகளில் சுழல்கிறது.  துவக்கம்,  இயக்கம்,  பின் ஒடுக்கம் என்ற நிலைகள்  சுழற்சி முறையில்

நடந்துட்டு வருவதாக  விஞ்ஞானமும் மெய்ஞானமும் கூட சொல்றது .  இதன் அடிப்படை நாதமாக, ஒலியாக

ஓம் என்ற ப்ரணவ ஒலி, பிரபஞ்சத்தில் நிறைஞ்சு இருக்கு, அதுவே பிரபஞ்சத்தின் துவக்கத்துக்கும், 

ஓட்டத்துக்கும்  ஒடுக்கத்துக்கும் ஆதார சுருதி என்று சொல்றாங்க.


சனாதனம் என்றால்,  'ஆதி அந்தம் இல்லாத' என்ற பொருள்.  நிலையான என்று பொருள். சுழற்சியில் செய்யப்படும் எதற்கும்

ஆதி அந்தம் என்று எதையும் சுட்டிக்காட்டி கூறவும் முடியாது. சுழற்சியில் நடைபெறும் சிருஷ்டி, ஸ்திதி என்ற பராமரிப்பு,

லயம் என்ற ஒடுக்கம் அனைத்துமே சுழற்சியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கு.


இந்த வழக்குமுறைகளும் அப்படியே துவக்கம் முடிவு என்று எதுவுமே  இல்லாமல் நிலையாக தொடர்ந்து eternal ஆக

வந்து கொண்டிருப்பது.


Enlightened Rishis Revelations

ரிஷிகளின் உபதேசம்


பிரபஞ்சத்தில் சப்தமாக நிலைபெற்று நிறைஞ்சிருக்கிற  தத்துவங்களையும், சாரங்களையும், உணர சாமான்யனால்

இயலாது. மனதை கட்டுப்படுத்தி, புலன்களை அடக்கி, உணர்வை உள்ளுக்கு செலுத்தி,  

பெருந்தவத்தில் ஈடுபடும்  ஞானிகளும்  ரிஷிகளும், பிரபஞ்சத்தின் உண்மைகளை உணரத் துவங்கினாங்க.



இந்த ஆகாசம் முழுதும் சப்தபிரம்மம்  அப்டீங்கற  தூய சப்தம் நிறைஞ்சிருக்கு. அந்த தூய அலைவரிசையை உள்ளத்தை

அடக்கி தவமியற்றிய அவங்களால உணர முடிஞ்சது. அவங்க கண்டுணர்ந்து உபதேசித்த உண்மைகளே ,  நமது தர்ம நெறியின்

வேதங்களாக,  தத்துவங்களாக உருவாகியிருக்கு.  இந்த உபதேசங்களை வேதவியாசர் என்ற மகான் நமக்கு

பகுத்து தொகுத்து நான்கு வேதங்களாகவும், உபநிஷதங்களாவும்  வழங்கியிருக்கார்.


Countless Enlightened beings

எண்ணற்ற  ஞானிகளின் வழிகாட்டல்


உபதேசம் செஞ்ச ரிஷிகள் ஆகாசத்தில் நிறைஞ்சிருக்குற ,  நிலையாக நிலைச்சிருக்குற உண்மைகளை கண்டுணர்ந்து

சொன்னது தான் இந்த தர்மம். அப்படி சொன்னவர் ஒருத்தரில்ல இரண்டு பேரில்ல. ஆயிரக்கணக்கான ரிஷிகள். அவங்களும் கூட

இப்படி ஒரு மதத்தை , தாங்கள்  ஸ்தாபிச்சதாக சொல்லிக் கொள்றதில்லை.  இந்த வழிமுறைகளுக்கு அவங்க பெயரை சூட்டவுமில்லை. 


அவரவர்கள் தனிப்பட்ட முறையில்  உணர்ந்த பிரபஞ்ச ரகசியங்களைத் தான் உபதேசமா  செஞ்சிருக்காங்க.



ஆகையால இந்த மதம் தனியொருவரால் தோற்றுவிக்கப்படவில்லை. இன்ன இன்ன காலத்தில் தோன்றியது

என்ற வரைமுறையின்றி, காலங்களை தாண்டிய தர்ம நேறியாகவே இருந்திருக்கிறதால தான் இதற்கு சனாதன தர்மம் என்று

இப்ப வழக்கில பேயர் சொல்லிட்டு வராங்க. இது மதம் அல்ல. இதற்கு நிலையான பெயரும் இல்லை.  


Nurtured and guided by Parabrahma

இறைவனால் போதிக்கப்பட்ட நேறி


இந்த தர்மம் இயற்கையால் பிரபஞ்சத்தால் உந்தபட்டு வளர்க்கப்படுகிறது. சூத்ரதாரியான  இறைவன் என்ற பரப்பரம்மத்தால, 

ஒவ்வொரு சிருஷ்டியிலும் தொடர்ந்து போதிக்கப்பட்டு வர்றது. 


*


கண்ணுக்கு தெரியாத சத் ஸ்வரூபமான இருப்பு  நிலையே சூட்சுமமான பரப்பிரம்மம்  என்ற புரிதல் இருக்கு. 

பரப்பிரம்மத்துக்கு உருவம் இல்லை என்று சொல்றாங்களே, பின்ன  எப்படி தர்ம நெறிப்படி இவ்வளவு கடவுளர்கள் ? 

அவர்களுக்குத் தனிப்பட்ட பெயர்கள்? உருவங்கள்?  என்ற கேள்வி எழுகிறதில்லையா?!...


இன்னும் பேசலாம்.

***

©  ShakthiPrabha 

August 11, 2023

How does Puru's Sacrifice Stand apart



புருவின் தியாகம் எப்படி மகத்தானதாகிறது? (click to listen)