November 12, 2020

முனையாடுவார் நாயனார்



.
சோழநாட்டிலுள்ள திருநீடூரில் அவதரித்து, வேளாளர் முனையாடுவார் நாயனார் அவ்வூருக்கு பெருமை சேர்த்தார். 
.
முக்கண்ணனாம் எம்பெருமானிடம் மாறாத பற்றுடன் அவர் திருத்தொண்டில் அதிகம் ஈடுபாடு கொண்டு, பெருநிதி திரட்டி அவற்றையெல்லாம் அடியார்களை பேணுதற்கே செலவிட்டார். 
.
பகைவரை போரில் வென்று அதனால் ஈட்டிய பொருளைக் கொண்டு இறைவனின் அடியவர்களுக்கு ருசிமிக்க உணவை அன்புடன் அளிக்கும் நெறியை போற்றி வந்தார். பகைவரிடம் தோற்றவர்கள் செல்வம் தந்து, இவரது துணை வேண்டி நிற்பாரெனில், நடுநிலை மாறாது பாரபக்ஷமின்றி பகைக்குரிய காரணம் அறிந்து, அவருக்காக போர் முயற்சியில் ஈடுபடுவார். அதனால் பெற்ற கூலியை பெருஞ்செல்வமாகினும் அதனை அடியவர்களுக்கே கொடுத்து மகிழ்ந்தார்.
.
திறனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் முனையாடுவார் என்று திருப்பெயரின் சிறப்புக்கு உரியவர் ஆனார்.
.
பல காலம் திருத்தொண்டு புரிந்து, ஈசன் திருநீலகண்டனின் அருளுக்கு பாத்திரமான நாயன்மார், சிவ லோகம் சென்றமர்ந்து அங்கு மீளாத இன்பம் அமையப்பெற்றார். 
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment