March 30, 2023

உள்ளும் புறமுமாகி ( Inspired from Zen story)

 



பிரபஞ்சமெனும் மாயப்பந்தாகி
சூல் கொண்ட பேருலகம்;
விலக்கலில் விலகி,
சுருங்கலில் அருகி,
சுழன்றாடும் அகிலத்தின்,
அலகிலா விளையாட்டு;
அணுவிற்கு அணுவுமிங்கு
அண்டத்தின் அங்கமென்றறி!
சூழ்ந்த பெருங்கடலில்,
நீரின்றி நீயில்லை;
நீயின்றி நீரில்லை!
நிலமாகிக் காற்றாகி,
நெருப்பெனவேதான் படர்ந்து,
வேறாகா ஆகாய வீதியின் விதையினுள்,
பிறந்து-பிறந்து வீழ்கிறாய்!

உன்னில் உருவாகி உனையே உருவாக்கி புறமெங்கும் விரிந்து அகத்துள்ளே நிறைந்து எங்கும் அதுவாகிப் போனதால் அதுவே நீயுமாகிறாய் இதுவே உண்மையென உணர்ந்தபின் இரண்டெனக் காணவே ஏதுமுண்டோ சொல்!
..
Inspired from - மூலம்: Zen story
சாரத்தின் தமிழ் மொழியாக்கம் - ShakthiPrabha

அண்ணா தம்பியின் கதை part 2 - ( Deivathin kural)


Seeking solution
கேசித்வஜரின் யஜ்ஞ அநுஷ்டானத்துக்கு தடங்கல் ஏற்பட்டது. ஹோமத்துக்கு ப்ரயோஜனமாகும் க்ஷீரத்தைக் (பாலை) கொடுத்துக் கொண்டிருந்த பசுவை ஒரு புலி அடித்துப் போட்டு விட்டது. கோவதை என்றாலே ஹ்ருதயம் துடித்துப் போகும். அதிலும் யஜ்ஞத்துக்கு உபகரித்து வந்த பசு இந்த கதிக்கு ஆளாயிற்று என்னும் போது கேசித்வஜர் பதறிப் போய்விட்டார்.
.
சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் தோஷங்களை நிவ்ருத்தி பண்ணவும் அந்த சாஸ்த்ரங்களிலேயே ப்ராயச்சித்தம் சொல்லியிருக்கும். அவற்றைச் செய்துதான் தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். “இப்போது நான் பண்ண வேண்டிய ப்ராயச்சித்தம் என்ன?” என்று தம்முடைய பண்டித ஸதஸைக் கேசித்வஜர் கேட்டார்.
.
Scholars pointing kaNdakya
அவர்களோ தங்களுக்குத் தெரியாத ப்ராயச்சித்த ஸமாசாரம் கசேரு என்றவருக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைத்து அவரைக்
கேட்டுப் பார்க்கச் சொன்னார்கள். ராஜா கேசித்வஜர் உடனே கசேருவிடம் போயக் கேட்டார். “எனக்குத் தெரியவில்லை.
பார்க்கவரைக் கேளும்” என்று சொல்லிவிட்டார். கேசித்வஜர் பார்க்கவரிடம் போனார். அவர், “எனக்கும் தெரியவில்லை. சுனகருக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் போம்” என்றார்.
.
நாமானால், “கோவிந்த நாமாவே ஸர்வ ப்ராயச்சித்தம்” என்று மூணு தரம் “கோவிந்தா” சொல்லிவிட்டு அதோடு விட்டிருப்போம். கேசித்வஜர் ஒரு பசுவின் மரணத்துக்குச் செய்ய வேண்டிய ப்ராயச்சித்தத்தில் ‘ஸின்ஸிய’ராக இருந்து, சுனகரிடம் போனார்.
.
”கோவிந்த நாமா ப்ராயச்சித்தம் இல்லையா?” என்றால் ப்ராயச்சித்தம்தான். வேறு ப்ராயச்சித்தம் எதுவுமே நம்மால் முடியவில்லை என்று போது தான் அந்தப் பெரிய ப்ராயச்சித்தத்துக்குப் போக வேண்டும். நாம உச்சாரணம் சுலபமாயிருக்கிறதென்பதால்
நாம் பிறத்தியார் விஷயமாக அதுவே நமக்கு ப்ராயச்சித்தம் என்று பண்ணுவதுபோல், நம் விஷயமாகப் பிறத்தியார் பண்ணினால் சும்மா
இருப்போமா?
.
கேசித்வஜர் சுனகரிடம் போனார். அவர் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார். “கசேரு, பார்க்கவர், நான், இன்னம் யாரெல்லாம்
பெரியவர்களென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அந்த எவருக்குமே நீ கேட்கும் விஷயம் தெரியாது. தெரிந்தவர் ஒருத்தரே ஒருத்தர்தான். நீ ஜயித்து, காட்டுக்கு ஓட்டியிருக்கிறாயே, அந்தப் பரம சத்ருவான காண்டிக்ய ஜனகர்தான் ” என்று சொல்லி விட்டார்.
.
‘பரம சத்ருவிடம் போய் பரிஹாரம் கேட்பதா? கேட்டால் தான் அவர் சொல்வாரா?” என்றுதான் வேறு எவராயிருந்தாலும் கேட்காமல் இருந்திருப்பார்கள். ஆனால் கேசித்வஜர் அப்படிச் செய்யவில்லை.
.
“மஹர்ஷி! நல்ல தகவல் கொடுத்தீர்கள். ரொம்பவும் நமஸ்காரம். விஷயம் கேட்டுக் கொள்வதற்காக காண்டிக்யனைத் தேடி இப்போதே காட்டுக்குப் போகிறேன். ” என்று சொல்லிவிட்டுக் கேசித்வஜர் அங்கேயிருந்தே நேரே தான் மட்டும் ரதத்திலேறிக் கொண்டு
காட்டுக்குப் போனார்.
.
Marching towards the enemy camp
காட்டிலே காண்டிக்யரும் அவரது சின்ன பரிவாரமும் இருக்குமிடத்தை கேசித்வஜர் கண்டுபிடித்து விட்டார். உடனே பரம சத்ருவின்
இருப்பிடத்துக்குக் கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தேரைச் செலுத்தினார்.
.
காட்டுக்கு வந்த பரதனை தூரத்திலிருந்து பார்த்ததும் லக்ஷ்மணனுக்கு எப்படிக் கோபம் வந்ததோ அப்படியே தான் இப்போது காண்டிக்யருக்கும் கேசித்வஜரைப் பார்த்ததும் வந்தது. காண்டியர் கன கோபமாக நாணேற்ற ஆரம்பித்தார்.
....
“அப்பா, காண்டிக்யா! அவசரப்படாதே! நான் சத்யமாய் உன்னைக் கொலை பண்ண வரவில்லை. உனக்கு மட்டுமே தெரிந்ததான ஒரு தர்ம சாஸ்த்ர ஸமாசாரம் கேட்டுக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன் – அந்த விஷயம் தெரியாமலே போகுமானால், அபூர்ணமாக யஜ்ஞத்தை விடுவதைவிட, என் உயிரையே விடவும் தயாராயிருக்கிறேன். ஆகையால் நீ ஒன்று, கோபத்தை விடு, அல்லது பாணத்தை விடு. இரண்டையும் வரவேற்கிறேன்” என்று கேசித்வஜர் ரொம்பவும் உணர்ச்சியோடு கேட்டுக் கொண்டார்.
.
(காண்டக்யர் பரிகாரம் சொன்னாரா? அடுத்த பகுதியில்...)
.
Chapter: கதை உருவாகிறது!
Chapter: ப்ராயச்சித்தம்: பகவந் நாமமும் வைதிக கர்மமும்
Chapter: சத்ருவிடம் பரிஹாரம் கேட்டல்!
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

அண்ணா- தம்பி கதை (part 1) (தெய்வத்தின் குரல்)

சீதையுடைய அப்பாவின் பேர் – சீரத்வஜர்.

ஜனகர் என்பது விதேஹம் என்ற ராஜ்யத்தை ஆண்ட சூர்ய வம்சக்கிளைப் பிரிவினரில் நிமி என்பவரின் வழியில் வந்த எல்லாருக்கும் உரிய குடிப் பெயர். சீதையுடைய அப்பாவின் பேர், அதாவது இயற்பெயர், ஸீரத்வஜர் என்பது. குடிப் பெயரைச் சேர்த்து அவரை ஸீரத்வஜ ஜனகர் என்று சொல்ல வேண்டும்.
.
Cousins - Kesidhvajar and Kandakyar
மிதிலை ராஜவம்சத்தைச் சேர்ந்த அநேக ஜனகர்களில் கேசித்வஜ ஜனகர், காண்டிக்ய ஜனகர் என்று இரண்டு பேர். அந்த இரண்டு பேரும் பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகள்.
.
இவர்களுக்கு தகப்பனாராக இருந்த அண்ணா-தம்பி ஜனகர்கள் இரண்டு பேருமே தனித்தனி ராஜ்யங்களுக்கு ராஜாக்களாக இருந்தவர்கள். அதனால் பிள்ளைகளான கேசித்வஜர், காண்டிக்யர் இரண்டு பேரும் அந்தந்த ராஜ்யங்களுக்கு வாரிசாக ஆட்சி பெற்றார்கள்.
.
கேசித்வஜர், காண்டிக்யர் ஆகிய இரண்டு பேரில் கேசித்வஜர் நிரம்ப வேதாந்தக் கல்வி பெற்றவர். ஆத்ம வித்யையில் நல்ல வித்வத் இருந்த போதிலும் முறையாக ராஜ்ய பரிபாலனமும் செய்து வந்தார். கார்ய லோகத்தில் கேசித்வஜர் காண்டிக்யரைவிட சோபித்து பிராக்டிகலாக முன்னேறினார்.
.
காண்டிக்யர் வேதாந்தத்தின் பக்கம் அதிகம் போகவில்லை. அவர் முழுக்கவும் கர்ம மார்க்கக்காரராகவே இருந்தார். பிரம்ம வித்யா சாஸ்த்ரங்களில் கேசித்வஜர் எப்படி நிபுணராயிருந்தாரோ, அப்படி வைதிக கர்மாநுஷ்டானங்களிலும், காண்டிக்யர் நிபுணராயிருந்தார்.
.
Battle for Supremacy between cousins
அக்கால ராஜதர்மத்தில் எல்லா தேசங்களையும் ஜயித்து, அவற்றைக் கட்டியாளும் 'சார்வபௌம'னாவதே ஒரு ராஜாவின் கடமையாக நினைக்கப்பட்டது. அந்தப்படி காண்டிக்யர், கேசித்வஜரின் ராஜ்யத்தையும் கைப்பற்றுவதற்கு எண்ணினார். கொஞ்சமும் பின்வாங்காத கேசித்வஜரும் இப்படியே காண்டிக்யரின் படை மேல் எதிர்த் தாக்குதல் நடத்தினார். சித்தப்பா – பெரியப்பா பிள்ளைகளான இரண்டு ஜனகர்களுக்கும் யுத்தம் மூண்டது.
.
Victory of Kesidhwajar
கார்ய லோகத்தில் ஒன்றைச் செய்து முடிப்பதில் அதிக ஸாமர்த்தியம் பெற்றிருந்த கேசித்வஜரே ஜயித்தார். காண்டிக்யர் மந்த்ரி-பிரதானிகள், புரோஹிதர்கள் முதலான ஸ்வல்ப பரிவாரத்தோடு காட்டுக்குத் தப்பி ஓடினார். அங்கேயும் யாகங்களை விடாமல் பண்ணினார். கேசித்வஜரும் இனி சத்ரு பயமில்லை என்பதால் நிம்மதியாக நிறைய யாகங்கள் செய்யலாம் என்று ஆரம்பித்தார்.
...
(ஆனால்...)
(To continue)
Chapter: பல ஜனகர்கள்
Chapter: கேசித்வஜர்
Chapter: அத்வைத ஞானிகளும் நடைமுறை உலகும்
Chapter: காண்டிக்யர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

தூரல்கள்

 

அகோரப் பசியின் தீநாக்குகள்
தீனி வேண்டி நாலாபுறமும்
கோரத் தாண்டவமாடியது.
மேகமென பொழியா மழையை மன்னித்து.
தேகம் தீண்டிய சிறுதூரலை தனதாக்கியது
சாரல்களின் சுகமான தீண்டலால்
சற்றே சினம் தணிந்து, அணைந்தது;
சிறுவிரலால் அணைத்தது.
....
இறக்கும் தறுவாயில்
ஊட்டப்படும் இரண்டு சொட்டு நீர்.
இனி பசி எடுக்காது.
எடுத்தாலும் தகிக்காது.
புழுங்காது
சுட்டெரித்து சாடாது.
குளிரும், குளிர்ந்து கூத்தாடும்...
உயிர் தங்கும்...

இன்னும் சிலகாலம் வரை.

March 29, 2023

ராஜராஜ சோழனின் பெருமை (தெய்வத்தின் குரல்)



Rajaraja's greatness

சக்கரவர்த்தி, மன்னர் மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவன் தன்னை எப்போதும் சகலலோக சக்ரவர்த்தியான பரமேச்வரனின் தொண்டனாக நினைத்துக் கொண்டு, அந்த சந்திரசேகரனின் திருவடி தன் முடியில் சூட்டப்பட்டிருப்பதாகப் பாவித்து, பாவித்து சந்தோஷப்பட்டுக் கொண்டு, இதனால் சிவபாத சேகரனாக ஆண்டவனுக்கு அடங்கிக் கிடப்பதையே உயர்வாக நினைத்தவன்.
.
Thirumurai kaNda sOzhan
அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் கரையான் அரித்து மட்கி மண்ணாகியிருக்கும். இதனால் “திருமுறை கண்ட சோழன்” என்றே அவனுக்கு ஒரு பெயர்.
.
தேவாரம் என்ற சொற்கோவிலைக் காப்பாற்றிக் கொடுத்தவன், தஞ்சாவூரில், இன்றும் லோகம் பிரமித்துக் கொண்டாடும்படியான கற்கோயிலையும் கட்டினான். தான் பெற்ற வெற்றிகளுக்கு நன்றிக் காணிக்கையாகக் கட்டினான்.
.
RajaRaja as Conquerer
வடக்கே இப்போது ஒரிஸ்ஸா என்கிறோமே அந்தக் கலிங்கம்வரை படையெடுத்துப் போய், கோதாவரி-கிருஷ்ணா நதிகளுக்கு மத்தியிலே கீழைச் சளுக்கியர்கள் ஆண்டு கொண்டிருந்த வேங்கிநாடு, தெற்கே ஈழம் என்னும் இலங்கை, இப்போது Laccadives – லக்ஷத் தீவு – என்கிற அராபியன் ஸீ ஐலண்ட்ஸ் எல்லாவற்றையும் ஜயித்துத்தான் ராஜராஜன் என்று காரணப் பெயர் வாங்கினான். அவனுடைய சொந்தப் பெயர் அருண்மொழி வர்மன் என்பது. பெயருக்கேற்ப தேவாரமாகிய அருள்மொழிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான்!
.
Humility of Rajaraja
ராஜராஜனாக ஆனவுடன் நமக்கானால் தற்பெருமையும் தலைக்கனமும்தான் ஏற்படும். அவனோ தன் போராற்றல், வெற்றி, வீரதீரம் அத்தனையும் ஈச்வரப் பிரஸாதம்தான் என்பதாக, தான் அடங்கி, ஈச்வரனையே பெரியவனாக, அம்பாளையே பெரியவளாக வைத்து மஹா பெரிய கோவிலைக் கட்டினான். Big Temple of Tanjore, Great Pagoda at Tanjore என்று அதற்கு லோகம் பூரா கியாதி இருக்கிறது.
.
‘ராஜராஜேச்சுரம்’ – ‘ராஜராஜேச்வரம்’ – என்பது கல்வெட்டில் இருக்கிற பேர். ராஜராஜேச்வரி என்பது அம்பாளுக்குப் பிரஸித்த நாமா. இங்கே ஈச்வரனுக்கும் ராஜராஜனை முன்னிட்டு ‘ராஜராஜேச்வரம்’ என்று வாஸஸ்தானம் ஏற்பட்டிருக்கிறது.
.
Somaskandhar
ஸப்த விடங்கர்கள் இருந்தாலும், ‘விடங்கர்’ என்ற மாத்திரத்தில் திருவாரூர் தியாகராஜாதான் நினைவு வரும். சோழ ராஜாக்களுக்கு ஆதியில் தலைநகராயிருந்தது திருவாரூர்தான். மநு நீதிச் சோழன் தன் பிள்ளையைத் தேர்க்காலில் பலிகொடுக்கப் போனது திருவாரூரில்தான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால், ராஜராஜன் தான் புதுசாக, மஹா பெரிசாக ஒரு கோவில் கட்டின போது தன் குல மூதாதைகளையும், குலதெய்வத்தையும் நினைவு கொண்டு, மற்றவர்களும் அவர்களை நினைக்கப் பண்ண வேண்டும் என்றே ‘தக்ஷிண மேரு விடங்கர்’ என்று சோமாஸ்கந்தருக்குப் பேர் வைத்தான்.சிவாலயங்களில் இரண்டு ராஜாக்கள் முக்கியம். ஒன்று நடராஜர், மற்றது தியாகராஜா என்கிற சோமாஸ்கந்தர். தன் பேரிலேயே இரண்டு ராஜாக்களைக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு ‘இந்த’ இரண்டு ராஜாக்களிடமும் தனியான ஈடுபாடு!
.
Rajaraja's administration
ராஜராஜனுக்கு எத்தனையோ பெருமை சொல்கிறார்கள். அவனுடைய வீர தீரப் பிரதாபங்களைச் சொல்கிறார்கள். பக்தியைப் பாராட்டுகிறார்கள். கோவிலுக்காகவும், மூர்த்திகளுக்காகவும், ஆபரணாதிகளுக்காகவும், நித்ய நைமித்திக வழிபாடுகளுக்காகவும், சிப்பந்திகளுக்காகவும், கலைஞர்களுக்காகவும் அவன் வாரி வாரி விட்ட ஒளதாரியத்தைப் புகழ்கிறார்கள். இத்தனையையும் ஒரு detail விடாமல் கல்வெட்டில் பொறித்து வைத்ததைப் போற்றுகிறார்கள்.
.
தான் பரம சாம்பவனாக இருந்தும், பெருமாள் கோவில், புத்த விஹாரம் எல்லாவற்றையும் பேணிய மனோ விசாலத்தை புகழ்கிறார்கள். அட்மினிஸ்ட்ரேஷனிலும் அபாரத் திறமை காட்டி, ராஜ்யத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து முடியாட்சியிலேயே குடியாட்சியாக ஊர்ச் சபைகளுக்கு நிறைய ஸ்வதந்திரம் தந்து, அதன் மெம்பர்களை ஜனநாயகக் குடவோலைத் தேர்வு முறையில் நியமிக்கப் பண்ணினதைக் கொண்டாடுகிறார்கள். நிலங்களையெல்லாம் அளந்து ரிஜிஸ்டர் பண்ணினான்; தெருக்களுக்குப் பேர் கொடுத்து door number போட்டான் என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். அவனுடைய மத உணர்ச்சி, கலா ரசனை, உதார குணம், planning எல்லாவற்றுக்குமே ஒரு ரூபகமாக இந்தப் பெரிய கோவிலை அவன் கட்டினதை அவனுடைய சிகரமான சிறப்பாகப் போற்றுகிறார்கள்.
.
ஆனால் இதைமட்டும் சொன்னால் one-sided தான்; சம்ஸ்கிருதத்துக்கும், வேத, ஆகம சம்பிரதாயங்களுக்கும் அவன் அளவிலாத மதிப்புணர்ச்சியோடு தொண்டு செய்திருப்பதையும் சேர்த்துச் சொன்னால்தான் அவனுக்குப் பூர்ண நியாயம் பண்ணினவர்களாவோம். ஆலய நிர்மாணம், பூஜை, உத்ஸவம், எல்லாம் சாஸ்திர சம்பிரதாயப்படியேதான் அவன் ஏற்பாடு பண்ணினான்.
.
Chapter: இறைவன் திருவடியை முடியில் கொண்டவன்
Chapter: பெருமை இறைவனுக்கே
Chapter: தக்ஷிண மேரு விடங்கர்; ஆடவல்லான்
Chapter: ராஜராஜனின் பெருமைகளும், தலையான பெருமையும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

March 28, 2023

நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் ) (Thomas Hood)




நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் )

*************
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
நான் பிறந்த வீடு - அதன்
சின்னஞ்சிறு சாளரத்தின் வழியே
பகலவன் எட்டிப் பார்க்கும்
பரபரப்பான காலைப்பொழுது...
இம்மியும் நேரம்பிசகி - கதிரவன்
உதித்ததுமில்லை, மறைந்ததுமில்லை;
இப்பொழுதென்னவோ
இரவின் இறுக்கத்தில்
இறுதி மூச்சை முடித்துவிடவே
இறைஞ்சுகிறேன்.
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
சிவப்பும் வெளுப்புமான
ரோஜாக்கள், ஊதாப்பூக்கள், லில்லி மலர்கள்;
வெளிச்சத்தால் செதுக்கப்பட்ட வண்ண மலர்களவை..
இளஞ்சிவப்பு மலர்ப்புதரில் ஒளிந்திருக்கும்
சிட்டுக்குருவிக் கூடுகள்;.
தனது பிறந்ததினத்தில் தமையன் ஊன்றிய
தங்கக் கொன்றையும்..
தழைத்தோங்கி மரமாகி
மண்ணை நேசிக்கிறது..
இன்றோ கொன்றை மட்டுமே
நின்று சுவாசிகிறது!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
ஊஞ்சல் பழகிய இடங்கள்
தாவும் இளங்காற்றை விழுங்கி,
இறக்கைகளை விரித்து,
ஜிவ்வென விண்ணில் சிறகடித்திருந்த உணர்வுகளோ
இப்போது பாரமாகித் தளர்ந்திருக்கிறது.
என் நெற்றிக்காய்ச்சலை
கோடைகாலத்துக் வாவிகளெதுவும்
குளிர்விப்பதில்லை!
.
நினைவிருக்கிறது எனக்கு
அழியா நினைவுகளாக
நெஞ்சில் நிறைந்திருக்கிறது....
அடர்ந்துயர்ந்த ஊசியிலை மரங்கள்;
அதன் மெல்லிய நுனி
வானை எட்டியதென்றே கற்பித்திருந்த
அறியாமைக் களிப்பு அகன்றதும்
பாலகனாக கைப்பற்றிய சுவர்க்கத்திலிருந்து
பல காததூரம் விலகியிருக்கிறேன்!
***
மூலம்: I remember, I remebmber - Thomas Hood
மொழியாக்கம்: ஷக்திப்ரபா

குரு பாத பூஜை ( #Deivathinkural)

குருவின் அநுக்கிரஹத்தால்தான் ஞானம் கிடைக்கும் என்ற விஷயம் சாந்தோக்ய உபநிஷத் சொல்லியிருக்கிறது. ஆசார்யவான் புருஷோ வேத – ஆசார்யனைப் பெற்ற புருஷன் தான் ஞானத்தை அடைகிறான் – என்று அதில் இருக்கிறது.

*
ஒரு சின்னக் கதை போல இதைச் சொல்லியிருக்கிறது. கந்தார தேசத்தை (இந்த நாள் காண்டஹார் என்பது அதுதான்) சேர்ந்த ஒருத்தனின் கண்ணைக் கட்டிக் கொண்டு போய் ஜனசஞ்சாரமில்லாத ஒரு இடத்தில் விட்டு விட்டால் எப்படியிருக்கும்? அவன் எப்படித் தன் ஊருக்குத் திரும்புவான்? கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா என்று தெரியாமல்தானே தவித்துக் கொண்டிருப்பான்? இந்த மாதிரிதான் மாயை நம் கண்ணைக் கட்டி இந்த லோகத்தில் விட்டிருக்கிறது. அப்புறம் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவனிடம் ஒருவன் வருகிறான். கட்டை அவிழ்த்து விடுகிறான். கந்தார தேசத்துக்குப் போகிற வழியையும் சொல்லிக் கொடுக்கிறான். அதற்கப்புறம் இவன் அழவில்லை. பயப்படவில்லை. அவன் சொன்ன மாதிரியே போய்த் தன் ஊரை அடைகிறான். இந்த மாதிரிதான் ஆசார்யனின் உபதேசத்தால், நாம் எங்கேயிருந்து வந்தோமோ அந்தப் பரமாத்ம ஸ்தானத்துக்கு வழியைத் தெரிந்து கொண்டு அங்கே போய்ச் சேருகிறோம் என்று சாந்தோக்யம் சொல்கிறது.
*
ஜகத்குரு என்று பிரஸித்தி பெற்ற ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எங்கு பார்த்தாலும் குருவின் பெருமையைச் சொல்கிறார். ”ஒருவனுக்கு எத்தனைதான் பெருமை இருந்தால் என்ன? குருவின் சரணாரவிந்தங்களில் அவன் தன் மனஸைக் கட்டிப் போட்டிருக்காவிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்.
-
‘என்ன பிரயோஜனம்?’ என்று ஒரே ஒரு தரம் தரம் கேட்கவில்லை. நாலு தரம், ” தத:கிம்? தத:கிம்? தத:கிம்? தத:கிம்?’ ‘என்று கேட்கிறார். ”குர்வஷ்டகம்” (அதாவது குரு ஸ்துதியான எட்டு ச்லோகங்கள்) என்ற ஸ்தோத்தரத்தில், ஒவ்வொரு அடி முடிவிலும் இப்படி நான்கு தரம், மொத்தம் முப்பத்திரண்டு தடவை கேட்கிறார்.
-
முடிவில், தம் சரீரத்தைவிட்டு அவர் புறப்படுவதற்கு முந்திப் பண்ணின உபதேசத்திலும்,
---
ஸத் வித்வான் உபஸ்ருப்யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம் |
ப்ரஹ்மைகாக்ஷரம் அர்த்யதாம் ச்ருதிசிரோவாக்யம் ஸமாகர்ண்யதாம் ||
----
என்கிறார்.
-
”ஸத்தான வித்வானை ஆசார்யனாக வரிப்பாயாக! தினந்தோறும் அவருக்குப் பாத பூஜை பண்ணுவாயாக! அவரிடமிருந்து உபதேசம், பிரணவ உபதேசம், உபநிஷத மஹாவாக்ய உபதேசம் எல்லாம் வாஙகிக் கொள்வாயாக!” என்கிறார். (”ப்ரதி தினம் தத்பாதுகா ஸேவ்யதாம்” என்று சொன்ன பகவத் பாதாளின் பாதுகைக்கு, இன்றைக்கும், ஒரு நாள் விடாமல் பிரதி தினமும் மடத்தில் பாத பூஜை நடந்து கொண்டிருக்கிறது!)

(DeivathinKural(Paramacharya) - By Ra.Ganapathi AvargaL)

அக்ஷய பாத்திரங்கள் (மொழிபெயர்ப்புக் கவிதை)




அள்ளக் குறையாத  

அன்பெனும் நீரூற்றை  ஆன்மாவில்   நிரப்பி,

மானுடத் துயர்துடைக்கும் அமுதசுரபிகளாக  வேண்டும்; 


வளரன்பில்  புதைந்திருக்கிறது

வாழ்தலின் இன்பம்;

இறைவனின் கொடையை  உறிஞ்சி

பிறர்க்குப் பரிசளிப்பதில் மறைந்திருக்கிறது  

நமது தேடலுக்கான விடை.


** 

மூலம்: ஆங்கிலம்: Ella Wheeler Wilcox

தமிழில் -ஷக்திப்ரபா


நமஸ்கரிப்பவனே பாக்கியசாலி (தெய்வத்தின் குரல்)

இத்தனை வருஷமாக நித்யமும் நீங்கள் கூட்டங்கூட்டமாக வந்து எனக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டு வந்திருப்பதில் நானும் உங்களுக்காக அவனை(இறைவனை) மனஸால் நமஸ்கரித்து, உங்கள் நல்லதற்காக ப்ரார்த்தித்துக் கொள்ளத்தான் முடிந்த மட்டும் முயற்சி பண்ணி வந்திருக்கிறேன்.

.
நாங்கள்(துறவிகள்) உங்கள் நமஸ்காரத்தை மனசாலே தூக்கி, உங்களுக்காக நாங்கள் செய்கிற ப்ரார்த்தனையின் ‘வெயிட்’’டையும் அதோடு சேர்த்து நாராயணனிடம் கொண்டு இறக்க வேண்டும்.
.
Offering everything unto Lord NarayaNa
“இது நமக்குக் கொஞ்சங்கூட உரிமைப் பண்டமில்லை. நம் மூலமும் எதாவது நல்லது நடந்தால் அப்படி நடத்துவிக்கும் அந்த நாராயணனுக்கே உரிய ஸாமான் இது.
அதை நாம் ஒரு கூலியாகத்தான் தாங்குகிறோம்”
என்பது புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பக்தர்களிடம் ப்ரியத்தினால் அந்த பாரத்தை ஸந்தோஷமாகவே தாங்கி – தாற்காலிகமாகத் தாங்கி – பகவானிடம் இறக்க வேண்டும்.
...
அப்படி இறக்காமல் எங்களுக்கே அந்த நமஸ்காரம் என்று நினைத்துக் கொண்டால் அது நிரந்தரமான பாப பாரமே ஆகி விடும்.
-
Devotees carry no baggage
மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்று தெரிகிறது. என்ன பாக்யம் என்றால் பாரத்தைத் தள்ளி விட்டு அக்கடா என்று கிடக்கிற பாக்யம்! பெரியவர் என்று அவன் நினைக்கிற ஒருவருக்கு முன்னாடி தன்னுடைய உடம்பைத் தள்ளி நமஸ்கரிக்கிற போதே அவன், ‘இவர் நம்முடைய ஸமாசாரத்தைப் பார்த்துக் கொள்வார்’ என்று பாரத்தையும் தள்ளி விடுகிறான்.
Acharya talks about he becoming Peetaathipathi at a young age
இந்த மாதிரி பாரத்தைத் தள்ளி லேசாகி, எளிசாகி ஒருத்தருக்கு முன்னே நமஸ்கரித்துக் கிடக்கிற பாக்யம் எனக்கு பால்யத்திலேயே போய் விட்டது! பறிபோய் விட்டது! ‘ஸ்தானம்’ வந்து பாக்யத்தைப் பறித்துக் கொண்டு போய் விட்டது!
.
Chapter: நம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்
Chapter: உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை!
Chapter: நமஸ்கரிப்பவனே பாக்யசாலி
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

March 27, 2023

யாருக்கு நமஸ்காரம் செய்யலாம் (Deivathin kural)

அதில் ஒரு வயசு வரம்பு சொல்வதுமுண்டு. மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள்.

.

விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு விருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாம் என்று தோன்றுகிறது.
.
நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று
இருக்கிறது.
.
உதாரணமாக, மன்னி (அண்ணி) வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயசுக் குறைவானாலும் நமஸ்கரிக்கணும்.
.
வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நியாஸிகள், ஆத்ம சம்பந்தமான தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்திலுள்ளவர்கள் –
.
அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே நம்மைவிட வயசில் சின்னவர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.
.
Chapter: நமஸ்காரத்திற்கு உரியவர்கள்: வயது வரம்பு)
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

March 25, 2023

நமஸ்கார விதிமுறைகள் (Deivathin Kural)



கிழக்கும் மேற்கும் பார்த்த ஸ்வாமிகளுக்கு வடக்கு முகமாகவும், வடக்கும் தெற்கும் பார்த்த ஸ்வாமிகளுக்குக் கிழக்கு முகமாகவும் நமஸ்காரம் செய்யவேண்டும். அதாவது தெற்கு முகமாகவும், மேற்கு முகமாகவும் நமஸ்காரம் பண்ணக் கூடாது.
.
பொதுவாகவே மனிதர்களுக்குக்கூட பிரதக்ஷிணம் பண்ணாமலே நமஸ்கரிக்கிறபோது தெற்குப் பார்க்கவோ, மேற்குப் பார்க்கவோ பண்ணாமல், கிழக்கு அல்லது வடக்குப் பார்க்கவே பண்ணவேண்டும்.
.
ஒரு கோவில் என்றிருந்தால் அதிலிருக்கும் அநேக ஸந்நிதிகள், கோஷ்டங்கள் முதலியவற்றிலுள்ள எந்த மூர்த்திக்கும் அந்த இடத்திலேயே கீழே விழுந்து நமஸ்காரம் கூடாது. கைகூப்பித்தான் அஞ்ஜலி. ஏன் இப்படியென்றால், கோவிலில் அநேக மூர்த்திகள் ஒவ்வொரு திசை பார்த்துக் கொண்டிருப்பதால் ஒன்றுக்கு எதிரே விழுந்து நமஸ்காரம் பண்ணினால் இன்னொரு மூர்த்திக்கு எதிரே காலை நீட்டிய அபசாரம் ஸம்பவித்து விடும்.
.
ஆகவே கொடிமரம் என்கிற த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி மூலவருக்குப் பக்க வாட்டமாக மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டும். மூல மூர்த்திக்கு அப்படிப் பண்ணினால் அதுவே அவரது பரிவார மூர்த்தியாக இருக்கப்பட்ட மற்ற எல்லா மூர்த்திகளுக்கும் சேர்ந்துவிடும். ‘மூலம்’ என்கிற வேரில் விடுகிற ஜலம் எல்லாக் கிளைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிற மாதிரி! ஆனால் கோவிலுக்குள்ளேயே தனியாக ஒரு கொடி மரத்துடன் ஒரு ஸந்நிதி இருந்தால் அங்கே அந்த மூர்த்திக்கு விழுந்து நமஸ்கரிக்கலாம்; தப்பேயில்லை.
.
பெரும்பாலும் அம்மன் ஸந்நிதிகள் ‘அம்மன் கோவில்’ என்றே சொல்லும்படியாக அப்படி இருக்கின்றன.
.
இன்னொரு முக்யமான விஷயம்: ப்ரதக்ஷிணம் ரொம்ப ரொம்ப மெதுவாகப் பண்ண வேண்டும் என்று விதி. பூர்ணகர்ப்பிணியான ஒரு ஸ்த்ரீ விளிம்பு வரை எண்ணெய் உள்ள ஒரு கிண்ணம் வழியாமல் நடக்கணும் என்றால் எப்படிப் போவாளோ அப்படி அடி அடியாக மெதுவாக வைத்து, ப்ரதக்ஷிணம் பண்ணணும் என்பார்கள். அப்படிப் போனால்தான் பகவத்பரமாகவே சித்தத்தை ஒருமுகப்படுத்த முடியும். ப்ரதக்ஷிணம் நடை வேகமானால், சித்தமும் விருவிருவென்று ஓடும்; நானாதிசையும் ஓடும். இது ஒரு காரணம்.
.
Chapter பிரதக்ஷிணத்திற்குப் பின் செய்யும் நமஸ்காரம் (Volume 7 )
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

March 23, 2023

மார்கழி மகிமை - தேவ சபைகள்

Divine Sabhas / Greatness of Margazhi

ரங்கம் என்றால் ஸபைதான். சிதம்பரத்திலோ ஸபை, ஸபை என்றே ஸந்நிதியைச் சொல்கிறது – சித்ஸபை, கனகஸபை என்று.
.
இந்த இரண்டு ஸபைகளிலும் இருக்கிற இரண்டு ராஜாக்களும் ஒரே மாதிரி தெற்குப் பார்த்தே இருப்பதிலும் ஒற்றுமை!
..
இன்னொரு ஒற்றுமை, இந்த இரண்டு ராஜாக்களுமே தங்கள் ராஜ்யப் பிரஜைகளுக்குத் தண்டனை கொடுக்கிறதற்கோ, மற்ற ராஜ்யங்களோடு சண்டை போடுவதற்கோ ஸபை கூட்டி தர்பார் நடத்துகிறவர்களில்லை! ராஜாங்க – அரசாங்க ஸபையே இல்லை! ‘ராஜ அங்கமான ஸபையேயில்லாத ராஜாக்களா? வேடிக்கையாயிருக்கே?” என்றால் வேடிக்கையேதான்!
.
பிரபஞ்சம் பூராவையும் வேடிக்கையாகவே நடத்தி வைக்கிற ஸர்வலோக ராஜா தான் இப்படி இரண்டு வேஷம் போட்டுக் கொண்டிருப்பது! ஒருத்தன் வேடிக்கை ஆட்டமாகவே ஆடி அதை நடத்தி விடுகிறான் – ஆமாம், அவனுடையது தண்டனை தரும் ஸபையில்லை, நடன ஸபை! ம்யூஸிக் ஸபா, டான்ஸ் ஸபா என்றே சொல்கிறோமே, அந்த மாதிரி ஸபை!
.
ஏகாதசி பட்டினி போட வைத்தவனுடைய ஸபை? அது நான் சொன்ன வேடிக்கையிலேயும் இன்னும் வேடிக்கை! சயனக்ருஹம் – bedroom –தான் இங்கே ஸபை!
..
நம்முடைய பூர்விகர்கள் அந்த இரண்டு பேரும் ஒருத்தனேதான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. அந்த இரண்டு பேருக்கும் விசேஷமான திருநாள்கள் இந்த தநுர் மாஸத்திலேயேதான் வருகிறது.
.
இரண்டு பேருக்குமான திருப்பாவை – திருவெம்பாவைப் பாராயணமும் இந்த மாஸத்துக்கென்றே ஏற்பட்டிருக்கிறது.
..
சிவ-விஷ்ணு அபேதத்தைப் போக்கி ஐக்கியத்தை இப்படிக் காட்டும் பெரிய சிறப்பால்தான் தநுர்மாஸத்திற்கு இத்தனை விசேஷம், ‘மாஸானாம் மார்க்கசீர்ஷோ (அ)ஹம்’ – ’மாஸங்களுக்குள்ளே நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கூறும்படியான தனிச் சிறப்பு* ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
.
Chapter: இரண்டு ராஜாக்கள்: ஸர்வலோக ராஜாவின் இரண்டு வேஷங்கள்
Chapter: சிவ விஷ்ணு அபேதம்
Chapter: தநுர்மாஸம், மார்கழி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - அருணாசல கவிராயர் ; நடமாடித் திரிந்த உமக்கு - பாபவினாச முதலியார் ;; பாடல் வியாக்கியானம் (தெய்வத்தின் குரல்)

Following links from deivathin kural, talks about arunachala kavirayar's

"ஏன் பள்ளி கொண்டீர் ஐயா"
and paapavinasa mudhaliyar's
"நடமாடித் திரிந்த உமக்கு"
Both these poets, took the liberty to tease and play with the lord thro their sahithyams. Their abundant bhakthi, dasya bhava, "Mithrathva" (friendship with the lord) is highlighted.
Sri Kanchi swami has elaborated upon these two wonderful songs , embellished it with his divine perspective, and made these songs sheer nectar to understand and appreciate.
Sharing the links:
Arunachala kavirayar's "En paLLi kondeer ayya" 👇
Paapavinasa mudhaliyar's "Nadamaadi thirindha umakku" 👇
nan and 5 other

இரும்பிலே ஒரு இதயம்




மீண்டுமொருமுறை நொறுக்கப்பட்டு

பிசையப்பட்டு பிழிந்தெடுத்த இதயம் 

எஞ்சியிருக்கும்  நினைவுகள்

கைகொட்டிச்  சிரித்து கேலிக்கிறது.

..

கிட்டாத உயரத்தில்

இதயத்தை பத்திரப்படுத்த வேண்டும்

இறைவனே வந்தாலும்

இடையறாது தட்டட்டும்

-

ShakthiPrabha