March 30, 2023

அண்ணா- தம்பி கதை (part 1) (தெய்வத்தின் குரல்)

சீதையுடைய அப்பாவின் பேர் – சீரத்வஜர்.

ஜனகர் என்பது விதேஹம் என்ற ராஜ்யத்தை ஆண்ட சூர்ய வம்சக்கிளைப் பிரிவினரில் நிமி என்பவரின் வழியில் வந்த எல்லாருக்கும் உரிய குடிப் பெயர். சீதையுடைய அப்பாவின் பேர், அதாவது இயற்பெயர், ஸீரத்வஜர் என்பது. குடிப் பெயரைச் சேர்த்து அவரை ஸீரத்வஜ ஜனகர் என்று சொல்ல வேண்டும்.
.
Cousins - Kesidhvajar and Kandakyar
மிதிலை ராஜவம்சத்தைச் சேர்ந்த அநேக ஜனகர்களில் கேசித்வஜ ஜனகர், காண்டிக்ய ஜனகர் என்று இரண்டு பேர். அந்த இரண்டு பேரும் பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகள்.
.
இவர்களுக்கு தகப்பனாராக இருந்த அண்ணா-தம்பி ஜனகர்கள் இரண்டு பேருமே தனித்தனி ராஜ்யங்களுக்கு ராஜாக்களாக இருந்தவர்கள். அதனால் பிள்ளைகளான கேசித்வஜர், காண்டிக்யர் இரண்டு பேரும் அந்தந்த ராஜ்யங்களுக்கு வாரிசாக ஆட்சி பெற்றார்கள்.
.
கேசித்வஜர், காண்டிக்யர் ஆகிய இரண்டு பேரில் கேசித்வஜர் நிரம்ப வேதாந்தக் கல்வி பெற்றவர். ஆத்ம வித்யையில் நல்ல வித்வத் இருந்த போதிலும் முறையாக ராஜ்ய பரிபாலனமும் செய்து வந்தார். கார்ய லோகத்தில் கேசித்வஜர் காண்டிக்யரைவிட சோபித்து பிராக்டிகலாக முன்னேறினார்.
.
காண்டிக்யர் வேதாந்தத்தின் பக்கம் அதிகம் போகவில்லை. அவர் முழுக்கவும் கர்ம மார்க்கக்காரராகவே இருந்தார். பிரம்ம வித்யா சாஸ்த்ரங்களில் கேசித்வஜர் எப்படி நிபுணராயிருந்தாரோ, அப்படி வைதிக கர்மாநுஷ்டானங்களிலும், காண்டிக்யர் நிபுணராயிருந்தார்.
.
Battle for Supremacy between cousins
அக்கால ராஜதர்மத்தில் எல்லா தேசங்களையும் ஜயித்து, அவற்றைக் கட்டியாளும் 'சார்வபௌம'னாவதே ஒரு ராஜாவின் கடமையாக நினைக்கப்பட்டது. அந்தப்படி காண்டிக்யர், கேசித்வஜரின் ராஜ்யத்தையும் கைப்பற்றுவதற்கு எண்ணினார். கொஞ்சமும் பின்வாங்காத கேசித்வஜரும் இப்படியே காண்டிக்யரின் படை மேல் எதிர்த் தாக்குதல் நடத்தினார். சித்தப்பா – பெரியப்பா பிள்ளைகளான இரண்டு ஜனகர்களுக்கும் யுத்தம் மூண்டது.
.
Victory of Kesidhwajar
கார்ய லோகத்தில் ஒன்றைச் செய்து முடிப்பதில் அதிக ஸாமர்த்தியம் பெற்றிருந்த கேசித்வஜரே ஜயித்தார். காண்டிக்யர் மந்த்ரி-பிரதானிகள், புரோஹிதர்கள் முதலான ஸ்வல்ப பரிவாரத்தோடு காட்டுக்குத் தப்பி ஓடினார். அங்கேயும் யாகங்களை விடாமல் பண்ணினார். கேசித்வஜரும் இனி சத்ரு பயமில்லை என்பதால் நிம்மதியாக நிறைய யாகங்கள் செய்யலாம் என்று ஆரம்பித்தார்.
...
(ஆனால்...)
(To continue)
Chapter: பல ஜனகர்கள்
Chapter: கேசித்வஜர்
Chapter: அத்வைத ஞானிகளும் நடைமுறை உலகும்
Chapter: காண்டிக்யர்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment