( யோகினி ந்யாசம் என்ற தலைப்பின் கீழ் நாம் தியானிக்கவிருக்கும் நாமங்கள் குண்டலினி சக்கரத்தை பிரதிபலிக்கும் 'யோகினி' தேவதைகளை விவரிக்கும் பெயர்கள் . கீழிருக்கும் நாமங்கள் "டாகினீஸ்வரி" என்ற விஷுத்தி சக்கரத்தை வழி நடத்தும் யோகினியை துதிக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு சக்கரத்தை ஆளும் தேவதைகளையும் தியானிக்கவிருக்கிறோம்)
யோகினி ந்யாஸம்
விஷுத்திசக்ர நிலயா;
ஆரக்தவர்ணா;
த்ரிலோசனா;
கட்வாங்காதி ப்ரஹரணா;
வதனைக சமன்விதா;
பாயசான்ன ப்ரியா;
தவக்ஸ்தா;
பஷுலோக பயங்கரீ;
அம்ருதாதி மஹா ஷக்தி சம்வ்ருதா;
டாகினீஶ்வரீ;
()
விஷுத்தி சக்ர = ஐந்தாம் குண்டலினி சக்தி கேந்திரம் - தொண்டையில் இருக்கும் நீல நிற சக்தி கேந்திரம்
#475 விஷுத்தி சக்ர நிலயா = விஷுத்தியில் நிலைபெற்றிருப்பவள்
()
ஆரக்தா = செஞ்சந்தனம் ( i.e. சிவப்பு சந்தனம் - அடர் சிவப்பு இல்லாத இளஞ்சிவப்பு என்றும் கொள்ளலாம் )
#476 ஆரக்தவர்ணா = செஞ்சந்தன நிறம் உடையவள் (அடர் சிவப்பு அல்லாத மிதமான சிவப்பு)
#477 த்ரிலோசனா = மூன்று கண்களையுடையவள்
()
கட்வாங்க = மண்டையோட்டுடன் கூடிய தண்டாயுதம்
ஆதி = இத்யாதி - இதைப் போல (இவ்விடத்தில் பொருந்தி வரும் அர்த்தங்கள் இவை)
ப்ரஹரணா = ஏந்தியிருத்தல் - போராயுதங்கள் கொண்டிருத்தல்
#478 கட்வாங்காதி ப்ரஹரணா = கட்வாங்கம் போன்ற தண்டாயுதமும் மற்றைய ஆயுதங்களையும் (கபாலம் சூலம் ) ஏந்தி ஆயுத்தமாயிருப்பவள்
()
வதனைக = வதன-ஏக - ஒரு முகம்
சமன்விதா = கொண்டிருத்தல்
#479 வதனைக சமன்விதா = ஒரு முகமுடையவள்
()
பாயஸ = பாலில் வெந்த அரிசிச்சோறு
#480 பாயஸான்ன ப்ரியா = பாயசம் என்ற இனிப்பை விரும்பி ஏற்பவள் (பால் அன்னம்)
()
த்வசா - தவக் = தோல்
ஸ்தா = இருத்தல்
#481 த்வக்ஸ்தா = சருமத்தை, தொடு உணர்வை ஆக்ரமித்து வழிநடத்தும் தேவதை
()
பஷு = மிருகம் - மிருகத்தையொத்த - மிருக குணம்
லோக - மனிதர்கள் - உலகம் - மனிதகுலம்
பயங்கரி = பயங்கரமாக இருப்பவள்
#482 பஷுலோக பயங்கரி = மிருக குணைத்தை உடையவர்களுக்கு பயங்கரமானவள் ie. அஞ்ஞானத்தில் இருப்பவர்களுக்கும் இகலோக சுகங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கும் மருட்சியளிப்பவள்.
()
சம்வ்ருதா = சூழப்படுதல் - பாதுகாத்தல் - மூடியிருத்தல்
#483 அம்ருதாதி மஹாஷக்தி சம்வ்ருதா = அம்ருதா, கரிஷிணி முதலிய மஹாஷக்திகளை வழிநடத்தி பாதுகாப்பவள் - அவர்களால் சூழப்பட்டிருப்பவள் *
* மஹாஷக்திகள் அம்ருதா, கர்ஷிணி, ஊர்த்வா, உமா, இந்திராணி, ஈசானி, கேசி முதலியவர்களை வழிநடத்தும் யோகினி
#484 டாகினீஶ்வரீ = விஷுத்தி சக்கரத்தின் தேவதை, டாகினீஶ்வரீ.
(தொடரும்)
Lalitha Sahasranama (475 -484)
(Naamas under "yogini Nyasam" talks about presiding 'yoginis' represented in kundalini chakras. First we are meditating on Vishudhi chakra's presiding deity "Daakineeshvari" continued by other yoginis)
Yogini Nyasam
VishudhiChakra Nilaya;
ArakthavarNa;
TriLochana;
khatvangadhi praharana;
vadhanaika Samanvitha;
Paayasanna priya;
Twakshtha;
Pashuloka bayankari;
Amruthaadhi Maha Shakthi SamvRRitha;
Daakineeshvari;
() Vishudhi Chakra = Fifth primary chakra; the Throat chakra; Chakra is blue in color.
#475 Vishudhi Chakra Nilaya = One who resides in Vishudhi Chakra
() Araktha = red sandalwood ie. milder red
#476 ArakthavarNa = Whose complexion is that of red sandalwood ie milder red
#477 Trilochana = Who has three eyes
() Khatvanga = a club or staff with a skull on top
Aadhi = and so on - Et cetera i.e etc (here in this context)
Praharana = to combat - a carriage box (is armed with)
#478 Khatvangadhi praharana = Who is armed with club and other weapons / who combats with club and other weapons
() Vadhanaika = Vadhana-Eka - Single face
Samanvitha = to possess
#479 Vadhanaika samanvitha = Who has a single face
() Paayasa = Rice boiled in milk
#480 Payasanna priya = Who is fond of sweetrice ( called "paayasam")
() Tvacha / Tvag = Skin
Stha = to reside - is present
#481 Twakstha = Who presides over the skin (organ of touch)
() Pashu = Animal - beastly
loka = men - world - human race
Bhayankari = who is fearful
#482 Pashuloka Bhayankari = Who is fearful for men who are animalistic - fearful for men who are ignorant - who are drowned in materialistic needs.
() Samvrrtha = Guarded or restrained - enclosed or enveloped - surrounded
#483 Amruthaadhi MahaShakthi Samavrritha = Who is surrounded by Mahashakthis - Who guards, rules or presides over these MahaShakthis. *
* Mahashakthis are namely Amrutha, Karshini, Urdwa, Uma, Indrani, Easani, Kesi
#484 Daakineeshvari = Daakineeshwari who is the presiding yogini of Vishudhi chakra
(to continue)
என்னிடமன்னைக்கு ஆயிரம் என்னு தமிழ் புத்தகமிருந்தது லலிதா சகஸ்ர நாமம்தமிழில் என்று நினைக்கிறேன் அப்புத்தகம் இப்போது காண வில்லை
ReplyDeleteஅப்படியா சார். தமிழில் விளக்கம் இணையதளத்தில் நான் தேடிய வரை கிடைக்கவில்லை.
ReplyDelete