March 19, 2023

தீக்ஷிதரும் முருகனும் (தெய்வத்தின் குரல்)

 Miracles associated with Muthuswami Dikshithar:

முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு சுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் ஜாஸ்தி.
.
முத்துஸ்வாமி என்கிற பேரே வைத்தீச்வரன் கோவில் முத்துக்குமாரஸ்வாமியின் பெயரை தான். அப்பா ராமஸ்வாமி தீக்ஷிதர் – அவரும் பெரிய பண்டிதர். ஸங்கீதத்தில் நிரம்பத் தெரிந்தவர். சாஹித்யங்கள் பண்ணியிருப்பவர். பெரிய ஸ்ரீவித்யா உபாஸகருங்கூட.
.
Birth of Dikshithar
அவருக்கு நாற்பது வயசு வரை புத்ர பாக்யமில்லை. பத்னியோடுகூட வைத்தீச்வரன் கோவிலுக்குப் போய் முத்துக்குமாரஸ்வாமி ஸந்நிதியில் ஒரு மண்டலம் விரதம் இருந்தார்.
.
அந்த அம்மாளுக்குத் தன் மடியிலே தேங்காய், பழம் முதலான மங்கள வஸ்துக்களை யாரோ கட்டுவதாக ஸ்வப்னம் ஏற்பட்டது. அடுத்தாற் போலவே கர்ப்பமும் உண்டாயிற்று.
.
முத்துக்குமாரஸ்வாமி புத்ரவரம் தந்ததற்கே அப்படி ஸ்வப்னத்தில் சமிக்ஞையாயிருக்கிறது என்று புரிந்து கொண்டார்கள். அதற்கேற்றாற் போல் பிள்ளையும் ஒரு க்ருத்திகா நக்ஷத்திரத்திலேயே – அது பங்குனி மாஸ க்ருத்திகை – பிறந்தது. அப்படிப் பிறந்தவர்தான் முத்துஸ்வாமி தீக்ஷிதர்.
.
Dikshithar's Gurukulavaasam
அப்புறம் அவர் வளர்ந்து ஸங்கீத அப்யாஸம், ஸ்ரீவித்யா அப்யாஸம், காசியில் ஸந்நியாஸ குருவுடன் வாஸம் எல்லாம் பண்ணினார்.
காசியிலேயே குரு சித்தியானார். சித்தியாகிற ஸமயத்தில் அவர் தீக்ஷிதரிடம்
..
‘தக்ஷிணத்துக்குத் திரும்பிப் போய்விடு. அங்கே முதலில் திருத்தணிக்குப் போ. நீ எதற்காக ஜன்மா எடுத்திருக்கிறாயோ அது ஸபலமாகும்படியாக (பலிதமடையுமாறு) ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி அநுக்ரஹம் பண்ணுவார்” என்று சொன்னார்.
.
Lord Murugar's blessings to Dikshithar
அப்படியே தீக்ஷிதர் திருத்தணிக்குப் போனார். அடிவாரத்தில் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு அவர் மலை ஏறிப் போய்க்
கொண்டிருக்கும்போது முன்பின் தெரியாத ஒரு கிழ ப்ராஹ்மணர் அவரை, “முத்துஸ்வாமி!” என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, “வாயைத் திற”
என்றார். அவர் அப்படியே பண்ணியதும் வாயிலே ஒரு கல்கண்டைப் போட்டுவிட்டு போன இடம் தெரியாமல் போய்விட்டார்.
..
வந்தது யாரென்று தீக்ஷிதருக்குப் புரிந்து விட்டது. இவர் வந்த கார்யமும் தத்க்ஷணமே ஆரம்பித்துவிட்டது – ஸாஹித்ய வ்யுத்புத்தி ஏற்பட்டுவிட்டது! தகப்பனாரான பரமேச்வரனுக்கும் குருவாக இருந்த குஹன் மீது அப்போதே எட்டு வேற்றுமைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு க்ருதியாக எட்டு க்ருதிகளைப் பாடிவிட்டார்.
.
கிருதிகளில் தம் முத்ரையாக அவர் ‘குருகுஹ’ என்ற ஸுப்ரஹ்மண்ய நாமாவையே வைத்திருப்பதையும் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். குகையில் இருப்பவன் குஹன். ஹ்ருதய அந்தரங்கம் என்ற குகையில் ஆத்ம ஸ்வரூபமாக உள்ள குருதான் குருகுஹன்.
Mukthi of Dikshithar
தீக்ஷிதர் சரீர யாத்திரையை முடித்தது ஒரு தீபாவளியில். அதற்கு அடுத்த ஆறாம் நாள்தான் மஹா ஸ்கந்த ஷஷ்டி வருவதும். ஷஷ்டியன்று
பூர்த்தியாகிற விதத்தில் ஆறு நாள் வ்ரத உபவாஸங்களிருப்பது வழக்கம். அதாவது தீக்ஷிதர்வாளின் பிறப்பு மட்டுமில்லாமல் முக்தியடைந்ததிலும் ஒரு சுப்ரஹ்மண்ய ஸம்பந்தம் தெரிகிறது….
.
Chapter: தீக்ஷிதரும் முருகனும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment