November 09, 2020

புகழ்த்துணை நாயனார்.



.
சிவவேதியர் குலமெனும் குலத்தின் தோன்றல்கள் வழி வழியாக ஆகம விதிப்படி சிவனுக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியர்கள் ஆவர். இவர்களை ஆதிசைவர்கள் என்றும் சிவப்பிராமணர் என்றும் குறிப்பிடுகின்றனர். சைவ பக்தர்களுக்கு சிவதீக்ஷை அளிப்பது, பூஜை செய்வது, செய்விப்பது, சிவ பரிபாலனம் அனைத்தும் இம்மரபினரின் தொண்டாகும். அது வழி வந்த சிவவேதியரே புகழ்த்துணை நாயனார்.
.
பூஜையும் ஆகமமும் சிவ வழிபாடும் பிரியமாக செய்து வந்தார். சிவபெருமானை தத்துவ நெறிப்படி வழிபட்டு வந்தார். பஞ்சம் வந்து ஊரெங்கும் துவண்ட போதும் சிவ வழிபட்டை கைவிடாமல், நறும்பூக்கள் கொண்டும் தூய நீர் கொண்டும் வழிபட்டு வந்தார். ஓரு சமயம் பசியால் நலிந்த அவர் மேனி, சுமந்து வந்த கலசத்தின் பாரம் தாங்காமல் கை தவற, திருமஞ்சனம் செய்ய கொணர்ந்த நீர்குடம் இறைவன் திருமுடியின் மேல் விழுந்தது. சிவ அபராதம் செய்தோமென்று அஞ்சி, வருந்தி, மயக்கமுற்றார். அப்போது நித்திரை அவரை ஆட்கொண்டது.
.
பக்திக்கு இரங்கி, நித்திரையில் எழுந்தருளிய ஈசன், 'பஞ்சம் ஏற்பட்டிருக்கும் காலம் முழுதும் உணவுக்கென ஒரு காசு தருவோம்' என்று கூறியருளினார். நித்திரை கலைந்த எழுந்த நாயன்மார் பீடத்தின் மீது திருக்காசு ஒன்று இருப்பது கண்டு களித்தார். அவ்வாறே பஞ்சம் போகும் வரை இறைவன் நாள்தோறும் காசு அளித்தமையால் பசி நீங்கப்பெற்று நெடுங்காலம் சிவ அடிமை செய்திருந்து,  பின்னர் இறையுலகில் இன்பம் எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய
.

No comments:

Post a Comment