Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts

May 23, 2023

எங்கும் எதிலும் (zen inspiration)

 


மலரும் பூக்களில்
சிந்தியிருக்கும் சிரிப்பு
அது சுமந்து வரும்
நேசத்தின் வாசம்
மலைகளின் கம்பீரம்
காற்றின் சுதந்திரம்
இயற்கையின் மடியில்
இறைந்திருக்கும்
வார்த்தைகளற்ற
உபநிடதங்கள்
மௌனமொழி கீதைகள்
எல்லா தத்துவங்களும்
போதிக்கப் படுவதில்லை.
புன்னகைப் பூக்களாக
மலரும் தருணங்களால்
சில பேருண்மைகள் உணரப்படுபவை
சுற்றிச் சுழன்றிருக்கும்
சக்தியின் இயக்கங்களிலும்
முக்திநிலை காணும்
தத்துவ ஞானி
-ShakthiPrabha

April 12, 2023

நிரம்பியிருக்கும் கோப்பை

 




புத்தியில் புகுத்தியிருக்கும்
புதிய சித்தாந்தங்கள்;
மனக்கிண்ணம் வழியவழிய
கணக்கற்ற எண்ணங்கள்;
புலன் வழியே உள்வாங்கும்
பொய்கள், மெய்கள்;
புறத்தோற்றத்தின்
பதிப்புகள் , பாதிப்புகள்.
திகட்டத்திகட்ட திரண்டிருக்கும்
தேவையான தகவல்
தேவையற்ற அகவல்;
ஊருக்கு உபதேசங்கள்.
உதவாக்கரை கொள்கைகள்.
நாவுக்கு ஓய்வின்றி
அளவளாவும் அலம்பல்.....
உள்ளத்து ஏட்டில்
ஊசிமுனை இடங்கூட
உபயோகத்திற்கில்லை.
எப்படி நுழையும்
சித்தத்தின் தத்துவம்?
தத்துவத்தை விதையிட
கடுகளவு நிலமும்
கிடப்பிலில்லை.
உயர்ஞானம் ஊடுறுவி
முளைப்பதெங்கே சாத்தியம்?
அகத்துக் குப்பைகளை
அகற்றிக் களையும் வரை
நீ சேமித்த பதிவுகள்
எழும் வீழும்
பதுங்கும் பம்மும்
அடங்காது சீறும்
மெய்ப்பொருளை மெய்யிலேற்று
சுயமென்றும் சத்தியமென்றும்
தன்னையே எதிரொலிக்கும்.
கருப்பையுடன் தொடர்ந்த கோப்பையை,
கவிழ்த்துக் களைந்து; கழுவி நிமிர்த்து.
மெய்ப்பொருளை மெய்யிலேற்றி,
அகப்பையில் நிறையும்
அருளமுதினைப் பருகு.
Inspired from : மூலம் : Zen கதைகள்
தமிழில்: ஷக்திப்ரபா

April 11, 2023

Agatha Christie's stories - Translation in Tamil (By ShakthiPrabha) மினி குறுநாவல்கள்










Happy to share... that, "ஸ்வர்ணகமலம்" - மே 2023 ஆண்டு மலரில், , 'Agatha Christie'- Crime genreன் சில குறுநாவல்கள் (few short stories), எனது மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது.


இதன் பிரதிக்கு திரு கணேஷ்பாலா அவர்களை தொடர்பு கொள்ளலாம். Thats not all. You also get to read "ரா .கி. ரங்கராஜன்" அவர்களின் சில மொழியாக்க கதைகள்.

Happy to Share that, Swarnakamalam "ஆண்டு மலர்" May 2023 , has Agatha Christie's Crime genre shortstories translated in tamil by "Shakthiprabha".

Kindly order your copy with :::
Mr. Ganesh Bala
Contact no: 7010924442
Email id : balaganessh32@gmail.com

Thankyou so much Ganesh bala sir for this opportunity.
Thankyou G.A. Prabha madam(ஆசிரியர்)
Thankyou Rishaban Sir ( கௌரவ ஆசிரியர்)
Thankyou பதிப்பாசிரியர் சுரேஷ்சந்த்

Grab your copy today.
Crime genre novels can easily keep the reader thoroughly engaged. As an ardent fan of Agatha Christie, I could never keep the book down until I pin down the culprit, the whodunnit thrill and guess games always has its twists and turns... and can never stop surprising us. I am a fan of Agatha Christie. Never did I imagine, I would have the opportunity to translate few of her stories. I should say I got close to dear Poirot, as I started reading the belgian's English tongue in my own tamil.

Thankyou again Team.

#Translation #AgathaChristie #Poirot

April 05, 2023

பேரமைதி (Inspired from Zen story )

 



இல்லறம் துறந்து துறவறம் தழுவி
வேறுபாடு தொலைவதில்,
கற்றதென்றும் பெற்றதென்றும்
பிரிவுகள் தேவையில்லை!
விருப்பும் வெறுப்பும்
ஒர் புள்ளியில் இணைந்து, மறைவதால்..
கொண்டதென்றும் கொடுத்ததென்றும்
பேதமில்லை.
சிந்தையெங்கும் நிறையுது
சலனமற்ற ஏதுமில்லாப் பேரமைதி.
..
ShakthiPrabha
Inspired from: zen கதைகள்
..
ShakthiPrabha
Inspired from: zen கதைகள்

April 04, 2023

ஏகம் (zen Story மொழியாக்கம்)

 



துகளென்று துவளாதே- பேரண்டத்தின் சிறு
நகலென்று புரிந்த கணமே விலகும்,
தீராத வினைகளின் ஆறாத வலிகள்.
போறாத காலமும் பொன்னாக மாறும்,
மீளாப் பெருந்துயரும்- சுக்கு
நூறாகிச் சிதறும்..
எள்ளி நகையாட எவரும் நலிந்தாரிலை,
தள்ளி பயந்தோட அவரொன்றும் வேறிலை.
பரவெளியின் சங்கமெனப் பிறந்ததிந்த வங்கமே!
புத்தனுக்குள் எழுந்த போதிமரத்து ஞானமிது
சித்தனென்று ஆக்கிடும் உனையே.
--
மூலம்: Zen கதைகள்
தமிழில் சாரத்தை மொழியாக்கிய முயற்சி:
ஷக்திப்ரபா

April 02, 2023

Zen story - கவிதை மொழியாக்க முயற்சி

 




'நரைகூடா மங்கைதனை தீண்டிட்ட தீச்செயலால்
திரையிடுமே தவசீலமுறை' என்றே முறையிட்டு
வரையறுத்த சீடனின் சிறுமதியை சீராக்கி;
கரைசேர்த்த கணமே கைவிட்ட நிகழ்வை,
கறையாக்கி குறையேற்றல் முறையீன மென்றே,
இறையொத்த குருமாரும் அறிவூட்டிச் சென்றாரே.
----


மூலம்: zen கதைகள்
தமிழில் சாரத்தை மொழியாக்கும் முயற்சி:
ஷக்திப்ரபா

(Shared the comic strip of the zen story in the pic)

March 30, 2023

உள்ளும் புறமுமாகி ( Inspired from Zen story)

 



பிரபஞ்சமெனும் மாயப்பந்தாகி
சூல் கொண்ட பேருலகம்;
விலக்கலில் விலகி,
சுருங்கலில் அருகி,
சுழன்றாடும் அகிலத்தின்,
அலகிலா விளையாட்டு;
அணுவிற்கு அணுவுமிங்கு
அண்டத்தின் அங்கமென்றறி!
சூழ்ந்த பெருங்கடலில்,
நீரின்றி நீயில்லை;
நீயின்றி நீரில்லை!
நிலமாகிக் காற்றாகி,
நெருப்பெனவேதான் படர்ந்து,
வேறாகா ஆகாய வீதியின் விதையினுள்,
பிறந்து-பிறந்து வீழ்கிறாய்!

உன்னில் உருவாகி உனையே உருவாக்கி புறமெங்கும் விரிந்து அகத்துள்ளே நிறைந்து எங்கும் அதுவாகிப் போனதால் அதுவே நீயுமாகிறாய் இதுவே உண்மையென உணர்ந்தபின் இரண்டெனக் காணவே ஏதுமுண்டோ சொல்!
..
Inspired from - மூலம்: Zen story
சாரத்தின் தமிழ் மொழியாக்கம் - ShakthiPrabha

March 28, 2023

நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் ) (Thomas Hood)




நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் )

*************
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
நான் பிறந்த வீடு - அதன்
சின்னஞ்சிறு சாளரத்தின் வழியே
பகலவன் எட்டிப் பார்க்கும்
பரபரப்பான காலைப்பொழுது...
இம்மியும் நேரம்பிசகி - கதிரவன்
உதித்ததுமில்லை, மறைந்ததுமில்லை;
இப்பொழுதென்னவோ
இரவின் இறுக்கத்தில்
இறுதி மூச்சை முடித்துவிடவே
இறைஞ்சுகிறேன்.
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
சிவப்பும் வெளுப்புமான
ரோஜாக்கள், ஊதாப்பூக்கள், லில்லி மலர்கள்;
வெளிச்சத்தால் செதுக்கப்பட்ட வண்ண மலர்களவை..
இளஞ்சிவப்பு மலர்ப்புதரில் ஒளிந்திருக்கும்
சிட்டுக்குருவிக் கூடுகள்;.
தனது பிறந்ததினத்தில் தமையன் ஊன்றிய
தங்கக் கொன்றையும்..
தழைத்தோங்கி மரமாகி
மண்ணை நேசிக்கிறது..
இன்றோ கொன்றை மட்டுமே
நின்று சுவாசிகிறது!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
ஊஞ்சல் பழகிய இடங்கள்
தாவும் இளங்காற்றை விழுங்கி,
இறக்கைகளை விரித்து,
ஜிவ்வென விண்ணில் சிறகடித்திருந்த உணர்வுகளோ
இப்போது பாரமாகித் தளர்ந்திருக்கிறது.
என் நெற்றிக்காய்ச்சலை
கோடைகாலத்துக் வாவிகளெதுவும்
குளிர்விப்பதில்லை!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
அடர்ந்துயர்ந்த ஊசியிலை மரங்கள்;
அதன் மெல்லிய நுனி
வானை எட்டியதென்றே கற்பித்திருந்த
அறியாமைக் களிப்பு அகன்றதும்
பாலகனாக கைப்பற்றிய சுவர்க்கத்திலிருந்து
பல காததூரம் விலகியிருக்கிறேன்!
***
மூலம்: I remember, I remebmber - Thomas Hood
மொழியாக்கம்: ஷக்திப்ரபா

அக்ஷய பாத்திரங்கள் (மொழிபெயர்ப்புக் கவிதை)




அள்ளக் குறையாத  

அன்பெனும் நீரூற்றை  ஆன்மாவில்   நிரப்பி,

மானுடத் துயர்துடைக்கும் அமுதசுரபிகளாக  வேண்டும்; 


வளரன்பில்  புதைந்திருக்கிறது

வாழ்தலின் இன்பம்;

இறைவனின் கொடையை  உறிஞ்சி

பிறர்க்குப் பரிசளிப்பதில் மறைந்திருக்கிறது  

நமது தேடலுக்கான விடை.


** 

மூலம்: ஆங்கிலம்: Ella Wheeler Wilcox

தமிழில் -ஷக்திப்ரபா


February 27, 2023

சொல்வனத்தில் மொழிபெயர்ப்புக் கவிதை (பயம் ) (மூலம் Khalil Gibran)

சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்புக் கவிதை 

மூலம் Khalil Gibran (Fear) 

தமிழில் ஷக்திப்ரபா

(click on the link to read) 

 பயம் மொழிபெயர்ப்புக் கவிதை


https://solvanam.com/2023/02/26/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/

Thankyou solvanam team. 

February 06, 2023

சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்புக் கவிதை

 




மகத்தான மங்கை 


மேலேயுள்ள சுட்டியில் சொல்வனத்தின் பதிவாகியிருந்த எனது மொழிபெயர்ப்புக் கவிதை ( 2021 july) 


மொழியாக்கம் - ShakthiPrabha
(Original in English – ‘Phenomenal Woman’ by Maya Angelou)

நன்றி "சொல்வனம் team " 🙏

May 03, 2019

பேரிளம்பருவம் (மொழியாக்கம் 3)



மடியில் தவழ்ந்து
உன்னடியின்   நிழலில் 
மகிழ்ந்திருந்த குழவிகள்
நயந்த நட்பை  வெடுக்கென்றே கத்தரித்து  
பொல்லாநாக்கைச் சுழற்றி 
கடும் விமர்சகர்களாகி - உன்மேல்
கொடும் குற்றச்சாட்டை குவிக்கும் காலத்தில், 
பேரிளம்பெண்  நீயென்ற
பெரு உண்மை உணர்வாய்.
.
கூட்டுப்புழுக்கள் கூடுகளை துளைத்தெழும்பி 
விடலைப் பருவத்தின் வலிய சிறகை விரித்தே
உயரப் பறக்கும் தருணம்;
அவர்கள் தேடும் அத்தியாவசியங்களில்  - நாடும்
அன்றாட தேவைகளின் சேவைகளில் முடங்கிவிடும் ...
உனக்கான அடையாளம்!
.
மாற்றமேதுமிலா உனது சின்னஞ்சிறு உலகிலோ 
பிள்ளைகளின் அவசியம் மென்மேலும் பெருகி, 
அவர்கள்  உடைமைகளை தடவிப்பார்த்து
சிந்தும் ரகசிய நீர்த்துளிகளில் 
கசியும் உனது தனிமை.
.
கொஞ்சுமொழி பேசும் பிஞ்சுகளின்
மழலை உலகில் மகிழ்ந்திறங்கி;
வனவிலங்குகளின் வண்ண விருந்துக்கு 
ஜிகினாக்கள் ஒட்டி ;
தங்க மையினால் ஒளிகூட்டி;
அணிற்குஞ்சுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பியவளுக்கு;
"கற்பனையில் காலமெல்லாம் கடத்திவிட்டாய், 
விழித்தெழும் தருணமிது!
அம்மா!!   இனிமேலும் நீ யுவதியல்ல தெரியுமா!"  
பருவமெய்திய  பதின்மவயதினன்  
திடுக்கென்று பிறந்த  ஞானத்தால்
சுருக்கென்றே சொல்லால் தைத்து
நறுக்கென்ற பாடம் புகட்டும் காலம்..
உனது நடுப்பிராயம்!


  Middle Age - Kamala Das                                                                                                               
  தமிழ் முயற்சி- ஷக்திப்ரபா 

[ Middle Age is a fantastic poetry by Kamala Das (Kamal Surayya). I read the poem in my teens, however, I could comfortably take the seat of a Middle aged woman and understand the "mother" who couldn't muster the courage to accept transformation.

 As next in the queue of transliterated poetries, I tried my best to bring out the conconction without losing much of its flavour. I hope in that process I didn't spoil the temper of my favourite ode.

Poetry sympathises with the "Mother" who finds it hard to confront her Middle-Age, when her children starts fluttering their wings ready to face the world all by themselves. ] 



Middle Age 

 Middle age is when your children are no longer
Friends but critics, stern of face and severe with their tongue.

It is the time when, like pupae, they burst their cocoons and
Emerge in harsh adult glory, and they no longer
Need you except for serving tea and for pressing clothes.
But you need them all the same, and badly, too, 
So that when left alone, you touch their books and things 
And weep a little secretly.

Middle age is when your son, to whom you had sent
Once upon a time, the squirrel’s invitation to their jungle feast
Writing in golden ink and posting it a night, turns around in disgust
Crying, “you have lived in a dream world all your life, 
It’s time to wake up, Mother, you are no longer so young you know!”

-Kamala Das (Kamala Surayya) 

January 02, 2019

நட்சத்திரங்கள் (மொழியாக்கம் 2 ) Source: Listen by Vladimir Mayakovsky



சற்றே கவனி... நட்சத்திரங்கள் மின்னுவது எங்கோ ஒருவனின் அவசியத்திற்காக;
உமிழ்ந்த முத்துக்களே ஊன்றுகோலென்று உணர்ந்தவன் வீசும் சூறைக்காற்றில் நெடுமூச்செறிந்து ஆண்டவனை நாடினான்...
அவர் காலச்-சுருக்கத்தை கருத்தில் கொண்டு காற்றென கடுகிச் சென்று, கடவுளின் வலிய கரங்களை முத்தமிட்டான்... தேம்பினான்... நட்சத்திர ஒளி இன்றியமையாதது - கெஞ்சினான்; ஒளிராத நொடிப்பொழுதுகள் மரணத்தை தழுவுமென இரைஞ்சினான்;
காலங்கள் கரைந்தோடின. கால்போன போக்கில் கவலையுடன் திரிந்தாலும், உணர்ச்சிகளை உள்ளடக்கி தெளிந்த மனதுடன் திடமாக இன்னொருவனை தேற்றிக் கொண்டிருக்கிறான்.... "" எல்லாம் சீராகி விட்டது இனி அஞ்சுதற்கு ஏதுமில்லை ... "

சற்றே கேள்... எவனோ ஒருவனின் தேவைக்காக நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு இரவிலும் வானிறங்கி கூரை-உச்சியில் ஒரு நட்சத்திரமேனும் மின்னுவது மிக அத்தியாவசியம்""
மூலம்: Vladimir Mayakovsky தமிழாக்கம்: ஷக்திப்ரபா

Listen! (English Version)

Listen! if the stars are lit, then someone must need them, of course? then someone must want them to be there, calling those droplets of spittle pearls? And wheezing, in the blizzards of midday dust, he rushes to God, fearing he’s out of time and sobbing, he kisses God’s sinewy hands, tells Him that it’s important, pleads to Him that the star must shine! vowing that he won’t survive the starless torment! And later, he wanders, worried, though seemingly calm and fit, and tells somebody: “Finally, nothing can frighten you, right?!” Listen! if the stars are lit, then someone must really need them? then it is essential that at least one star alights over the rooftops each night?!

Poet: Vladimir Mayakovsky a renowned Russian poet and social reformer. His multifarious talent won him recognition as poet, script writer, actor, artist, director, public speaker, there by making him a very influential person in Russian literature and politics.

Poetry talks on hope, that mankind sustains. Hope is the most beautiful gleaming pearl that lights even the darkest nights. He beseeches god to keep the hope alive but for which existence becomes impossible. He lights the lamp of hope in every mind suffering in despair.

November 20, 2014

புத்தர்கள் - zen poem - தமிழாக்க முயற்சி



Hakuin Ekaku ஜென் மதத்தில் பெரிதும் பேசப்பட்டவர்.  ஜென் மதத்தின் புகழ்மிக்க சீர்த்திருத்தவாதி. 

அழகிய இளம் பெண் ஒருத்தி Hakuin வசிக்கும்  நகரத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள், அப்பெண் கருவுற்றிருப்பதை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் மன வருத்தத்துக்கும் ஆளானார்கள்.அவல நிலைக்கு காரணமான ஆண் மகனைக் காட்டிக்கொடுக்க அப்பெண் விரும்பவில்லை. 

பெற்றோரின் வற்புறுத்தலை தாங்க இயலாமல் அவள் "hakuin ekaku"வைச் சுட்டிக்காட்டி, அவரே தன் பரிதாப நிலைக்கு காரணமென புகார் கூறினாள். 

கடும் கோபத்திற்கு ஆளான அவள் பெற்றோர் உடனே hakuin'ஐ சந்தித்து விளக்கம் கேட்க,  hakuinன் "அப்படியா?" என்ற பதில் அளித்தார்.

நாட்கள் செல்லச் செல்ல அவர் செல்வாக்கும் மரியாதையும் வெகுவாக குறைந்தது. மக்கள் பேசிய அவதூறு மொழிகளை அவர் பொருட்படுத்தாது, "அப்படியா" என்று  பதிலுரைத்தவாறு இருந்தார். 

குழந்தை பிறப்பின் பின்னர், அக்குழந்தையை hakuin பாதுகாப்பில் பெண்ணின் பெற்றோர் விட்டுச் சென்றனர். குழந்தையை பாலூட்டிச் சீராட்டி பெரிதும் அன்புடன் அவர் வளர்த்து வந்தார். 

ஒரு வருடம் பூர்த்தியாகும் தருவாயில் இளம் பெண்ணிற்கு தான் செய்த தவறு மிகவும் உறுத்தவே அவள் உண்மையை பெற்றோரிடம் ஒப்புக்கொண்டாள். Hakuin இதற்கு காரணம் அல்ல என்று விளக்கினாள். 

குழந்தையின் தந்தை மீன் சந்தையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரணன் என்று புரிந்த பெற்றோர்கள் தங்கள் செயலுக்கு மிகவும் வருந்தி, hakuin-னிடம் மன்னிப்பு கோர விரைந்தனர். 

அத்தனையும் கேட்டுக் கொண்ட Hakuin மீண்டும் புன்னகையுடன் "அப்படியா?" என்று முடித்தார்.  

**

கவனிக்கத்தக்கதும் பெரிதும் பேசப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சியாக இது பதிக்கப்படுகிறது.  அவர் அடைந்த "ஸ்தித ப்ரக்ஞ" நிலைக்கு நல்ல எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி திகழ்ந்தது.

அவர் பிறந்த ஊரான hara என்ற கிராமத்தில் ஜென் பயிற்சி மையத்தை உருவாக்கினர். தனது 83-ஆம் வயதில் இவ்விடத்திலேயே hakuin ekaku உயிர் நீத்தார்.

A zen poem by Hakuin Ekaku:

All sentient beings are essentially Buddhas.
As with water and ice, there is no ice without water;
apart from sentient beings, there are no Buddhas.
Not knowing how close the truth is,
we seek it far away
- what a pity!

- Hakuin Ekaku Zenji 


சேதனம் அனைத்துமே புத்தத்தின் தத்துவம்.
பனிவடிவில் மறைந்துறையும்
பாயும் நீரைப் போல,
உள்ளுரையும் தத்துவம்; 
நீரின்றி அமையாது பனித்துளி.
சேதனம் அனைத்துமே 
புத்தர்களேயன்றி வேறில்லை.
சேதனத்தைத் தாண்டி 
புத்தமென்று தனியெதுவுமில்லை
தன்னுள் உறங்கியிருக்கும்
உண்மையின் அண்மையை உணராது
தொலைவில் தேடித் திரியும்
இரக்கத்துக்குரிய மனிதம்...

(மூலம் - hakuin ekaku zenji)


-ஷக்திப்ரபா

(நன்றி wiki) 

August 17, 2009

Pablo Neruda`s - Saddest poem - சோகத்தின் வரிகள் [மொழிபெயர்ப்புக் கவிதை]

Pablo Neruda-வின் இந்தக் கவிதை என் மனதை மிக அதிகமாய் பாதித்தது. பிசைந்து எடுத்த நெகிழ்வை, வலியை, வேதனையை தமிழில் மொழியாக்கும் சிறு பிரயத்தனத்தின் மூலம் சற்றே குறைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். மறுபடி மறுபடி நினைத்ததாலோ என்னவோ மொழிபெயர்த்து முடித்த பிறகும், வலிமட்டும் எஞ்சியது. இல்லை, இல்லை இன்னும் அதிகமாய் மிஞ்சியது.


இனி என்னைப் பாதித்த அந்தக் கவிதை உங்களுடன்...



சோகத்தின் வரிகள்


சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இப்படிக் கூடத் துவங்கலாம்..

"வான்முழுதும் நட்சத்திரங்கள்
நீலமாய்,
தூரமாய்,
நடுங்கும் நட்சத்திரங்கள்"

காற்றின் ஓம்காரம் வானெங்கும் எதிரொலிக்கும் இரவு.
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

நான் அவளை நேசித்தேன்.
சில நேரங்களில் அவளும் கூட என்னை.

இது போன்ற இரவுகளில்,
எல்லையற்று விரியும்
வானக் குடையின் கீழ்
அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
எல்லையற்ற கணங்கள்..

அவள் என்னை நேசித்தாள்.
சில நேரங்களில் நானும் கூட அவளை.
ஜீவனற்று பெரிதாய் விரிந்திருக்கும் அந்தக் கண்களை
என்னால் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?



அவள் எனதில்லை என்ற எண்ணம்.
அவளைத் தொலைத்து விட்ட உணர்வு..
அதனால் தான்..
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.

இரவுகளின் அடர்த்தி
அவளின் இல்லாமையால், இன்னும்கூட அடர்கிறது.
பனித்துளிகள் புல்லில் படர்வதைப் போல்..
கவித்துளிகள் இன்றென் நெஞ்செங்கும்.

இருத்திக்கொள்ள முடியாத காதலாய் இருந்தால் தான் என்ன?
தொலைந்த காதலின் ஊடே தொலையாத உணர்வுகள்...
நட்சத்திரங்களைத் தாலாட்டும் இவ்விரவின் மடியில்
தன்னந்தனியாய் நான் மட்டும்.

தூரத்தில் பாடலொன்று பட்டுத் தெறிக்கிறது.
தூரத்தில்..
ஆன்மாவை அவளிடமே விட்டுவிட்டு ஒற்றையாய் நான்.

கண்கள் அவள் அருகாமையை நாடத் துடிக்கிறது
நெஞ்சம் அவளைத் தேடிக் களைக்கிறது
இருப்பினும்..
அவள் என்னோடு இல்லை.

இதே இரவு..
இரவுப் பனியில் குளித்த இதே மரங்கள்...
நாங்கள் மட்டும் 'நாங்களை'த் தொலைத்து.

காதல் துறந்த பின்னும் கூட
காற்றில் கலக்காத காதல் உணர்வுகள்..
என் குரல்
காற்றின் தோளேறி அவள்
காதுகளைத் தேடியது.

அவள் வேறொருவனுடையவள்.
என் முத்தங்களில் தோய்ந்த அவள்..
அவள் மெல்லுடல்
அவள் குரல்
அவள் விரிந்த கண்கள்....

அவளுக்கான காதல் இறந்தேவிட்டிருப்பினும்..
அவளைக் காதலிக்கிறேன்.
காதலின் ஆயுள் சிறிது
அதன் மயக்கத்தின் நீளம் மட்டும் நீண்டுகொண்டே...

அவள் அருகாமையை உணர்ந்த இது போன்ற ஒரு இரவால்,
ஆன்மா தொலைக்கப்பட்டிருக்கிறது.

இது அவளால் எனக்குண்டாகும் கடைசி வலி என்றபோதும்...
இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...



மூலம்:

SADDEST POEM

Pablo Neruda.

I can write the saddest poem of all tonight.

Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."

The night wind whirls in the sky and sings.

I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.

On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.

She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?

I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.

To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.

What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.

That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.

As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.

The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.

I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.

Someone else's. She will be someone else's. As she once
belonged to my kisses.
Her voice, her light body. Her infinite eyes.

I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.

Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.

Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.