November 12, 2020

மூர்க்க நாயனார்




திருவேற்காடு எனும் தொண்டை நாட்டிலுள திருத்தலத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார் இருந்தார். வேளாண் குடியில் பிறந்தவர். தமது பொருளையெல்லாம் கொண்டு சிவனைத் தொழுதிருத்தலும், அடியவர்களுக்கு விருந்தளிப்பதும் முக்கியமான நோக்கமென கொண்டு வாழ்ந்தார். திருநீற்றின் மகிமை கொண்டாடி சிவ பூஜை செய்து வந்தார்.
.
பெரும் விருந்தளித்து அடியாரை பேணும் இவர் பெருமைக்கு நாளும் பலப் பல அடியவர்கள் பெருகிக் கூடினர். தம் செல்வத்தை எல்லாம் செலவழித்தார். மேலும் வறுமை வந்த பின்பு, தமது பொருளத்தைனையும் விற்று அச்செல்வம் கொண்டு விருந்தளித்தார். பொருளீட்டுவதற்கு ஏது வழி என சிந்தித்து, தனக்கு பெரிதும் உதவும் சூது விளையாடி பொருளீட்டினார். சூது விளையாட்டில் மிக வல்லவராக திகழ்ந்தவராகையால், பெருவெற்றி ஈட்டி, அதனால் பொருள் திரட்டிவிடுவார். திரட்டிய பொருளையெல்லாம சிவ பூஜையிலும் அடியவர்களுக்கு வேண்டியவற்றை அன்புடன் வழங்குவதிலும் செலவிடுவார். அடியவர் உண்ட பின்பே தாம் உண்ணும் வழக்கம் தவறாது கடைபிடித்தார்.
.
முதல் சூதில் தோற்றும் பின்னர் அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெற்றும் சூதில் பொருளீட்டினார். தான் ஆடும் சூதில் அதற்குறிய ஒழுக்கம் கடைபிடித்தார். கள்ளாட்டம் ஆடக் கூடாதென்ற நியமம் கொண்டிருந்தார். தோல்வி உறுதி எனத் தெரிந்ததால் அவருடன் சூதாட பலரும் தயங்கினர். மேலும், எவரேனும் பொய்யாட்டம் ஆடினால் அவர்களை உடைவாள் கொண்டு குத்திவிடுவதால், மூர்க்க நாயனார் என்று வழங்கப்பட்டார்.
.
இவ்வாறு பல காலம் சிவபூஜை செய்து அடியவரை வணங்கப்பெற்றதால் இடரும் குற்றமும் களையப் பெற்று சிவபதம் எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment