July 31, 2019

கோச்செங்கட் சோழன்


Image result for கோச்செங்கட் சோழன்
.

செங்கட் சொழரை தெரிந்து கொள்வதற்கு முன், திருவானைக்காவின் ஸ்தல புராணத்தை நினைவு படுத்திக்கொள்வோம்.
.

ஒரு அடர்ந்த காட்டில் வெண்-நாவல் மரமொன்று சிவலிங்கத்திற்கு குடையாகி நின்றிருந்தது. தவப்பயனால் மிக்க பக்தி கொண்ட யானை, அன்றாடம் காவிரி நீரால் திருமஞ்சனம் செய்து கொத்து மலர் உருவி, அதனால் இறைவனை வழிபட்டு வந்தது. சிவலிங்கத்தின் மேல் பக்தி கொண்ட சிலந்தியொன்றும் இறைவன் மேலுள்ள காதலால், அவருக்கு குடையென வலை பின்னியது. மரத்திலிருந்து சருகு உதிராதவாறு, இன்ன பிற பறவைகளின் எச்சமும் படாதவாறு கவனத்துடன் அழகிய பந்தலைப் போன்று வலை பின்னியது. 
.

யானைக்கு அவ்வலை அழகான பந்தலைப்போல் தோற்றம் தரவில்லை போலும், நீரால் அதை சுத்தப்படுத்தி, தனது பூஜையை தொடர்ந்தது. நீர் அபிஷேகம் செய்யும் பொழுது, துதிக்கை தவறி அமைத்த வலையை சிதைத்திருக்கும் என்றேண்ணிய சிலந்தி, மறுபடி அழகிய பந்தலைப் பின்னியது. அடுத்த நாளும் யானை அதனை அழிக்க, சிலந்தி சினம் தாளாமல் யானையின் துதிக்கையின் உடுபுகுந்து கடித்து துன்புறுத்தியது. வேதனையை தாளாத யானை துதிக்கையை நிலத்தில் மோதி உயிர் நீத்தது. அதனுள் இருந்த சிலந்தியும் இறந்து போனது. இறையனார் அருளால் யானைக்கு முக்தியும், சிலந்திக்கு சீரிய பிறப்பும் கிடடியது. 
.

இறந்து போன அந்த சிலந்தியின் தொடர்ச்சி தான் இந்த நாயன்மார் வரலாறு.
.

வலை பின்னி பக்தி செய்த சிலந்திக்கு அரும்பிறப்பு அருளிய இறைவன், கமலவதி எனும் சோழ பட்டட்தரசிக்கு மகனாக பிறக்கச் செய்தார். பிரசவ நேரத்தில், அரசியின் வயிற்றுக் கரு, இன்னமொரு நாழிகை கழித்து ஜனிக்குமானல், உலகாளும் பேரரசனாக விளங்குவான் என்று கணித்த ஜோதிடர்களின் வாக்கில் நம்பிக்கை கொண்டு, தன் இரு கால்களையும் பிணைத்து தலைகீழாக தொங்கவிடும் படி வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. "கோ செங்கண்ணானே" என்று பாசமேலிட அழைத்தபடி அரசி உடல் உகுத்தாள். 
.

பக்தியிலும் வீரத்திலும், மேம்பட்டு விளங்கினான் செங்கட்சோழன். தக்க பருவம் வந்ததும், அவனுக்கு முடிசூட்டிய தவமியற்றி சிவலோகம் அடைந்தான் அவன் தந்தையாகிய சோழ மன்னன் சுபதேவன். 
.

சிறந்து ஆட்சி செலுத்திய சோழனுக்கு இறைவன் அருளால் பூர்வஜன்ம வாசம் மிகுந்திருந்தது. முற்பிறப்பில் கொண்ட பக்தியும் தப்பாது நினைவில் இருந்தது. திருவானைக்கா எனும் இடத்தில் தனது சிலந்தி வாழ்வின் தொடர்ச்சியே இப்பிறவி அறிந்து சிலந்தியால் கட்டமுடியாத பந்தலை, செங்கட்சோழனாக, வெண்-நாவல் மரத்தின் கீழுள்ள சிவனாருக்கு திருக்கோவில் அமைத்தார். நாடெங்கும் வெவ்வேறு இடங்களில் கோவில் கட்டுவித்தார் . அனைத்து ஆலயங்களிலும், பூசைகளும் அன்றாட ஆகம விதிப்படியான வழிபாடுகளும் நடக்கும்படி செய்தார். தில்லையில் வாழும் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்தார். பல போற்றத்தகுந்த திருப்பணிகள் செய்தபடி சிவபக்தியில் ஈடுபட்டு சிவநெறி வழுவாது சிறந்த ஆட்சியும் செய்தார். 
.

செங்கட்சோழன் பக்தியில் மட்டுமின்றி சிறந்த அரசனாகவும் பெரும் போர்வீரனாகவும் திகழ்ந்தார். சேர மன்னனை கழுமலம் என்ற ஊரில் போரிட்டு வென்றார். அப்போரில் தோற்ற சேரனை கைது செய்தார். சேரனின் உற்ற நண்பரும் அவனது அவைப்புலவருமான பொய்கையார் சோழனின் படைவலிமையைப் போற்றி "களாவ்ழி நாற்பது" எனும் நூலில் செங்கட்சோழன் புகழ் பாடி அதன் பரிசாக சேரமன்னனை மீட்டுச் சென்றார் என்பது வரலாறு. 
.

திருவானைக்காவில் வேதமே நாவல் மரமாக இருந்து சிவனை வழிபட்டதாகவும் ஸ்தல வரலாறு. 
.

ஆலயங்கள் பல கட்டியும் சிவனை துதித்தும் நல்லறம் வளர்த்த செங்கட் சோழர் பெருவாழ்வு வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார். 
.
குறிப்பு:

அப்பர் சம்பந்தரால் பாடப் பட்டவர். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டவர். சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவில் நின்றவர் என்பதால் விஷ்ணு ஆலயங்களும் கட்டினார். இவரது காலம் 200-225 என்று தோராயமாகக் கூறலாம். 
.
(சிவகணங்களுள் இருவரான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் அகங்காரத்தின் வெளிப்பட்டால் தவறு செய்துவிட, யானையாகவும் சிலந்தியாகவும் பிறந்தனர் என்றும் குறிப்பு) 
ஓம் நமச்சிவாய 
.

லலிதா சஹஸ்ர நாமம் (725-750) (With English Meanings)




விபூதி விஸ்தாரம்

சனகாதி சமாராத்யா;
ஷிவ ஞான ப்ரதாயினீ;
சித் கலா;
ஆனந்த கலிகா;
ப்ரேம ரூபா;
ப்ரியம்(ங்)கரீ;
நாம பாராயண ப்ரீதா;
நந்தி வித்யா;
நடேஷ்வரீ;
மித்யா ஜகததிஷ்டானா;
முக்திதா;
முக்தி ரூபிணீ;
லாஸ்ய ப்ரியா;
லயகரீ;
லஜ்ஜா;
ரம்பாதி வந்திதா;
பவதாவ சுதா விருஷ்டி;
பாபாரண்ய தவானலா;
தௌர்பாக்ய தூல வாதூலா;
ஜராத்வாந்த ரவிப்ரபா;
பாக்யாப்தி சந்திரிகா;
பக்த சித்த கேகி கனா-கனா;
ரோக பர்வத தம்போலீ:
ம்ருத்யு தாரு குடாரிகா;
மஹேஶ்வரீ;

()
சனகா = ரிஷி சனகர் - பிரம்மாவின் நான்கு புதல்வர்களுள் ஒருவர் *
ஆதி = முதலியவை (வேறு சொல்லுடன் இணைக்கப்படும் பொழுது , முதலியவை என்று அர்த்தம் கொள்ளத் தகும்) 
சமாராதன் = போற்றுதல், சேவை சாதித்தல் 

#726 சனகாதி சமாராத்யா = சனகர் முதலிய  ரிஷிகளால் தொழுதேற்றப்படுபவள்  *

* பிரம்மதேவனின் மனத்தினின்று தோன்றிய சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புதல்வர்கள்  முதலில் படைக்கப்பட்டவகள்.  

()
ஶிவ = சுபமான - நலம் பயக்கும்
ஶிவ-ஞான= சிவனைப் பற்றிய அறிவு  ie மங்களம் நல்கும் நல்லறிவு
ப்ரதான் = கொடை - பரிசு
தாயின் = கொடுத்தல்

#727 ஶிவ-ஞான ப்ரதாயினீ =  நலம் தரும் சிவத்தைப் பற்றிய  நல்லறிவு நல்குபவள் 

()
சித் = உணர்வு - சுத்த சைதன்ய உணர்வு
கலா = பகுதி (பூரணத்தின் ஒரு பகுதி) 
கலா = சைவ சித்தாந்தத்தின் படி, "எதையும் செய்யக்கூடிய ஆற்றல்" - பேராற்றல்

#728 சித்-கலா - பரப்பிரம்மத்தின் சுத்த-சைத்ன்ய உணர்வாக விளங்குபவள் - பேருணர்வின் அளப்பறிய ஆற்றலானவள் 

()
கலிகா = மொட்டு 

#729 ஆனந்த கலிகா = பேரானந்தத்தின் அவிழாத மொட்டாக விளங்குபவள் *

*பந்தப்பட்ட ஜீவனிடம் பேரானந்தம் வெளிப்படுவதில்லை. மொட்டாகவே
அலராத நிலையில் மூடப்பட்டிருக்கிறது.  ஞானம் பிறக்கும் பொழுது மோட்டானது பேரானந்தமாக மலரும். 

() ப்ரேம = பிரேமை- அன்பு 

#730 ப்ரேம ரூபா = தூய அன்பு வடிவானவள் *
* (சிருஷ்டியிடத்தே, ஜீவர்களிடத்தே  அன்னை கொண்டிருக்கும் மேன்மையான அன்பு) 

()
ப்ரிய(ம்) =  அன்பு - பிடித்தமான
கர = செய்பவர் - நிகழ்த்துபவர்

#731 ப்ரியங்கரீ = பரஸ்பர அன்பை உண்டாக்குபவள்  
#731 ப்ரியங்கரீ = (பக்தர்களின்)  விருப்பத்தை பூர்த்தி செய்பவள் 

()
பாராயண = தியானிக்கப்படும் பொருள் - தீவிரமான ஆர்வம்
பாராயண = இடைவிடாத ஈடுபாடு 
நாம = பெயரைக் கொண்டு - வணங்குதல்
நாம பாராயண = இறைவனின் நாமத்தை தியானித்திருதல் (ஜபித்தல்) 
ப்ரீதா = மகிழ்வடைதல்

#732 நாம பாராயண  ப்ரீதா =  ஈடுபாட்டுடன் கூடிய நாமபாராயண ஜபத்தினால் பூரிப்படைபவள் 

() 
நந்தி =  திருக்கையிலையில் வசிக்கும் சிவபெருமானின் சேவகர் - சிவனின் ரிஷபவாகனம் ( நந்திதேவர்)
நந்தி = சிவபெருமானின் பெயர்
நந்தி = ஒரு ரிஷியின் பெயர்
வித்யா = மெய்ஞான அறிவு -  மெய்ஞானத்திற்கு தொடர்புடைய அறிவு, தத்துவ விளக்கம், பாரம்பர்ய வழிமுறைகள்
வித்யா = அன்னை துர்கை

#733 நந்தி வித்யா =  வித்யை, ஞான-போதனை, மந்திரங்களைக் கொண்டு நந்திதேவனால் போற்றி வணங்கப்படுபவள் 

() 
நட = நடனமாடுபவர்
நடேஷ்வர் = ஆடலரசர் நடராஜர் = சிவன்

#734 நடேஷ்வரீ = (சிவனின் ஆடல் ஸ்வரூபமான ) நடராஜரின் துணைவி - நடனத்தின் ஈஸ்வரீ

()
மித்யா = மாயை
ஜகத் = உலகம் - ஜகம்
அதிஷ்டான = ஆதாரம்

#735 மித்யா-ஜகத் அதிஷ்டானா = மாயப்பிரபஞ்சம் நிலைகொண்டிருப்பதற்கு ஆதாரமானவள்  

()
தா = கொடுப்பது
முக்தி = வீடுபேறு

#736 முக்திதா = முக்தியளிப்பவள் 

()
ரூபிணீ - வடிவான

#737 முக்திரூபிணீ = முக்தி வடிவானவள் 

() 
லாஸ்ய = நடனம் (இசையுடனும் பாடல்களுடனும்  கூடிய நடனம்)
லாஸ்ய = பிரேம பாவங்கள் நிறைந்த நடனம்

#738 லாஸ்யப்ரியா  = லாஸ்ய  நடனத்தில் ஈடுபாடு கொண்டவள் (பாவங்களை வெளிப்படுத்தும் நடனம்)

()
லய = ஒடுக்கம் = கரைதல் 
கர = செய்வித்தல் 

#739 லயகரீ = ஒடுக்கத்திற்கு காரணமானவள் *

* பிரபஞ்சத்தின் ஒடுக்க தோற்ற நிலைகளின் நடுவே உள்ள ஓய்வு நிலையே லயம்.   அதனை செய்விப்பவளாக   அன்னை போற்றப்படுகிறாள். 

#740 லஜ்ஜா = அடக்கமானவள் (  நாணம் நிறைந்தவள் ) 

()
ரம்பா = அப்ஸரஸ்களின் ராணி - தேவலோக மங்கை 
ஆதி = முதலியன
வந்திதா = கொண்டாடப்படுதல்

#741 ரம்பாதி வந்திதா = ரம்பை முதலிய அப்ஸரஸ்களால் போற்றி கொண்டாடப்படுபவள் *

* ஊர்வசி, ரம்பா, மேனகா, திலோத்தமா ஆகியோர் தேவலோகத்தின் வசிக்கும் பெயர்பெற்ற அப்ஸர ஸ்த்ரீகள்

()
பவ = லௌகீக வாழ்வு - சம்ஸார ஸாகரம்
தாவ = துன்பம் = தகிப்பு
சுதா = தேன்  
வ்ருஷ்டி = மழை

#742 பவதாவ சுதா வ்ருஷ்டி = சம்ஸார சுழலின் தகிப்பை தணிக்கும் தேன்மழை போன்றவள் *

* தேன்மழை என்பது  மெய்ஞானத்தைக் குறிக்கும்.  ஞானத் தெளிவு எனும் மழையை  பொழிந்து  உலக வாழ்கையின் அறியாமையை போக்குபவள் . 

()
பாப = பாபங்கள் 
ஆரண்ய = காடு
தவா = நீக்குதல்
ஆனல = நெருப்பு

#743 பாபாரண்ய தவானலா = பாபங்களெனும் பெருங்காட்டை அழிக்கும் நெருப்பானவள் 

() 
தௌர்பாக்ய = துர்பாக்கியம்
தூல = பஞ்சு
வாதூல = சூறாவளி

#744 தௌர்பாக்ய தூலவாதூலா = துர்பாக்கியம் எனும் பஞ்சிப் பொதிகளை ஊதிடும் சூறாவளியைப் போன்றவள்  

()
ஜரா = முதுமை
த்வாந்த = இருள்
ரவி = சூரியன்
ப்ரபா = வெளிச்சம் 

#745 ஜராத்வாந்த ரவிப்ரபா = முதுமையின் அறியாமையை விலக்கும் சூரியவெளிச்சமானவள் *

* பக்தர்களின் மனங்களில் அறியாமை எனும் இருளை நீக்கி தெளிவு எனும் வெளிச்சம் தோன்ற காரணமானவள் . முதுமையில் உடல்சார்ந்த நோயின் தாக்கம்,  உடலின் மேல் கொண்ட பற்றுதலால் தோன்றும் மரணபயம் முதலியவைகளால் எழும் அறியாமை. 

()
பாக்ய = சௌபாக்கியம் - அதிஷ்டம்
ஆப்தி = சமுத்திரம்
சந்த்ரிகா =  நிலவோளி

#746 பாக்யாப்தி சந்திரிகா = சௌபாக்கியம் எனும் பெருங்கடலில் எழும் நிலவொளியைப் போன்றவள் 

()
பக்த சித்த = பக்தர்களின் மனம்
கேகி = மயில்
கனா-கனா = அடர்ந்த மேகம்

#747 பக்த சித்த கேகி கனாகனா = அடர்ந்த கருமேகத்தினைக் கண்டு மகிழ்ந்தாடும் மயில் போல், பக்தர்களின் சித்தத்தை மகிழச் செய்பவள். 

()
ரோக =  ரோகம் - நோய்
பர்வத = மலை
தம்போலா =  இடி-பேரிடி


#748 ரோக பர்வத தம்போலா = பெருமலைபோன்ற பிணியை தாக்கி நிர்மூலமாக்கும் பேரிடி போன்றவள்  

()
தாரு = மரத்தினாலான - மரம்
குடாரிகா = கோடரி
ம்ருத்யு = மரணம்

#749 ம்ருத்யு தாரு குடாரிகா = மரணமெனும் மரத்தை வெட்டிச் சாய்க்கும் கோடாலியைப் போன்றவள் 


#750 மஹேஶ்வரீ = உயர்ந்தவள்- தலைவி -  மகா ஈஸ்வரீ - மஹேஸ்வரனின் பத்தினி. 




(தொடரும்) 



Lalitha Sahasranama (725-750) 


Vibhoothi Visthaaram 


Sanakaadhi SamaaraadhyA;
Siva-gnaaNa pradhaayinI;
Chith kalA;
Aanandha kalikA;
Prema RoopA;
PriyamkarI;
Naama PaaraayaNa preethA;
Nandhi VidhyA;
NateshvarI;
MithyA JagadhadhishtaanA;
MukthidhA;
Mukthi RoopiNI;
Laasya PriyA;
LayakarI;
LajjA;
Rambaadhi vandhithA;
Bhava-dhaava Sudhaa vrishti:;
Paaparanya dhavaanalA;
Daurbhaagya thoola-vaathoolA;
Jaraa-dhvaantha ravi-prabhA;
Bhaagyabdhi ChandrikA;
Bhaktha Chitha Keki Ghanaa-ghanA;
Roga parvatha DhambolA;
Mruthyu dhaaru KutaarikA;
MaheshvarI;


()
Sanaka = Name of a Rishi ; One of the four sons of brahma *
aadhi = et caetera, and so on ( when used at the end of a compound)
Samaaradhan = Attending, serving 

#726 Sanakaadhi SamaaraadhyA = Who is served and worshipped by Saints
and Rishis like Sanaka

* Four sons of Brahma are Sanaka, Sanaadhana, Sanandhana, and Sanatkumara. They are  mentioned  as first creations(sons) born from the mind of Brahma

()
Shiva = auspicious, benign  
Shiva-Gnaana = knowledge of Shiva. i.e. knowledge of that which is auspicious
Pradhaan = gift
dhaayin = To give, cause

#727 Shiva-Gnaana PradhaayinI = She who grants the supreme, auspicious knowledge of Shiva 

()
Chith = Consciousness - pure consciousness of the spirit
Kalaa = a part of the whole(brahman) 
Kalaa = In shaiva philosophy it refers to "the power to do anything"
               the omnipotence"

#728 Chith-KalA = Who is the consciousness (power of consciousness) in the Supreme Brahman

()
Kalikaa = bud - unblown flower 

#729 Anandha Kalika = Who is the unblossomed bud of Bliss *

*Bud which is not blossomed in bonded souls. Bud which will eventually blossom with Gnaana. 

()
Prema = love, affection

#730 Prema Roopa = Who is the manifestation of Pure Love. 
(Being the Cosmic Mother, her love towards Jivas is Supreme) 


()
Priya(m) = favourite - wanted - liked 
Kar = doer - maker 

#731 PriyamkarI = Who makes Love(mutual) possible. Who causes love. 
#731 PriyamkarI = Who graces the wants (of her devotees) to happen. 

() 
PaaraayaNa = object of attention - intent upon  
PaaraayaNa = Engaged in - absorbed in (continuously) 
Nama = by Name - pray 
Naama-PaaraayaNa = Meditating upon God's name(s) continuously (repeatedly ie chanting) 
Preethaa = pleased

#732 Naama paaraayana PreethA = Who is delighted by Nama-Japa ie dedicatedly meditating her names(continuous repetition) 

()
Nandhi = attendant of Shiva  
Nandhi = Shiva himself
Nandhi = One of the Rishi 
Vidhya = Knowledge - Science ie philosophy or tradition
Vidhya = Goddess Durga

#733 Nandhi-Vidhya = She who is extolled and glorified by Nandhi 
(Who spreads knowledge of Durgadevi(srividhya) through teachings,  mantras, scriptures)

()
Nata = Dancer 
Nateshvar = Lord Nataraja - Shiva

#734 Nateshvari = Who is the consort of Lord Nataraja i.e Shiva  
#734 NatEshvari = Queen of Dance 

()
Mithya  = illusion 
Jagat  = world 
Athishtana = Basis - foundation  

#735 Mithya-Jagat athishtaanA = Who is the basis upon which this illusionary-universe
is resting. 

()
Dha = giving  
Mukthi = salvation

#736 Mukthidha = Who grants Liberation 

()
RoopiNi

#737 MukthiRoopiNi = Who is in the form of Liberation (personification) 

()
Lasya = Dance (accompanied with music and singing)
Lasya = Dramatic dance representing emotions of Love

#738 Lasya Priya = Who is fond of Lasya Dance (Dance representing emotions)

()
Laya = absorption - melting 
Kar = to cause

#739 Laya Karee = Who causes Absorption *

*Universe absorbed in its original state is called Laya ie period of rest  between contraction and expansion of the universe. 


#740 Lajja = She who is Modest (coy) 

()
Rambha = A celestial damsel -Queen of Apsaras
Adhi = et caetera, and so on
Vandhitha  = celebrated

#741 Ramba-adhi VandhithA = Who is praised and extolled by Apsaras like Rambha and others. *

*Urvashi, Rambha, Menaka, Thilothama are most famous amongst the apsaras who is believed to reside in Devaloka. 



() 
Bhava = Worldy existence
Daava = Distress - fire - heat
Sudhaa = Nector
Vrishti = Rain 

#742 Bhava Dhaava Sudhaa Vrishti = Who is the Rain of Nector that quenches the fire and heat of  worldly existence of  mortals  *

*Rain of Nector here means granting knowledge to quench ignorance of worldy existence. 

()
Paapa = Vice(s)- Crimes
Aaranya = Forest
Dhava  = cleansing 
anala = Fire 

#743 paapaaraNya DhavaanalA = Who cleanses(burns) the forest of Sins (Who is like the fire which burns down the accumulated Crimes and sins)  


()
Duarbhagya = ill-luck 
Thoola = Cotton
Vaathoola = whirlwind - hurricane

#744 Daurbhaagya DhoolavathoolA = Who acts like the whirlwind that whisks away the cotton bales of misfortunes  

()
Jara =   old age - ageing 
Dwantha = darkness 
Ravi = Sun
Prabha = brightness - illumination 

#745 Jara Dwantha RaviprabhA = She Who is the Sunlight that dispels the darkness caused by old age. 

*She illuminates the mind(with knowledge) and thereby dispels ignorance ie fear caused due to old age. Ignorance or fear during old age is mainly concerned with health of the grossbody, Raaga or attachment towards  the body and   seperation of the soul from the body (death of physical body).

()
Bhaagya = Good fortune - Luck 
abdhi = Ocean
Chandrika = Moonshine - Moonshine

#746 Bhaagyabdhi ChandrikA = Who is like the  Moon, lighting up the ocean of Good fortune. 

()
Bhaktha-Chitha = Devotee's mind 
Keki = Peacock 
ghana ghana = dense cloud 

#747 Bhaktha Chitha kEki ghanaghanA = She who delights the devotees mind, like how  dark dense clouds gladdens the peacock


()
Roga = Sickness - disease 
Parvatha = Mountain
DhambolA = Indra's thunderbolt - Thunderbolt 

#748 Roga Parvatha DhambolA = Who is like the thunderbolt that strikes to destroy huge mountain of disease(s). 

()
Dharu = wood-made of wood
Kutarika = axe
Mruthyu = Death

#749 Mruthyu Dharu KutaarikA = Who is like the axe that severs tree of death 

#750 MahEshvarI = Who is the supreme deity- Consort of Maheshvara.

(to Continue) 


A humble attempt to analyse meanings of naamas word by word - ShakthiPrabha

July 18, 2019

கலிக்கம்ப நாயனார்.


Image result for கலிகம்ப நாயனார்
திருப்பெணாகடம் என்ற ஊரில் வணிகர் குலத்திலே பிறந்து சிறந்த சிவபக்தராக விளங்கினார் கலிக்கம்ப நாயனார். அந்த நகரில் துங்கனைமாடம் எனும் சிவன்கோவிலில் குடிகொண்டிருக்கும் கங்காதரனை பக்தி செய்து வாழ்ந்து வந்தார். 

அடியார்களை பேணி காத்து, உணவு அளித்து வேண்டிய பொருளும் அளித்து வந்தார். அடியார்களை சிறப்பிக்காத இறை வழிபாடு குறைவுள்ளது என்று நம்பி, அடியார்களின் வழி நின்றலும், அவர்களை காத்தலுமே இறைவனுக்கும் மிக உகந்ததெனக் கொண்டார். சிவ அடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும் அற்றவராக இருந்தார். 

பின்பொரு சமயம், சிவ பக்தர்களை உயர்ந்த பீடத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்து,  இன்னமுதளிக்கும் வெளையில்,  வந்திருக்கும் அடியவர்களுள் ஒருவர் கலிகம்ப நாயனாரிடம் பணியாளாக முன்பு பணி செய்து, அந்த வேலையை துறந்தவர். இதைக் கண்டுகொண்ட மனைவியார்,  இருமனம் கொண்டவராக நீர் வார்க்க சிறிது  தயங்கினார் .  அடியார்க்கு நீர்வார்க்க தவறிய மனைவியின் செயல் அவருக்கு பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்தது, அடுத்த நொடி அங்கிருந்த வாளெடுத்து மனைவியின் கைகளை துண்டித்து அது பற்றிய சலனமேதும் இல்லாதவராக தொண்டாற்றத் தொடர்ந்தார் நாயன்மார்.  ரத்தம் ஆறாய் பெருக மயக்கமுற்றார் மனைவி. 

பேரொளியாக சிவன்-பார்வதி தம்பதி சமேதராக எழுந்தருளி அடியவர்க்கு தொண்டு செய்யும் அவரது புகழ் ஓங்கவே இத்திருவிளையாடல் புரிந்தோமென உரைத்து மனைவியின் மயக்கம் தீர்த்து, ஊனம் நீக்கி இருவரையும் வாழ்த்தி மறைந்தார். நாயன்மார் நெடுங்காலம் மனைவியுடன் இனிய தொண்டுகள் புரிந்த பின் கைலாயம் பிராப்தி அடைந்தார். 


ஓம் நமச்சிவாய

July 16, 2019

லலிதா சஹஸ்ர நாமம் (700-725) (With English meanings)

Image result for Sadashiva and Goddess



விபூதி விஸ்தாரம்


தேஷ காலா பரிஸ்சின்னா;
சர்வகா;
சர்வ மோஹினீ;
சரஸ்வதீ;
ஷாஸ்த்ர மயீ;
குஹாம்பா;
குஹ்ய ரூபிணீ;
சர்வோபாதி வினிர்முக்தா;
சதாஷிவ பதிவ்ரதா;
சம்ப்ரதாயேஶ்வரீ;
சாது ;
ஈ;
குரு மண்டல ரூபிணீ;
குலோத்தீர்ணா;
பகாராத்யா;
மாயா;
மதுமதீ ;
மஹீ;
கணாம்பா;
குஹ்யகாராத்யா;
கோமலாங்கீ;
குரு-ப்ரியா;
ஸ்வதந்த்ரா;
சர்வதந்த்ரேஷீ;
தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ ;

()
தேஷ = தேசம் - பிரதேசம் - வெளி
கால = காலம்
அபரிச்சின்னா = எல்லைக்கு உட்படாத

#701 தேஷ கால அபரிச்சின்னா = பிர(தேசம்) காலம் முதலிய எல்லைகளுக்கு உட்படாதவள். 

#702 சர்வகா = எங்கும் நிறைந்திருப்பவள் / சர்வவியாபி
(701 ஆம் நாமத்தின் நீட்சி)

#703 சர்வ மோஹினீ = அனைத்தையும் (ஜட-ஜீவராசிகள்) வசிகரிப்பவள் - மயக்குபவள் (அனைத்தையும், அனைவரையும் மாயையின் பிடியில் வைத்திருப்பவள்)

#704 சரஸ்வதீ = ஞானத்தின், அறிவின் இறைவடிவான ஸ்ரீ சரஸ்வதி-தேவி
(சரஸ்வதி வடிவானவள்)

()
ஷாஸ்த்ர = மதக்கோட்பாடுகள், வழிமுறைகள் -வேத விஞ்ஞான விளக்கங்கள்
மயீ =  உள்ளடக்கியிருத்தல்

# ஷாஸ்த்ர மயீ = சாஸ்த்திரங்களின் உருவகம் - சாஸ்திரங்களால்
ஆனவாள் - சாஸ்திர-மயமானவள்
 
()
குஹா = முருகக் கடவுள் - சுப்பிரமண்யர் - குகன்
அம்பா = அன்னை

#706 குஹாம்பா = (குகனாகிய) முருகக் கடவுளின் அன்னை. *

()
குஹா = மறைக்கப்பட்ட - ஒளிக்கப்பட்ட - குகை - இதயம் - ரகசியமாக இருப்பது

#706 குஹாம்பா = இதயக் குகையினுள் வசிக்கும் அன்னை *

( பந்தப்பட்ட ஜீவனிடமிருந்து மறைந்திருக்கும் சுத்த சைதன்யமாக விளங்குபவள் )

* ( நாமம் 706க்கு இரு வகையாக பொருள் பிரிக்கப்பட்டிருக்கிறது ) 

()
குஹ்ய = ரகசியமான - மறைந்திருக்கும்

#707 குஹ்ய ரூபிணீ = மர்மமானவள் ; மறைபொருள் நிலை கொண்டவள் (அனைவராலும் அறிய முடியாத)

()
சர்வ = அனைத்து
உபாதி = கட்டுப்பாடு - தடை
வினிர்முக்தா = விடுதலை பேறுதல்

#708 சர்வோபாதி வினிர்முக்தா = எவ்வித தடை தளைகளும் இல்லாதிருப்பவள்- அதற்கு அப்பாற்பட்டவள் (அதனால்  பாதிக்கப்படாதவள்)

()
சதாஷிவ = சிவபெருமானின் இன்னொரு சிறந்ததொரு வடிவம்
பதிவ்ரதா = பதிவிரதை - பத்தினி

#709 சதாஷிவ பதிவ்ரதா = சதாசிவனின் தர்ம பத்தினி

()
சம்ப்ரதாய = சம்பிரதாயங்கள், ஆசார அனுஷ்டான பழக்க வழக்கங்கள்
ஈஶ்வரீ = ராணி - ஆளுபவள்

#710 சம்ப்ரதாயேஷ்வரீ = வழமையான   பழக்க வழக்கங்களை,  சமய கோட்பாடுகளை, போஷித்து,  ஆட்சி செலுத்தும் அதிபதி.

#711 சாது = சாது ie யோகி *

(தெளிந்த அமைதியும், சீர்-நோக்கும் சம நிலையும் கொண்ட ஞானி)


#712 ஈ =  ஈ -கார பீஜா மந்திரத்தை பிரதிபலிப்பவள் *

( * "ஈ"காரம் தேவியின் காமகலா பீஜம். ஈ-காரம், பேரண்டத்தினுடைய சிருஷ்டிக்கும் சித்தியுடன் (creation) தொடர்புடையது.  )

( For more details please read related links

(சில விளக்கங்கள் "சாத்வீ" என்று சேர்த்து பொருள் அளிக்கின்றன. வேறு சில, 'சாத்வீ' எனும் நாமம் முன்பே பூஜிக்கப்பட்டிருப்பதால் ( நாமம் - 128) , சாது மற்றும் ஈ (ஈ-காரம்) என்று பிரித்து  பொருள் கூறுகின்றனர்)

()
மண்டல = பாதை (வழி) - திரள்

#713 குருமண்டல ரூபிணீ = குருபரம்பரையின் (வம்சாவளி)  வடிவானவள்- அதன்  உருவகம் (ஆச்சார்ய அல்லது மதகுருக்களின் பரம்பரை)

()
குல = குழு - சமூகம் - கூட்டம்
தீர்ணா = தாண்டியிருத்தல் - அப்பாற்படுதல்

#714 குலோத்தீர்ணா =   குறுகிய வட்டத்தினுள் தன்னை கட்டுப்படுத்தபடாதவள் (எல்லைகளற்றவள்) * 

* குல என்னும் சொல் பல விதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. யோக வழிபாட்டு முறையின் படி "புலன்களின் கூட்டு" என்ற அர்த்தமும் கொள்ளப்படுகிறது. அதனால் இந்நாமத்தை புலன்களுக்கு அப்பாற்ப்பட்டவள் என்று விளங்கிக்கொள்ளலாம். எவ்வகையில் பொருள் கொண்டாலும், "எல்லைகளற்று பரவியிருப்பவள்" என்ற ஆழ்பொருள் நிலைத்திருக்கிறது. நிர்குண பிரம்மத்தின் நிலைபாட்டிலிருந்து பேசப்படும் நாமம். 

()
பகா = சூரியன்
பகா = மண்டலம் தொகுதி பகுதி
(சூரிய மண்டலம் அல்லது பகுதி, அதன் வட்டப்பாதை)
ஆராத்யா = வழிபடுதல்

#715 பகாராத்யா = சூர்யக்குடும்பத்தினால் (சூரியனைச் சார்ந்தவற்றால்)  துதித்து போற்றப்படுபவள் *

* பகா எனும் வார்த்தை சூரிய மண்டலம் என்றுணரப்படுகிறது. சில விளக்கங்கள், "சூரிய மண்டலத்தின் 'மத்தியில்' உறைபவளான அன்னை, வணங்கப்படுகிறாள்" என்றும் உணர்த்துகிறது. 

#716 மாயா = மாயா சக்தியானவள் (அவளே மாயா-சக்தியாக விளங்கி சிருஷ்டிக்கு காரணகர்த்தாவாகிறாள்)

()
மது = தேன்
மதி = அறிவு - ஞானம்

#717 மதுமதீ = மெய்ஞானத்தின் எல்லையில்லா பேரானந்தமாக விளங்குபவள் (உயர்ந்த ஞானத்தின் சாரத்தை இனிமையான தேனுக்கு உவமையாக்கி அதன் பேரானந்தத்தை விளங்கச் செய்கிறது இந்நாமம்)

#718 மஹீ = பூமிமாதா (அன்னையின் ஸ்தூல வடிவை விளக்கும் நாமம்)


()
கண = (சிவ)கணங்கள் - தொண்டர்கள்
அம்பா = தாய்

#710 கணாம்பா =  சிவகணங்களின் அன்னையாக திகழ்பவள்

()
குஹ்யகா = குபேரன் - செல்வத்தின் அதிபதியான குபேரன்
ஆராத்யா = வழிபடுதல்

#720 குஹ்யகாராத்யா = குபேரனால் துதிக்கப்படுபவள்

()
கோமல = மென்மையான - மிருதுவான - அழகான
அங்க = உடல் - உடல் சார்ந்த பகுதிகள்

#721 கோமலாங்கீ = மென்மையான எழிலுடல் தரித்தவள்

()
குரு = மதிப்பு மிக்க - மதபோதகர் - குருமார்கள்

#722 குருப்ரியா =  ஆச்சாரியர்களிடம்(அற வழிகாட்டிகள்)  பிரியமானவள்

()
ஸ்வதந்த்ரா =  கட்டுப்படுத்தப்படாத

#723 ஸ்வதந்திரா = சுதந்திரமானவள் ie சார்பற்றவள் 

()
சர்வ = அனைத்து - எல்லாமும்
தந்த்ர = தந்திரங்கள் (தந்த்ர வழிபாடு)
ஈஷா(ஈஷ்வரீ) = தலைவன்(தலைவி)

#724 சர்வ தந்த்ரேஷீ = தந்த்ர வழிபாட்டு முறைகள் அனைத்திற்கும் அதிபதி. *

*ஸ்ரீ வித்யா உபாசனையின், தந்திர வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் ,  சுயத்தை உணர்த்தி  முக்திக்கு இட்டுச் செல்கிறது.


()
தக்ஷிணாமூர்த்தி = சிவபெருமானின் 'குரு' (ஆச்சாரிய) வடிவத் தோற்றம் *

#725 தக்ஷிணாமூர்த்தி ரூபிணீ = தக்ஷிணாமூர்த்தி ரூபமாக விளங்குபவள் *

* தக்ஷிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம். நவகிரஹங்களுள் ஒருவரான
பிரஹஸ்ப்தி எனும் வியாழ / குருபகவான் என்பவர் வேறு என்று புரிதல்.


(தொடரும்)



Lalitha Sahasranama (700-725)

Vibhoothi Visthaaram

Desha-Kaala-aparichinna;
Sarvaga;
Sarva Mohini;
Sarasvathi;
Shaastra Mayi;
Guhaamba;
Guhya RoopiNi;
Sarvopaadhi Vinirmuktha;
SadaaShiva pathivratha;
Sampradhaayeshwari;
Saadhu;
EE;
Guru-Mandala RoopiNi;
Kulotheerna;
Bhagaaraadhya;
Maaya;
Madhumathi;
Mahi;
GaNaambha;
Guhyaka-aaradhya;
Komalaangi;
Guru-Priya;
Swathanthra;
Sarva-thanthreshi;
Dakshinaamoorthi-Roopini;

()
Desha = country -area - space-region
Kaala= Time
aparichchinna = unlimited


#701 Desha Kaala -aparichinna = Who is not circumscribed or bound by
time or space  (area)

#702 Sarvagaa = Who is omnipresent /all pervading

#703 Sarva Mohini = Who fascinates everybeing (traps every soul  into the spell of maaya)

#704 Sarasvathi = She who is the manifestation of knowledge (goddess of knowledge, Sarasvathi)

()
Shaastra = religious rules and treatises  - scientific treatises - scriptures
mayi = constitute of - consisting of

#705 Shaastra Mayi = Who is the embodiment of Shastras - Whose very bodyparts
are scriptures. 

()
Guha = Lord Subramanya
Amba = Mother

#706 Guhaamba= Mother of Lord Subramanya (Murugan) *

()
Guha = That which is concealed- hidden- a Cave - heart

#706 Guhaamba = Mother,who resides in the cave of heart * 
(Resides as Pure-consciousness which is hidden from the purview of bonded souls)

* (Two analysis and explanations are described for naama 706) 

()
Guhya = Secret- covered -  hidden

#707 Guhya RoopiNi = Whose form is mysterious.

()
Sarva = every
upaadhi = limitation - condition
Vinirmuktha = free or exempt from

#708 Sarvopaadhi Vinirmuktha = She who is without any constraints

()
Sadaashiva = Supreme form of Lord Shiva
pathivratha = virtuous wife

#709 SadaaShiva pathivratha = Who is devout wife of Sadashiva

()
Sampradhaya = traditional customs
eshwari = Queen - she who Ruler

#710  Sampradhaaya-eshwari = Who protects and rules traditional practices and customs

#711 Saadhu = She who is a seer (who is calm, serene, well in control, in equilibrium)


#712 EE = Who symbolises bija mantra "eem (eemkaar) *

*Bija mantra "Im" stands for  Kamakala Beejam of the Devi. It is the divine desire of macrocosm which is related to Creation.

For more details please read related links

(Some explanations show sadhu+ee as Sadhvi. Some others split the name because 'Sadhvi' is a repetition - ie. Naama-128)

()
Mandala = path - collection

#713 Guru-Mandala RoopiNi = Who is the personification Guru-parampara (Lineage
of Acharyas / Gurus)

()
Kula = set - gang - community
theerna = surpassed

#714 Kulotheerna = She who is not restrained or contained within any limits. 


* Kula is interpreted in multiple ways. As one of its multiple meaning, Yogic community interpret the word Kula to mean "totality of senses" and explain this naama to mean that, she has transcended senses and is spread as totality. Deeper meaning in both context remain  the same. It talks on nirguna aspect of Lalithambika.

()
Bhaga = sun 
Bhaga = Region  *
(Region comprising of sun and its orb )
Aaradhya= worship

#715 Bhagaaraadhya= Who is glorified by the solar-world (solar system-its race) *

* Interpreting 'bhaga' as surya mandala/solar disc, some philosophers opine that "she who is worshipped in centre of the solar disc "


#716 Maaya = Who is the illusory force (Force behind illusion and its resultant creation. Creation begins when Maya resumes her Play)

()
madhu  = Honey
mathi = Intellect - Wisdom

#717 Madhumathi = She whose wisdom is pure bliss (Whose essence of Supreme wisdom
is releted to sweetness and its resultant bliss)

()
Mahi = earth

#718 Mahi = Who is goddess earth (talks upon her gross form)

()
GaNa = Followers /attendants
Ambaa = Mother

#719 GaNambaa = Who is the Mother of Shiva's attendants (shiva-gaNaas)

()
Guhyaka = Kubera - Lord of wealth
Aaradhya = Worship

#720 Guhyakaradhya = Who is worshipped by Kubera


()
Komal =  Gentle -tender - charming
anga= body - part of the body

#721 Komalaangi = Whose body is beautiful and delicate.

()
Guru - highly respectable - religious teacher

#722 Guru-Priya = who is fond of spiritual preceptors(guides, who shows righteous path)


()
Swathanthra = uncontrolled - indepedent

#723 Swathanthra = Who is free i.e self willed, independant.

()
Sarva = every - all
tanthra = Tantras
Esha(Eshvari) = chief

#724 Sarva-tanthreshi = She Who is the presides and rules all Tantras *

*Tantras are spirtual practices and rituals which results in self-awakening
and resultant liberation.

()
Dakshinamoorthi = Form of Lord Shiva as Spirtual-preceptor *

#725 Dakshinaamoorthi-Roopini = Who is the embodiment of Lord Dakshinamoorthi *

* Please be clarified that, Dakshinamoorthi is Shiva's preceptor Form, whilst 'Guru' who
is referred as the chief of planet Jupiter(Navagraha cluster) is different.


(to Continue)

An earnest attempt to discuss meanings word by word - ShakthiPrabha