சிவனடியார்களுக்கு இடர் நேரா வண்ணம் காத்தருள்வதை தம் பணியாக்கிக் கொண்டிருந்தார். கருவூரில் பிறந்த இவர், அவ்வூர் தெய்வமான திருஆனிலைக் கோவில் பசுபதீஸ்வரரை தினம் தொழுது அடியவர்களுக்கு தொண்டும் செய்து வந்தார். அடியவர் எவருக்கேனும் தீங்கு நேர்ந்தால் அவ்விடத்தில் உடன் முன்னின்று இடர் களைவதை முதல் கடமையாக செய்து வந்தார். சிவனடியார்க்கு தீங்கி விளைவிப்போரை தண்டிக்கும் பொருட்டு கையில் மழுவுடன் இருப்பார்.
அந்த ஊரிலே சிவனுக்கு சேவை செய்த சிவகாமியாண்டார் என்ற அடியவர், நீராடி, பூக்களை பூக்கூடையில் சேகரித்து ஆண்டவனுக்கு அற்பணிக்கும் பொருட்டு வந்து கொண்டிருந்தார். பு\கழ்சோழன் என்ற அரசரின் பட்டத்து யானை மிகுந்த அலங்காரத்துடன் பவனி வரும் வேளையில் மதம் கொண்டு பாகனுக்கு அடங்காமல் ஓடி, சிவகாமியாண்டாரின் கையிலுள்ள பூக்கூடையை தரையில் வீசியது. அதனை அலட்சியம் செய்த யானைப் பாகரும், அவ்விடத்தே விட்டு நகர, தம் இயலாமையால் வருந்தினார் சிவகாமியாண்டார். இதனை கண்ணுற்று துணுக்குற்ற எறிபத்த நாயனார், இறைவனுக்கு சூட்ட வேண்டிய மலரும், அவன் அடியவரும் மண்ணில் வீழ்ந்திருப்பதை காணச் சகியாமல், யானையையும் அதன் பாகரையும் வெட்டிச் சாய்த்தார்.
இச்செய்தி அறிந்த புகழ்சோழன் மிகுந்த சினம் கொண்டு தம் பட்டத்து யானையையும் பாகர்ககளுக்கும் தீங்கு செய்தவர் எவர் என்று தேடி அறிந்து திகைத்தார். அங்கே சிவனடியார் இருவர் நின்றிருப்பதைக் கண்டு நடந்தனவற்றை கேட்டறிந்து மனம் வெதும்பினார். சிவனடியார்களுக்கு தீங்கிழைத்த எம் யானையும் பாகனும் தவறு செய்தவர்களே ஆவர். இந்த சிறு தண்டனை போதாது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தானும் மடிந்து போக வேண்டுமெனக் கருதி , எறிபத்தரிடம் தமது வாளைக்கொண்டு தம்மையும் வீழ்த்தும்படி பணித்தார்.
இதைக் கேட்ட எறிபத்தர் துடித்தார். இப்படிப்பட்ட சிவபக்தனான புகழ்சோழனுக்கு தீங்கிழைத்தேனே என்று மிக்க மனம் வருந்தி, அவரது வாளால் தமது உயிரை எடுக்கத் துணிந்தார். இனியும் வாளாயிருப்பானோ இறைவன் ? உடன் தரிசனம் தந்து, உயிரிழந்த அனைவரையும் உயிர்ப்பித்து, சிவனடியார்களின் புகழ் சிறக்க தாம் ஆடிய விளையாடல் என்று அருள் கூர்ந்தார்.
இறைவனின் அடியவர்க்கொரு துயரெனில் அது இறைவனுக்கே நேரும் இழுக்கு என்றெண்ணி அங்கெல்லாம் தமது பங்களிப்பை தவறாது செய்து வந்து, சிறந்த தொண்டாற்றி, வினை முடிந்த பின் இறைவனடி சேர்ந்தார்.
யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
( எங்கெல்லாம் தர்மம் குறுகி அதர்மம் ஓங்குகிறதோ அங்கெல்லாம் நான் என்னை சிருஷ்டித்துக் கொள்வேன் )
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment