November 08, 2020

நேச நாயனார்



காம்பீலி என்னும் ஊர் கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி அருகே உள்ளது. துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்த செழிப்பு மிகுந்த இவ்வூரின் விருபாக்ஷீஸ்வரர் கோவில் அப்பர் பெருமானால் பாடப்பெற்றது. இத்தலமே நேசர் எனும் நேச நாயனார் பிறந்து, இருந்து வழிபட்டு தொண்டாற்றிய ஊர். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவி இருந்திருந்தது என்பதற்கு இவையெல்லாம் சான்று.
.
நேசர் செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தார். சாலியர் குலத்தில் தோன்றி தம் குலத் தொழிலைக் கொண்டே இறைவனுக்கு தொண்டு செய்தார். தமது வழக்கப்படி ஆடைகளும் கீழ்கோவணமும் நெசவு செய்து சிவனடியார்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். நாளும் ஈசன் நாமம் சிந்தையாலும் வாக்கினாலும் உரைத்திருந்தார். நீளாயுள் சிறப்பற வாழ்ந்து, தமது பணிவாலும் பக்தியாலும் உயர்ந்து இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார்.
.
(குறிப்பு: சாலி என்றால் துணி. துணி நெய்தல், உருவாக்குதல், தைத்தலை குலத்தொழிலாக கொண்டவர்களை சாலியர் என்று குறிப்பிடுகிறார்கள்)
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment