March 23, 2023

மார்கழி மகிமை - தேவ சபைகள்

Divine Sabhas / Greatness of Margazhi

ரங்கம் என்றால் ஸபைதான். சிதம்பரத்திலோ ஸபை, ஸபை என்றே ஸந்நிதியைச் சொல்கிறது – சித்ஸபை, கனகஸபை என்று.
.
இந்த இரண்டு ஸபைகளிலும் இருக்கிற இரண்டு ராஜாக்களும் ஒரே மாதிரி தெற்குப் பார்த்தே இருப்பதிலும் ஒற்றுமை!
..
இன்னொரு ஒற்றுமை, இந்த இரண்டு ராஜாக்களுமே தங்கள் ராஜ்யப் பிரஜைகளுக்குத் தண்டனை கொடுக்கிறதற்கோ, மற்ற ராஜ்யங்களோடு சண்டை போடுவதற்கோ ஸபை கூட்டி தர்பார் நடத்துகிறவர்களில்லை! ராஜாங்க – அரசாங்க ஸபையே இல்லை! ‘ராஜ அங்கமான ஸபையேயில்லாத ராஜாக்களா? வேடிக்கையாயிருக்கே?” என்றால் வேடிக்கையேதான்!
.
பிரபஞ்சம் பூராவையும் வேடிக்கையாகவே நடத்தி வைக்கிற ஸர்வலோக ராஜா தான் இப்படி இரண்டு வேஷம் போட்டுக் கொண்டிருப்பது! ஒருத்தன் வேடிக்கை ஆட்டமாகவே ஆடி அதை நடத்தி விடுகிறான் – ஆமாம், அவனுடையது தண்டனை தரும் ஸபையில்லை, நடன ஸபை! ம்யூஸிக் ஸபா, டான்ஸ் ஸபா என்றே சொல்கிறோமே, அந்த மாதிரி ஸபை!
.
ஏகாதசி பட்டினி போட வைத்தவனுடைய ஸபை? அது நான் சொன்ன வேடிக்கையிலேயும் இன்னும் வேடிக்கை! சயனக்ருஹம் – bedroom –தான் இங்கே ஸபை!
..
நம்முடைய பூர்விகர்கள் அந்த இரண்டு பேரும் ஒருத்தனேதான் என்று நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. அந்த இரண்டு பேருக்கும் விசேஷமான திருநாள்கள் இந்த தநுர் மாஸத்திலேயேதான் வருகிறது.
.
இரண்டு பேருக்குமான திருப்பாவை – திருவெம்பாவைப் பாராயணமும் இந்த மாஸத்துக்கென்றே ஏற்பட்டிருக்கிறது.
..
சிவ-விஷ்ணு அபேதத்தைப் போக்கி ஐக்கியத்தை இப்படிக் காட்டும் பெரிய சிறப்பால்தான் தநுர்மாஸத்திற்கு இத்தனை விசேஷம், ‘மாஸானாம் மார்க்கசீர்ஷோ (அ)ஹம்’ – ’மாஸங்களுக்குள்ளே நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கூறும்படியான தனிச் சிறப்பு* ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
.
Chapter: இரண்டு ராஜாக்கள்: ஸர்வலோக ராஜாவின் இரண்டு வேஷங்கள்
Chapter: சிவ விஷ்ணு அபேதம்
Chapter: தநுர்மாஸம், மார்கழி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment