November 28, 2020

வாயிலார் நாயனார்



அறுபத்து மூவருள் ஒருவராக போற்றபடும் வாயிலார், சென்னையில் மயிலாப்பூரில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலகட்டத்தை சரிவர அறிய இயலவில்லை, பெரியபுராணத்தின் வாயிலாகவும், திருத்தொண்டர் தொகையிலும் இவர் பேசப்படுவதால் இவர் சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னமே வாழ்ந்ததாக தோராயமாகக் கொள்ளலாம்.
.
வெளாளர் குடியில் பிறந்ததாக பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
.
வாழும் காலம் தோறும் மௌனமாக இருந்ததால் வாயிலார். மௌனமாக இருந்ததால் வரலாறும் மிக சுருக்கமானது. சிவன் ஒருவனைத் தவிர சிந்தையில் ஏதுமில்லை. வாயினின்று சொல் ஏதும் தேவையில்லை என சிவ நாமத்தை சிந்தையுள் ஜபித்தே, அகந்தை என்பது மருந்துக்கும் இல்லாதவராக, நான் அகன்ற நிலையில் மெய்ப்பொருளுடன் ஒன்றி வாழ்ந்தார்.
.
இத்தகைய தவ வாழ்வு வாழ்ந்தவர், நெடுங்காலம் சிவனை சிந்தையிலேயே நிறுத்தி தவமியற்றியதற்கு அம்மையும்
அப்பனுமான ஈஸ்வரனும் உமையளவளும் தம் அருகில் சிவபதம் அருளி இணைத்துக் கொண்டனர் என்பது சொல்லினால் அல்லது எழுத்தினால் கூறவும் வேண்டுமோ!
.
சென்னையிலுள்ள திருமயிலை கபாலிஸ்வரர் கொவிலில் தனி சன்னதி அமைக்கப் பெற்று வாயிலார் நாயனார் வணங்கப்பட்டு வருகிறார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment