வியாஹ்ருதி: ;
சந்த்யா ;
த்விஜ-வ்ருந்த நிஷேவிதா ;
தத்வாசனா ;
தத் ;
த்வம்: ;
அயி: ;
பஞ்ச கோஷந்த்ர ஸ்திதா ;
()
வியாஹ்ருதி = வார்த்தைகள் - உரை - பேச்சு
வியாஹ்ருதி = ஏழுலகங்களின் திவ்யப் பெயர்களின் உச்சரிப்பு
(பூ: புவ: சுவ: மஹ ஜன: தப: சத்யம்)
* முதல் மூன்று உலகங்களின் பெயர்களே காயத்ரி மந்திரத்தின் முதல் மூன்று வார்த்தைகள்) ("ஓம் பூர் புவ: சுவஹ என்பது காயத்ரி மந்திரத்தின் துவக்கம்)
#421 வியாஹ்ருதி: = காயத்ரி மந்திரத்தின் தெய்வீக உச்சரிப்பில் உள்ளுரைபவள்
#421 வியாஹ்ருதி: = தெய்வீக சொற்களின் ஆற்றாலாய் திகழ்ந்து சிறப்பிப்பவள்
()
சந்த்யா = அந்தி அல்லது சந்தி எனும் பொருள் வழக்கு . இவ்விடத்தில், சந்தித்தல் - கூடுதல் - கலப்பு என்று கொள்ளலாம்
#422 சந்த்யா = ஜீவ-பரமாத்ம ஐக்கியத்தின் சாரமாகியவள் *
( ஜீவ-பரமாத்ம சங்கமத்துக்கு காரணமாக விளங்குபவள். )
()
த்விஜ = இரு பிறப்புடையோர்
வ்ருந்த = கூட்டம்
நிஷேவிதா = கௌரவிக்கப்படுதல் - உபசரிக்கபடுதல்
#423 த்விஜ வ்ருந்த நிஷேவிதா = உயர்ந்தோரால் துதித்தேற்றப்படுபவள் *
( த்விஜ என்பது இரு பிறப்புடையாரை குறிக்கும் சொல். ஒரு ஜீவன் பூவுலகில் கொணரும் ஸ்தூல உடலுக்கான பிறப்பை முதற் பிறப்பென்றும், பின்னர் இறைப்பாதையை நிர்ணயித்து அதன் வழி நடக்குங்கால் அதனை இரண்டாம் பிறப்பென்றும் கொள்வது மரபு. த்விஜ-வ்ருந்த எனும் சொல், பிறந்து பின் ஆன்மீகப் பயணத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெரியோர்கள் அத்தனை பேரையும் குறிக்கும். )
()
தத்வ = தத்துவங்கள்
ஆசனா - இருத்தல்
#424 தத்வாசனா = தத்துவங்களில் நிலைபெற்றிருப்பவள் *
( பஞ்ச பூதங்கள் , ஐந்து ஞானேந்திரியங்கள் , ஐந்து கர்மேந்திரியங்கள் , பஞ்ச-தன்மாத்திரைகள் அந்தகரணம் நான்கு ( மனம், புத்தி, அகங்காரம், சித்தம்) இவையே 24 ஆன்ம தத்துவங்களாக சொல்லப்படுகிறது )
()
தத் = அது
#425 தத் = அது(வும்) ஆனவள் - அதுவாக இருப்பவள் * (உயர் தத்துவமான பிரம்மம்)
( * அது என்பது சுட்டிக்காட்டபடும் "எதையும்" சார்த்தவள் - எல்லாமுமானவள் - உயர்ந்த தத்துவமான பரப்பிரம்மத்தை குறிக்கும் )
() த்வம் = நீ
#426 த்வம் = உன்னிலும் உள்ளொளிர்பவள் - நீயாகவும் இருப்பவள் *
( * உன்னிலிருப்பவள் . ' நீ ' எனும் சொல் அனைத்து ஜீவராசியையும் விளிக்கும் சொல். ஆகவே அனைத்துமானவள் )
()
அயி = மாதா
#427 அயி = பிரபஞ்சத்திற்கு அன்னையாகி அருள்பவள் *
(* பிரபஞ்சமே அவளிலிருந்து புறப்பட்ட துகளென்பதால், அனைத்திற்கும் தாய் )
()
பஞ்ச = ஐந்து
கோஷ = உறை - கோசம்
அந்தர = உள்ளில்
ஸ்திதா - நிலைபெற்று
#428 பஞ்ச கோஷாந்தர ஸ்திதா = பஞ்ச கோசங்களை ஊடுருவி உறைபவள் *
( *அன்னமய கோசம் (ஸ்தூல சரீரம்) ப்ராணமய கோசம், மனோமய கோசம் (சூக்ஷ்ம சரீரம்) விஞ்ஞானமய கோசம் , ஆனந்தமய கோசம் (காரண சரீரங்கள்) என்பனவாம். _
(தொடரும்)
Lalitha Sahasranama (421 - 428)
Vyahruthi;
Sandhya;
Dwija Vrinda Nishevitha;
Tatwasana;
Tat;
Tvam;
ayi;
Pancha Koshaanthra Sthitha ;
()
Vyaahruthi = words - speech
Vyaahruthi = mystical utterances of the name of seven worlds
(bhur bhuvah suvah mahah janah tapa sathyam)
(* Great Vyaahruthi are the first three worlds (bhur bhuvah suvah mentioned in Gayathri mantra))
#421 Vyaahruthi = Who presides the mystical utterances in Gayathri mantra
#421 Vyaahruthi = Who presides the sacred words - who is the power of sacred words
()
Sandhya = generally twilight. Here it may mean, union - juncture - meeting point
#422 Sandhya = She is the union of Jiva-Paramatma. *
(* Who forms the Integration of Jiva and Ishwara. Who is the cause of Mukthi of Bonded Jivas.)
()
Dwija = Twice born
Vrinda = bunch - cluster
Nishevitha = honoured -served
#423 Dvija-vrinda Nishevitha = Who is worshipped by the group of sacreds and the wise *
(* Dvija here means 'twice-born' Jivas. A Jiva is born once in the physical plane and born again when it moulds its path to seek the higher. Therefore Dvija-Vrndas are those who attune themselves to spiritual walk of life.)
()
Tatva = principles
aasana = abiding - stays
#424 Tatvasana = Who dwells or is present in the principles
(* five basic elements, five subtle elements (pancha thanmatras)
Gnaanendriyas, Karmendriyas, Antahkarana ( mind, intellect, ego and chit together called antahkarana) forms the 24 tatva elements)
#425 Tat = She who is That *
(*That embraces "everything" that can be referred / objectified )
()
Tvam = you
#426 Tvam = Who is you *
(* who resides in you. Everybeing is referred as "you"; who resides in every being. )
()
Ayi = Mother
#427 Ayi = Who is The Mother *
(* Mother of the entire universe; from whom everything sprung )
()
Pancha = five
KoSha = sheath
anthara = inside
Sthita = present
#428 Pancha Koshaanthara Sthitha = Who pervades the five sacred sheaths *
(* Aanandhamaya Kosha, (relating to Causal body) vigyaanamaya kosha, praanamaya kosha, manomaya kosha (corresponding to subtle body) and finally annamaya kosha (gross body))
(to continue)
No comments:
Post a Comment