மதுரையம்ப்தியில் பிறந்தவர் மூர்த்தி நாயனார். சிவப்ரீதியுடையவராக ஈசன் திருவடி பற்றியிருந்தார். குற்றமற்ற பக்தியின் திருவுருவமாக திகழ்ந்தார். சோமசுந்தரருக்கு அன்றாடம் சந்தனக்காப்பு கொடுக்கும் திருப்பணி செய்துவந்தார்.
.
விதி வசத்தால் பாண்டிய நாட்டை கர்னாடக தேசத்து அரசன் முற்றுகையிட்டு வெற்றி கண்டான். பாண்டிய மன்னனை வென்று நாட்டை கைப்பற்றினான். சமண மதம் தழுவியிருந்த அவ்வரசன், சிவனடியர்களுக்கு துன்பம் கொடுத்துவந்தான். பலரும் வேறு வழியின்றி சமண மதத்தை தழுவும் நிலையை உருவாக்கினான்.
.
அவ்வாரே நாய்ன்மாருக்கும் தொல்லைகள் பெருக்கினான். இடர் பெருகி வரினும் தமது நிலையிலிருந்து வழுவாது பணியைத் தொடர்ந்தவண்ணமிருந்தார் மூர்த்தி நாயனார். சந்தனகாப்பு கொடுக்க சந்தனக் கட்டைகள் கிடைகாதவாறு செய்தான். பல இடங்களிலும் தேடி அலைந்து கிடைக்கப்பெறாமல் மிக துக்கம் கொண்டவராக, இவ்வரசன் மரித்து, சைவம் தழைக்கும் நாளும் எந்நாளோ என சிந்தை வருந்தி, தமது முழங்கை முட்டியை கட்டையில் தேய்க்கலானார். எலும்பும் நரம்பும் தோலும் பிறழ்ன்று வருத்தும் அளவு தேய்தார்.
.
இறைவன் அசரீரியாக கருணை பொழிந்தார். அன்பின் மிகுதியால் இவ்வாறு தேய்த்தலை விட , நீயே இந்நாட்டை கைபற்றி கொடுமை நீங்கச் செய்து நாடெங்கும் சிவபரிபாலனம் செய்வாய் என்று பணித்தார். மூர்த்தியார் அதைக் கேட்டு தேய்த்தலை நிறுத்தினார். அவர் மேனி குற்றமற்று முன்போல் ஒளிர்ந்தது.
.
அன்று இரவு அரசன் உயிர் துறந்து சிவபாதகம் செய்தமையால் நரகில் விழுந்தான். மந்திரிகள் கூடி அரசர்க்கு வாரிசு இல்லாமையால், யானையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அது ஏந்திவரும் பெருமகனை அரசர் என கொள்ள முடிவு செய்தனர். யானையானது மதுரையம்பதி வீதியெங்கும் திரிந்து இறைவனை அன்புப் பெருக்கினால் வணங்கி கோவில் முன் நின்ற நாய்ன்மாரை தேர்ந்தெடுத்தது. இதுவே கடவுள் சித்தமெனில் நான் சிறப்புற நாட்டை ஆள்வேன் என்று உறுதி பூண்டார் மூர்த்தி நாயனார்.
.
மறை முழக்கம் ஒலிக்க திருநீற்றை அபிஷேகத் தீர்த்தமாக்கி, ருத்ராக்ஷத்தை ஆபரணமாக்கி, சடாமுடியே முடியென சூடிக்கொண்டார். மதுரையிலும் பாண்டி நாடெங்கிலும் முன்போல் சிவ நாமம் ஒலிக்கத் துவங்கியது.
.
பெண்ணாசை பொன்னாசை வெல்லப்பெற்றவராக, துறவொழுக்கத்துடன் புலன்களை வேற்றி கண்ட அரசர், பலகாலம் சிறப்புற நாடு காத்து தொண்டுகள் புரிந்து உய்ந்தார். ஆயுட்காலம் முடிந்ததும் உடல் உகுத்து இறைவன் திருவடியில் நீங்கா இடம் பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment