March 29, 2023

ராஜராஜ சோழனின் பெருமை (தெய்வத்தின் குரல்)



Rajaraja's greatness

சக்கரவர்த்தி, மன்னர் மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவன் தன்னை எப்போதும் சகலலோக சக்ரவர்த்தியான பரமேச்வரனின் தொண்டனாக நினைத்துக் கொண்டு, அந்த சந்திரசேகரனின் திருவடி தன் முடியில் சூட்டப்பட்டிருப்பதாகப் பாவித்து, பாவித்து சந்தோஷப்பட்டுக் கொண்டு, இதனால் சிவபாத சேகரனாக ஆண்டவனுக்கு அடங்கிக் கிடப்பதையே உயர்வாக நினைத்தவன்.
.
Thirumurai kaNda sOzhan
அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகியவர்களுடைய தேவாரத் திருப்பதிக ஏடுகளைச் சிதம்பரத்திலிருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்து லோகத்துக்கெல்லாம் கொடுத்த பரம உபகாரி ராஜராஜன் தான். அவன் இல்லாவிட்டால் நம் தமிழ்த் தேசத்தின் பக்திப் பண்பாட்டுக்கே மூச்சாக இருக்கிற தேவாரம் இல்லை; எல்லாம் கரையான் அரித்து மட்கி மண்ணாகியிருக்கும். இதனால் “திருமுறை கண்ட சோழன்” என்றே அவனுக்கு ஒரு பெயர்.
.
தேவாரம் என்ற சொற்கோவிலைக் காப்பாற்றிக் கொடுத்தவன், தஞ்சாவூரில், இன்றும் லோகம் பிரமித்துக் கொண்டாடும்படியான கற்கோயிலையும் கட்டினான். தான் பெற்ற வெற்றிகளுக்கு நன்றிக் காணிக்கையாகக் கட்டினான்.
.
RajaRaja as Conquerer
வடக்கே இப்போது ஒரிஸ்ஸா என்கிறோமே அந்தக் கலிங்கம்வரை படையெடுத்துப் போய், கோதாவரி-கிருஷ்ணா நதிகளுக்கு மத்தியிலே கீழைச் சளுக்கியர்கள் ஆண்டு கொண்டிருந்த வேங்கிநாடு, தெற்கே ஈழம் என்னும் இலங்கை, இப்போது Laccadives – லக்ஷத் தீவு – என்கிற அராபியன் ஸீ ஐலண்ட்ஸ் எல்லாவற்றையும் ஜயித்துத்தான் ராஜராஜன் என்று காரணப் பெயர் வாங்கினான். அவனுடைய சொந்தப் பெயர் அருண்மொழி வர்மன் என்பது. பெயருக்கேற்ப தேவாரமாகிய அருள்மொழிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறான்!
.
Humility of Rajaraja
ராஜராஜனாக ஆனவுடன் நமக்கானால் தற்பெருமையும் தலைக்கனமும்தான் ஏற்படும். அவனோ தன் போராற்றல், வெற்றி, வீரதீரம் அத்தனையும் ஈச்வரப் பிரஸாதம்தான் என்பதாக, தான் அடங்கி, ஈச்வரனையே பெரியவனாக, அம்பாளையே பெரியவளாக வைத்து மஹா பெரிய கோவிலைக் கட்டினான். Big Temple of Tanjore, Great Pagoda at Tanjore என்று அதற்கு லோகம் பூரா கியாதி இருக்கிறது.
.
‘ராஜராஜேச்சுரம்’ – ‘ராஜராஜேச்வரம்’ – என்பது கல்வெட்டில் இருக்கிற பேர். ராஜராஜேச்வரி என்பது அம்பாளுக்குப் பிரஸித்த நாமா. இங்கே ஈச்வரனுக்கும் ராஜராஜனை முன்னிட்டு ‘ராஜராஜேச்வரம்’ என்று வாஸஸ்தானம் ஏற்பட்டிருக்கிறது.
.
Somaskandhar
ஸப்த விடங்கர்கள் இருந்தாலும், ‘விடங்கர்’ என்ற மாத்திரத்தில் திருவாரூர் தியாகராஜாதான் நினைவு வரும். சோழ ராஜாக்களுக்கு ஆதியில் தலைநகராயிருந்தது திருவாரூர்தான். மநு நீதிச் சோழன் தன் பிள்ளையைத் தேர்க்காலில் பலிகொடுக்கப் போனது திருவாரூரில்தான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால், ராஜராஜன் தான் புதுசாக, மஹா பெரிசாக ஒரு கோவில் கட்டின போது தன் குல மூதாதைகளையும், குலதெய்வத்தையும் நினைவு கொண்டு, மற்றவர்களும் அவர்களை நினைக்கப் பண்ண வேண்டும் என்றே ‘தக்ஷிண மேரு விடங்கர்’ என்று சோமாஸ்கந்தருக்குப் பேர் வைத்தான்.சிவாலயங்களில் இரண்டு ராஜாக்கள் முக்கியம். ஒன்று நடராஜர், மற்றது தியாகராஜா என்கிற சோமாஸ்கந்தர். தன் பேரிலேயே இரண்டு ராஜாக்களைக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு ‘இந்த’ இரண்டு ராஜாக்களிடமும் தனியான ஈடுபாடு!
.
Rajaraja's administration
ராஜராஜனுக்கு எத்தனையோ பெருமை சொல்கிறார்கள். அவனுடைய வீர தீரப் பிரதாபங்களைச் சொல்கிறார்கள். பக்தியைப் பாராட்டுகிறார்கள். கோவிலுக்காகவும், மூர்த்திகளுக்காகவும், ஆபரணாதிகளுக்காகவும், நித்ய நைமித்திக வழிபாடுகளுக்காகவும், சிப்பந்திகளுக்காகவும், கலைஞர்களுக்காகவும் அவன் வாரி வாரி விட்ட ஒளதாரியத்தைப் புகழ்கிறார்கள். இத்தனையையும் ஒரு detail விடாமல் கல்வெட்டில் பொறித்து வைத்ததைப் போற்றுகிறார்கள்.
.
தான் பரம சாம்பவனாக இருந்தும், பெருமாள் கோவில், புத்த விஹாரம் எல்லாவற்றையும் பேணிய மனோ விசாலத்தை புகழ்கிறார்கள். அட்மினிஸ்ட்ரேஷனிலும் அபாரத் திறமை காட்டி, ராஜ்யத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து முடியாட்சியிலேயே குடியாட்சியாக ஊர்ச் சபைகளுக்கு நிறைய ஸ்வதந்திரம் தந்து, அதன் மெம்பர்களை ஜனநாயகக் குடவோலைத் தேர்வு முறையில் நியமிக்கப் பண்ணினதைக் கொண்டாடுகிறார்கள். நிலங்களையெல்லாம் அளந்து ரிஜிஸ்டர் பண்ணினான்; தெருக்களுக்குப் பேர் கொடுத்து door number போட்டான் என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். அவனுடைய மத உணர்ச்சி, கலா ரசனை, உதார குணம், planning எல்லாவற்றுக்குமே ஒரு ரூபகமாக இந்தப் பெரிய கோவிலை அவன் கட்டினதை அவனுடைய சிகரமான சிறப்பாகப் போற்றுகிறார்கள்.
.
ஆனால் இதைமட்டும் சொன்னால் one-sided தான்; சம்ஸ்கிருதத்துக்கும், வேத, ஆகம சம்பிரதாயங்களுக்கும் அவன் அளவிலாத மதிப்புணர்ச்சியோடு தொண்டு செய்திருப்பதையும் சேர்த்துச் சொன்னால்தான் அவனுக்குப் பூர்ண நியாயம் பண்ணினவர்களாவோம். ஆலய நிர்மாணம், பூஜை, உத்ஸவம், எல்லாம் சாஸ்திர சம்பிரதாயப்படியேதான் அவன் ஏற்பாடு பண்ணினான்.
.
Chapter: இறைவன் திருவடியை முடியில் கொண்டவன்
Chapter: பெருமை இறைவனுக்கே
Chapter: தக்ஷிண மேரு விடங்கர்; ஆடவல்லான்
Chapter: ராஜராஜனின் பெருமைகளும், தலையான பெருமையும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment